Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ravindra Jadeja: 38 மாதங்கள்! 1152 நாட்கள்! ஆல்ரவுண்டர் பட்டியலில் தொடர்ந்து நம்பர் 1.. புதிய சாதனை படைத்த ஜடேஜா!

ICC Test All-Rounder: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் 1152 நாட்களாக முதலிடத்தில் இருந்து புதிய சாதனை படைத்துள்ளார். இதுவரை எந்த வீரரும் இவ்வளவு காலம் முதலிடத்தில் இருந்ததில்லை. ஜடேஜாவின் தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடு இந்திய அணிக்கு பெரும் பலமாக அமையும்.

Ravindra Jadeja: 38 மாதங்கள்! 1152 நாட்கள்! ஆல்ரவுண்டர் பட்டியலில் தொடர்ந்து நம்பர் 1.. புதிய சாதனை படைத்த ஜடேஜா!
ரவீந்திர ஜடேஜாImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 14 May 2025 16:30 PM

இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டு ஜாம்பவான்களான ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் விராட் கோலி (Virat Kohli)  ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். அதேநேரத்தில், மற்றொரு இந்திய ஜாம்பவானான நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்துள்ளது. அது எந்த அளவிற்கு சாதனை என்றால் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் அவர் சாதித்த ஒன்றை, வேறு எந்த கிரிக்கெட் வீரராலும் செய்ய முடியாத அளவிற்கு செய்துள்ளார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை செய்த முதல் வீரர் என்ற பெருமையையும் ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார். அப்படி என்ன சாதனை என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு:

சமீபத்தில் ஐசிசியானது டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில், டெஸ்ட் ஆண்கள் ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் உள்ளார். இவர் நீண்டகாலமாக தொடர்ந்து டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஜடேஜாவை போல எந்த வொரு வீரரும் இவ்வளவு காலம் தரவரிசையில் முதலிடத்தில் இருந்ததில்லை.

மார்ச் 9, 2022 அன்று ரவீந்திர ஜடேஜா வெஸ்ட் இண்டீஸ் ஜேசன் ஹோல்டரை முந்தி உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் ஆல்ரவுண்டரானார். அதன் பின்னர் 38 மாதங்கள் ஆகிவிட்டன, ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து 1152 நாட்கள் முதலிடத்தில் இருக்கிறார். 2022 ஆம் ஆண்டில் ரவீந்திர ஜடேஜா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் ஆல்ரவுண்டரானபோது, ​​2 முறையாக முதலிடத்தை பிடித்து, தற்போது வரை முதலிடத்தில் உள்ளார். கடந்த 2017ம் ஆண்டு ரவீந்திர ஜடேஜா முதலிடத்திற்கு முன்னேற்றி ஒரு வாரம் மட்டுமே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் முதலிடம்:

ரவீந்திர ஜடேஜாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

ரவீந்திர ஜடேஜா இதுவரை இந்திய அணிக்காக 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 35 சராசரியுடன் 3,370 ரன்கள் எடுத்துள்ளார். இந்த 80 டெஸ்ட் போட்டிகளில் 330 பவுண்டரிகளையும், 69 சிக்ஸர்களையும் அடித்துள்ளார். ஜடேஜாவின் டெஸ்ட் வாழ்க்கையில் அதிகபட்சமாக 175 ரன்கள் அடித்துள்ளார். மேலும், தனது பந்துவீச்சு மூலம் 323 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அனுபவம் பெரும் உதவியாக இருக்கும். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிற்கு பிறகு ஜடேஜாதான் இந்திய அணியின் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்.