முகூர்த்த நேரத்திற்கு முன்பு போன் செய்த காதலன்.. கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்!
Bride cancelled wedding in last minute in Karnataka | ஒரு திருமணத்தை நடத்துவது என்பது மிகவும் சவாலான ஒன்று. அப்படி பல சவால்களை தாண்டி ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தை மணமகள் கடைசி நேரத்தில் நிறுத்தியுள்ளார். இதனால் மணமகன் உட்பட திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

கர்நாடகா, மே 24 : கர்நாடகாவில் (Karnataka) மணமேடை வரை சென்ற மணகள் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறியதால் மணமகன் அதிர்ச்சியடைந்தார். திருமணத்திற்கு முன்னதாக மணமளிடம் அவரது காதலன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசிய நிலையில், மனம் மாறிய மணமகள் கடைசி நேரத்தில் இந்த முடிவை எடுத்துள்ளார். இதனால் மணமகன் வீட்டார் மற்றும் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், கடைசி நேரத்தில் மணமகள் மனம் மாறியதால் என்ன நடந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மனிதர்கள் வாழ்வில் மிக முக்கிய நிகழ்வாக உள்ள திருமணம்
திருமணம் என்பது மனிதர்கள் வாழ்வில் மிக முக்கிய நிகழ்வாக உள்ளது. ஒரு மனிதன் தனது பெற்றோர் உடன் வாழும் வாழ்நாளை விட தனது வாழ்க்கை துணையுடன் வாழப்போகும் வாழ்நாள் அதிகம். தோராயமாக ஒரு மனிதன் தனது வாழ்க்கை துணையுடன் 40 முதல் 50 ஆண்டுகள் வரை வாழ்கின்றான். இந்த நிலையில், தங்களது வாழ்நாள் முழுவதும் பயணிக்கும் தங்களது வாழ்க்கை துணையை அவர்கள் சரியாக தேர்வு செய்ய வேண்டியது மிக அவசியமாக உள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணங்கள் நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் காலப்போக்கில் தற்போது காதல் திருமணங்கள் அதிகரித்துள்ளன. இருப்பினும சிலர் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களை செய்து கொள்கின்றனர். அந்த வகையில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு தயாரான மணமகனுக்கு கடைசி நேரத்தில் மணமகள் அதிர்ச்சி அளித்துள்ளார்.
கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள் – மணமகன் அதிர்ச்சி
கர்நாடகாவில் திருமணம் ஒன்று நடைபெறுவதாக இருந்துள்ளது. அப்போது மணமேடை வரை சென்ற மணமகள், தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன், மணமகளிடம் அது குறித்து பேசியுள்ளார். திருமணத்தின் முகூர்த்த நேரத்திற்கு முன்னதாக மணமகளின் காதலன் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனால் மனம் மாறிய அந்த மணமகள் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பதாக மணமகனிடம் கூறியுள்ளார்.
இதனால் திருமணத்தை நிறுத்திய மனமகன், மணமகள் வீட்டாரிடம் அது குறித்து பேசியுள்ளார். இரு வீட்டாரும் கலந்து பேசியதில் திருமணத்திற்கான செலவை மட்டும் மணமகள் வீட்டார், மணமகன் வீட்டாருக்கு வழங்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.