Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காதல் முறிந்து… கொலை விழுந்தது: வேலூரில் விட்டு விலகிய காதலியை அடித்தே கொன்ற காதலன்..!

Vellore Double Homicide: வேலூரைச் சேர்ந்த சபீனாபானு என்பவர், காதல் தோல்வியால் மனமுடைந்த முன்னாள் காதலரால் கொலை செய்யப்பட்டார். அவரது காதலன் சுரேஷ், சபீனாவின் பெற்றோரையும் தாக்கிய பின், சபீனாவைக் கொன்று, பின்னர் தானும் விபரீத முடிவை செய்து கொண்டார். இந்த இரட்டை கொலை சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் முறிந்து… கொலை விழுந்தது: வேலூரில் விட்டு விலகிய காதலியை அடித்தே கொன்ற காதலன்..!
வேலூரில் காதலியைக் கொன்றபின் விபரீத முடிவெடுத்த இளைஞர்Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 24 May 2025 08:37 AM

வேலூர் மே 24: வேலூரைச் (Vellore) சேர்ந்த சபீனாபானு, கணவனை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார்.
தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்த்த அவர், அதே இடத்தில் பணியாற்றிய சுரேஷுடன் காதலில் இருந்தார். பிறகு சபீனா (Sabeena) பேச மறுத்ததால் கோபமடைந்த சுரேஷ் (Suresh) , இரவில் அவரது வீட்டில் நுழைந்தார். தகராறின்போது சபீனாவின் பெற்றோரையும், பின்னர் சபீனாவையும் இரும்புக் கம்பியால் தாக்கினார். சபீனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; சுரேஷ் பின்னர் விபரீத முடிவை எடுத்துக்  கொண்டார். இந்த இரட்டைக் உயிரிழப்பு வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் தனது முன்னாள் காதலரால் கொலை

வேலூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தனது முன்னாள் காதலரால் கொலை செய்யப்பட்டதுடன், பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம், மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னஅல்லாபுரம், கே.கே. நகர், திரவுபதியம்மன் கோயில் 3-வது தெருவைச் சேர்ந்தவர் சபீனாபானு (வயது 33). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கொணவட்டத்தைச் சேர்ந்த ஜான்பாஷாவை திருமணம் செய்தார். குழந்தை இல்லாததுடன் கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த 2 வருடங்களாக சபீனா தனியாக தன் பெற்றோருடன் வசித்து வந்தார்.

சதுப்பேரியில் உள்ள ஒரு தனியார் ஷூ நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த சபீனா, அந்நிறுவனத்தில் வேலை பார்த்த வேலூர் விருபாட்சிபுரம் நேதாஜி தெருவைச் சேர்ந்த சுரேஷ் (35) என்பவருடன் பழக்கம் வளர்ந்தது. இது காதலாக மாறியதுடன், இருவரும் திருமணம் செய்வது குறித்து பேசிவந்தனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக சுரேஷ் வேலைக்குச் செல்லவில்லை. மேலும், சபீனா அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இது சுரேஷை மன வேதனையில் ஆழ்த்தியது.

இரவில் அத்துமீறல் – இரும்புக் கம்பியால் தாக்குதல்

2025 மே 22 வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் சபீனாவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த சுரேஷ், சபீனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தன் பையில் மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியால் தாக்க முயன்ற போது, அவரைத் தடுக்க வந்த சபீனாவின் தந்தை சிராஜூதீன் மற்றும் தாயார் ஆஜிரா ஆகியோரை கம்பியால் தாக்கினார். இருவரும் படுகாயமடைந்து மயங்கி விழுந்தனர்.

சாலையில் சாய்ந்த காதல்

இதனைப் பார்த்த சபீனா தப்பியோடி, வீட்டு அருகிலிருந்த மின்கம்பம் பகுதியில் சுரேஷால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். பின்னர் அவரை இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கியதால், சம்பவ இடத்திலேயே சபீனா உயிரிழந்தார்.

விபரீத முடிவை எடுத்த காதலன்

சபீனாவை கொலை செய்த பின், தன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற சுரேஷின் கைப்பேசி எண்ணை பயன்படுத்தி, போலீசார் விருபாட்சிபுரத்தில் உள்ள அவரது வீட்டை கண்டுபிடித்து சென்றனர். அங்கு சுரேஷ், தன் அறையில் விபரீத முடிவை எடுத்தது தெரியவந்தது.

அதிர்ச்சியில் வேலூர்

சபீனாவின் உடல் உடற்கூறாய்விற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அவரது பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுரேஷின் உடலும் கைப்பற்றி அனுப்பப்பட்டது. சம்பவம் தொடர்பாக பாகாயம் மற்றும் வடக்கு காவல் துறைகள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இரண்டு குடும்பங்களையும் வாட்டிய இந்த சம்பவம், வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'STR 50' படத்தில் திருநங்கை வேடத்தில் சிம்பு நடிக்கிறாரா?
'STR 50' படத்தில் திருநங்கை வேடத்தில் சிம்பு நடிக்கிறாரா?...
ஆதாரில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி?
ஆதாரில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி?...
காலையில் எழுந்திருக்கும் போதே உடல் சோர்வா? 5 முக்கிய காரணங்கள்!
காலையில் எழுந்திருக்கும் போதே உடல் சோர்வா? 5 முக்கிய காரணங்கள்!...
வட்டி மட்டுமே ரூ.89,989 கிடைக்கும் - அஞ்சலக FD திட்டம்!
வட்டி மட்டுமே ரூ.89,989 கிடைக்கும் - அஞ்சலக FD திட்டம்!...
”ED-க்கும், மோடிக்கும் பயப்பட மாட்டோம்" துணை உதயநிதி ஸ்டாலின்
”ED-க்கும், மோடிக்கும் பயப்பட மாட்டோம்
பாஜக-திமுக அணிக்கு பின்னணி உள்ளதா? – சீமான் கேள்வி
பாஜக-திமுக அணிக்கு பின்னணி உள்ளதா? – சீமான் கேள்வி...
அறைக்குள் நுழைந்த ராஜ நாகத்தை அசால்டாக கையாண்ட நபர்!
அறைக்குள் நுழைந்த ராஜ நாகத்தை அசால்டாக கையாண்ட நபர்!...
இணையத்தில் மாமன் படம்.. உழைப்பை மதிக்குமாறு சூரி வேண்டுகோள்!
இணையத்தில் மாமன் படம்.. உழைப்பை மதிக்குமாறு சூரி வேண்டுகோள்!...
சனி பகவானை மகிழ்விக்க என்ன செய்யலாம்? - ஆன்மிக வழிகள் இதோ!
சனி பகவானை மகிழ்விக்க என்ன செய்யலாம்? - ஆன்மிக வழிகள் இதோ!...
கேரளாவில் முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவமழை!
கேரளாவில் முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவமழை!...
லிப்ஸ்டிக் போடுவதற்கு முன் இதை பயன்படுத்துங்க...
லிப்ஸ்டிக் போடுவதற்கு முன் இதை பயன்படுத்துங்க......