TVK Vijay: தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து.. ஜாதியை சொல்லி கிண்டலடித்த நெட்டிசன்.. அஸ்வின் தக்க பதிலடி!

Ravichandran Ashwin: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு வாழ்த்து பதிவிட்டதற்கான ரவிசந்திரன் அஸ்வினை கடுமையான வார்த்தைகளால் கிண்டல் செய்தனர். அதில்,  அஸ்வின் திராவிட ஆட்சிக்கு அஞ்சும் ஒரு பிராமணர் என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.  வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்ட அஸ்வின், தன்னைக் கிண்டல் செய்தவருக்கு அதே பாணியில் பதிலளித்தார்.

TVK Vijay: தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து.. ஜாதியை சொல்லி கிண்டலடித்த நெட்டிசன்.. அஸ்வின் தக்க பதிலடி!

ரவிசந்திரன் அஸ்வின் - தவெக தலைவர் விஜய்

Published: 

07 May 2026 15:04 PM

 IST

தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்தியா சினிமாவிலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள விஜயின் (TVK Vijay) தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், தனது முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளில் அதிகபட்சமாக 108 இடங்களை வென்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு  இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானும், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். இதற்கிடையில், ஒரு ரசிகர் சமூக வலைதளத்தில் அஸ்வினைக் கேலி செய்ய முயன்றார். இருப்பினும், அஸ்வின் அளித்த அழுத்தமான பதில், கேலி செய்தவரின் வாயை அடைக்க செய்தது.

ரவிச்சந்திரன் அஸ்வின், தளபதி விஜய்யின் இந்த மாபெரும் வெற்றிக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து, “இந்த சிறப்பான முடிவுகளுக்காக தளபதி விஜய்க்கும் அவரது கட்சிக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள். நான் உங்கள் தீவிர ரசிகனாக இருப்பதையும் தாண்டி, நான் பின்பற்ற விரும்பும் பாதையைக் கொண்ட ஒரு தலைவரின் பின்தொடர்பவராக மாற விரும்புகிறேன்” என்று எழுதியுள்ளார்.

ALSO READ: தவெக ’விசில் போடு’ மந்திரம்.. விஜயின் தேர்தல் வெற்றி.. தோனியும் சிஎஸ்கேவும் ஒரு காரணமா..?

அஸ்வினின் பதிவிற்கு கிண்டல்..

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு வாழ்த்து பதிவிட்டதற்கான ரவிசந்திரன் அஸ்வினை கடுமையான வார்த்தைகளால் கிண்டல் செய்தனர். அதில்,  அஸ்வின் திராவிட ஆட்சிக்கு அஞ்சும் ஒரு பிராமணர் என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.  வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்ட அஸ்வின், தன்னைக் கிண்டல் செய்தவருக்கு அதே பாணியில் பதிலளித்தார்.

இதுகுறித்து பதிவிட்டிருந்த அஸ்வின்,”இதை நான் முன்பே சொல்லியிருக்கிறேன், மீண்டும் சொல்கிறேன். நான் எந்த குடும்பத்தில் பிறந்தேன் என்பதில் எனக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. நல்லவேளையாக, எனக்குச் சிறந்த பெற்றோர் அமைந்தனர். தலைமைத்துவம் என்பது மற்றவர்களின் போராட்டங்களைப் புரிந்துகொண்டு, அவர்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் சிரமங்களைக் கடந்து செல்வதாகும். இதைத்தான் என் பெற்றோரும் வழிகாட்டிகளும் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நாம் பரம்பரை, சாதி பற்றிப் பேசுவதை நிறுத்தும் நாள் வரை நான் வாழ விரும்புகிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்திய சன்ரைசர்ஸ்.. ஐபிஎல் புள்ளி பட்டியல் மாற்றம் என்ன?

தமிழ்நாடு அரசியலில் வரலாறு படைத்த தவெக தலைவர் விஜய்:

தளபதி விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. இதில், தவெக சார்பில் அனைத்து 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தேர்தல் களத்தை சந்தித்தார் விஜய். அதேபோல், தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவையாக இருந்தன. தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று அசத்தியது. இருப்பினும், தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பெறுவதற்கு  10 இடங்கள் தேவையாக இருந்தது. தற்போது, காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளதால் 113 இடங்களை பெற்றுள்ளது. அதேநேரத்தில், இன்னும் 5க்கும் அதிகமான இடங்களை தமிழக வெற்றிக் கழகம் பெற்றால் மட்டுமே தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமையும்.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..