Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மூதாட்டி கொலை வழக்கு.. இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்.. சேலத்தில் பரபரப்பு!

salem woman murder case : சேலம் மாவட்டத்தில் மூதாட்டி கொல்லப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட நபரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். சங்ககிரி மலை அடிவாரத்தில் நரேஷ் என்பவரை பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கியதால் சுட்டுப் பிடித்துள்ளனர். இதில், உதவி ஆய்வாளர் விஜயராகவன், காவலர் செல்வக்குமாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மூதாட்டி கொலை வழக்கு.. இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்.. சேலத்தில் பரபரப்பு!
மாதிரிப்படம்Image Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 24 May 2025 08:48 AM

சேலம்,  மே 24 : சேலம் மாவட்டத்தில் மூதாட்டி கொல்லப்பட்ட வழக்கில்  (salem elderly women murder) தொடர்புடைய நபரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். சங்ககிரி மலை அடிவாரத்தில் நரேஷ் என்பவரை பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கியதால் சுட்டுப் பிடித்துள்ளனர். போலீசாரை நரேஷ் கத்தியால் வெட்டியதில் உதவி ஆய்வாளர் விஜயராகவன், காவலர் செல்வக்குமாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் 68 வயதான சரஸ்வதி. இவர் விவசாயம் செய்து வந்தார். 2025 மே 20ஆம் தேதி மாடு மேய்ச்சலுக்காக மூதாட்டி சரஸ்வதி, மதிய நேரத்தில் சென்றிருக்கிறார். ஆனால், மூதாட்டி இரவு நேரம் ஆகியம் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால், அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். மேலும், அவரது விவசாய நிலத்திலும் தேடினர்.

சேலம் மூதாட்டி கொலை வழக்கு

அப்போது, மூதாட்டி ரத்து காயங்களுடன் சடலமாக விவசாய நிலத்தில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் ஆய்வு செய்ததில் மூதாட்டியின் நகைகள் பறிக்கப்பட்டது தெரியவந்தது.

அதாவது, மூதாட்டியின் செயின், காதில் அணிந்திருந்த தங்க தோடு, தங்க மூக்குத்தி பறிக்கப்பட்டது தெரிந்தது. மேலும், மூதாட்டி, காது, மூக்கு அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து, மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டனர். அதோடு, மேலும், இந்த கொலை வழக்கு தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அப்போது, இந்த கொலையில் ஈடுபட்ட முக்கிய நபர் நரேஷ் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் அவரை தீவிரமாக தேடினர்.

இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்

அப்போது, அவர் சங்ககிரி மலை அடிவாரத்தில் இருப்பது தெரியவந்தது.  இதனை அடுத்து,  சங்ககரி மலை அடிவாரத்தில் நரேஷை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, அவர் போலீசார் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்றார். இதனை அடுத்து, போலீசார் அவரை காலில் சுட்டுப் பிடித்துள்ளனர்.

போலீசாரை நரேஷ் கத்தியால் வெட்டியதில் உதவி ஆய்வாளர் விஜயராகவன், காவலர் செல்வக்குமாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் சிறு காயங்களுடன் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும், நரேஷும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்.  இந்த கொலையில்  தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.

 

'STR 50' படத்தில் திருநங்கை வேடத்தில் சிம்பு நடிக்கிறாரா?
'STR 50' படத்தில் திருநங்கை வேடத்தில் சிம்பு நடிக்கிறாரா?...
ஆதாரில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி?
ஆதாரில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி?...
காலையில் எழுந்திருக்கும் போதே உடல் சோர்வா? 5 முக்கிய காரணங்கள்!
காலையில் எழுந்திருக்கும் போதே உடல் சோர்வா? 5 முக்கிய காரணங்கள்!...
வட்டி மட்டுமே ரூ.89,989 கிடைக்கும் - அஞ்சலக FD திட்டம்!
வட்டி மட்டுமே ரூ.89,989 கிடைக்கும் - அஞ்சலக FD திட்டம்!...
”ED-க்கும், மோடிக்கும் பயப்பட மாட்டோம்" துணை உதயநிதி ஸ்டாலின்
”ED-க்கும், மோடிக்கும் பயப்பட மாட்டோம்
பாஜக-திமுக அணிக்கு பின்னணி உள்ளதா? – சீமான் கேள்வி
பாஜக-திமுக அணிக்கு பின்னணி உள்ளதா? – சீமான் கேள்வி...
அறைக்குள் நுழைந்த ராஜ நாகத்தை அசால்டாக கையாண்ட நபர்!
அறைக்குள் நுழைந்த ராஜ நாகத்தை அசால்டாக கையாண்ட நபர்!...
இணையத்தில் மாமன் படம்.. உழைப்பை மதிக்குமாறு சூரி வேண்டுகோள்!
இணையத்தில் மாமன் படம்.. உழைப்பை மதிக்குமாறு சூரி வேண்டுகோள்!...
சனி பகவானை மகிழ்விக்க என்ன செய்யலாம்? - ஆன்மிக வழிகள் இதோ!
சனி பகவானை மகிழ்விக்க என்ன செய்யலாம்? - ஆன்மிக வழிகள் இதோ!...
கேரளாவில் முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவமழை!
கேரளாவில் முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவமழை!...
லிப்ஸ்டிக் போடுவதற்கு முன் இதை பயன்படுத்துங்க...
லிப்ஸ்டிக் போடுவதற்கு முன் இதை பயன்படுத்துங்க......