India – Pakistan : இந்தியா உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறோம்.. பாகிஸ்தான் அறிவிப்பு!
Pakistan Reaffirms Ceasefire with India | இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், இந்தியா உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தாங்கள் உறுதியாக உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் என்ன கூறியுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை, மே 24 : இந்தியா உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் (Ceasefire) உறுதியாக உள்ளதாக பாகிஸ்தான் (Pakistan) அறிவித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவி வந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவி வரும் நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்வதாக இந்திய அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி – ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்த இந்தியா
ஜம்மு மற்றும் காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூர துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதன் காரணமாக ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்த இந்திய அரசு, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்தது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இதற்கு பாகிஸ்தானும் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவின் சில பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக இரு நாடுகளின் எல்லைகளிலும் பதற்றம் நிலவியது.
இந்த நிலையில், மே 10, 2025 அன்று இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. அதன்படி, அன்று மாலை 5 மனி முதல் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்வதாக இரு நாடுகளும் அறிவித்தன. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தாலும், பயங்கரவாதிகளை அழிப்பதில் இலக்கு கொண்டிருக்கும் இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் தொடர்வதாக தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. மேலும், பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்று உறுதி பூண்டுள்ளது.
இந்தியா உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக உள்ளோம் – பாகிஸ்தான்
இந்தியா உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதில் கூறியுள்ளபடி உண்மையாக நடந்துக்கொள்வோம். போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக கடைபிடிக்கிறோம். இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து அமலில் உள்ளது. எனவே, போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்வதற்கு காலாவதி தேதி தேவையில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.