Shikhar Dhawan New Love: காதலில் விழுந்த ஷிகர் தவான்.. புகைப்படத்துடன் வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்.. யார் அந்த பெண்?

Shikhar Dhawan Relationship With Sophie Shine: ஷிகர் தவான் தனது புதிய காதல் சோபி ஷைனுடன் உள்ள உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆயிஷா முகர்ஜியுடனான விவாகரத்துக்குப் பின், அபுதாபியைச் சேர்ந்த சோபி ஷைனுடன் இணைந்து வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். சமீபத்திய சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது இருவரும் ஒன்றாகக் கண்டறியப்பட்டனர். இன்ஸ்டாகிராமில் சோபி ஷைன் பகிர்ந்த புகைப்படம் இவர்களின் காதலை உறுதிப்படுத்தியுள்ளது.

Shikhar Dhawan New Love: காதலில் விழுந்த ஷிகர் தவான்.. புகைப்படத்துடன் வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்.. யார் அந்த பெண்?

ஷிகர் தவான் - சோபி ஷைன்

Published: 

01 May 2025 21:00 PM

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் (Shikhar Dhawan) இன்று அதாவது 2025 மே 1ம் தேதி மிக பெரிய அப்டேட் ஒன்றை வெளியிட்டார். அதில், தனது காதல் வாழ்க்கை குறித்து தொடர்ந்து வந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆயிஷா முகர்ஜியிடமிருந்து (Ayesha Mukherjee) விவாகரத்து பெற்ற பிறகு, ஷிகர் தவான் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். கடந்த சில மாதங்களாகவே அபுதாபியை சேர்ந்த ஐரிஷ் தொழில்முறை நிபுணர் சோபி ஷைனுடனான காதலை ஷிகர் தவான் வெளிப்படுத்தியுள்ளார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

2025 சாம்பியன் டிராபியின்போது ஷிகர் தாவனும், சோபியும் ஒன்றாக கேமராவில் சிக்கினர். இருவரும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியை ஒன்றாக ரசித்து கொண்டிருந்தனர். அப்போது முதல் யார் இந்த பெண் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழ தொடங்கியது. 2026 மே 1ம் தேதியான இன்று சோபி ஷைன் இன்ஸ்டாகிராமில் ஷிகர் தவானுடன் இணைந்து ஒரு படத்தை பகிர்ந்தார். அந்த புகைப்படத்திற்கு மேல் “என் காதல்” என்று தலைப்பிட்டிருந்தார். இதன்மூலம், இவர்களது காதல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

யார் இந்த சோபி ஷைன்..?

சோபி ஷைன் அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர். தற்போது தயாரிப்பு ஆலோசகராக பணியாற்றி வருகிறார். லிமெரிக் தொழில்நுட்ப நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் மற்றும் மேலாண்மையில் பட்டம் பெற்ற இவர், காசில்ராய் கல்லூரியிலும் பயின்றதாக கூறப்படுகிறது. தற்போது, சோபி ஷைன் அபுதாபியில் நார்தர்ன் டிரஸ்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 2வது துணை தலைவராக உள்ளார்.

ஷிகர் தவான்-ஆயிஷா முகர்ஜி விவாகரத்து:

ஷிகர் தவான் ஆயிஷா முகர்ஜியை மணந்தார். ஆயிஷா ஷிகர் தவானை விட 12 வயது மூத்தவர். ஆயிஷாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மகள்கள் இருந்தநிலையில், ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த ஆயிஷாவை ஷிகர் தவான் கடந்த 2012ம் ஆண்டு மணந்தார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த தம்பதிக்கு ஜோராவர் என்ற மகன் பிறந்தார். இருப்பினும், ஷிகரும் ஆயிஷாவும் கடந்த ஆண்டு விவாகரத்து செய்தனர். இதற்குக் காரணம், ஆயிஷா தவான் மற்றும் அவரது குடும்பத்துடன் இந்தியாவில் தங்குவதாக கல்யாணத்திற்கு முன்பு உறுதியளித்திருந்தார். ஆனால் பின்னர் அவர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று அங்கு வசிக்கத் தொடங்கினார். இந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.

ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

கடந்த 2024ம் ஆண்டு ஷிகர் தவான் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். இந்திய அணிக்காக ஷிகர் தவான் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் 5 அரைசதம் மற்றும் 7 சதங்களுடன் 2,315 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 167 போட்டிகளில் விளையாடி 39 அரைசதம் மற்றும் 17 சதங்களுடன் 6,783 ரன்களும், 68 டி20 போட்டிகளில் விளையாடி 1759 ரன்களும் எடுத்துள்ளார்.

Related Stories
Vaibhav Suryavanshi : இந்த முறை டக் அவுட்.. சூர்யவன்ஷியை துரத்தும் அழுத்தம்? பாலிவுட் நடிகர் சொன்ன குட் பாய்ண்ட்!
IPL 2025: கரை சேர துடிக்கும் ஹைதராபாத்..! தாக்குதலை தொடுக்குமா குஜராத்..? பிட்ச் எப்படி..?
RR vs MI: பேட்டிங்கில் ரன் மழை.. விக்கெட்டில் வேட்டை.. ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை ராஜ நடை!
IPL 2025 Playoffs: பிளே ஆஃப் கனவுடன் பெங்களூரு, கொல்கத்தா.. வெற்றி பெற்று ஆப்பு வைக்குமா சென்னை..?
Virat Kohli’s Favorite Song: இந்தியும் இல்லை! பஞ்சாபியும் இல்லை.. இந்த தமிழ் சாங்தான் என்னுடைய பேவரைட்.. ஆச்சர்யம் கொடுத்த விராட் கோலி!
CSK IPL 2025 Playoff Exit: பிளேஆஃப்களில் இருந்து வெளியேறிய சிஎஸ்கே.. விரக்தியை வெளிப்படுத்திய தோனி.. என்ன சொன்னார்..?