MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த எம்.எஸ்.தோனி.. ஐபிஎல்லில் இருந்து ஓய்வா..? வெளியான அதிர்ச்சிகர தகவல்!
Chennai Super Kings: எம்.எஸ். தோனியின் ஐபிஎல் 2025 சீசன் கடைசி போட்டியாக இன்று (மே 25) நடைபெறும் குஜராத் டைட்டன்ஸ் எதிரான போட்டி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தோனியின் ஓய்வு குறித்த ஊகங்கள் அதிகரித்துள்ளன. இதுவரை 13 போட்டிகளில் 196 ரன்கள் எடுத்த தோனி, தனது எதிர்காலம் குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். அவரது கடைசி ஐபிஎல் போட்டி இதுவாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது.

இந்தியன் பீரிமியர் லீக்கில் (IPL) புதிய சீசன் தொடங்கும்போதோ அல்லது முடியும்போதோ எம்.எஸ்.தோனி (MS Dhoni) என்ற பெயர் அடிக்கடி ஒலிக்க தொடங்கும். அதில், பெரும்பாலும் தோனியின் ஓய்வை பற்றியதாக இருக்கும். 43 வயதான எம்.எஸ்.தோனி ஐபிஎல் 2025 சீசனில் இன்று அதாவது 2025 மே 25ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடவுள்ளார். இது தோனிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்கும் ஐபிஎல் 2025 சீசனின் கடைசி போட்டியாகும். ஒருவேளை இது ஐபிஎல்லில் தோனியின் கடைசியாக போட்டியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே பிளே ஆஃப் பந்தயத்திலிருந்து வெளியேறிவிட்டது. அதேநேரத்தில், ஐபிஎல் 2025ல் இதுவரை தோனி 13 போட்டிகளில் விளையாடி 196 ரன்கள் எடுத்துள்ளார். இந்தநிலையில், தோனிக்கு இது கடைசி போட்டியாக இருக்கலாம்.
தோனிக்கு கடைசி போட்டியா..?
ஐபிஎல் 2025 சீசனில் இன்று அதாவது 2025 மே 25ம் தேதி எம்.எஸ்.தோனி ஐபிஎல்லில் தனது கடைசி போட்டியை விளையாட போகிரார். அதாவது, கேப்டனாக தோனிக்கு இது கடைசி போட்டியாக இருக்கலாம். கடந்த 2024 சீசனில் எம்.எஸ்.தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி, ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஐபிஎல் 2025 சீசனில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் ஜெய்க்வாட் காயம் காரணமாக பாதியில் இருந்து விலக, மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி பொறுப்பேற்றார். அடுத்த சீசனில் கெய்க்வாட் மீண்டும் கேப்டனாக வர வாய்ப்புள்ளதால், ஐபிஎல்லில் தனது கடைசி கேப்டனாக எம்எஸ் தோனி இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடக்கூடும்.
தோனி ஓய்வு எப்போது..?
“When you’ve reached the last stage of your career…” – #MSDhoni 😢#OneLastTime, #CaptainCool wins the toss! 💛
Watch the LIVE action ➡ https://t.co/vroVQLpMts#Race2Top2 👉 #GTvCSK | LIVE NOW on Star Sports Network & JioHotstar! pic.twitter.com/rv1IAOcdOD
— Star Sports (@StarSportsIndia) May 25, 2025
ஐபிஎல் 2026 சீசனில் விளையாடுவது குறித்து பேசிய எம்.எஸ்.தோனி, அதற்கான முடிவுகளை எடுக்க இன்னும் நிறைய நேரங்கள் உள்ளது. தனது உடல்தகுதியை பொறுத்து அடுத்த சீசனில் விளையாடுவேனா இல்லையா என்பது தெரியவரும் என்று குறிப்பிட்டார். இதன் காரணமாக, ஐபிஎல் 2026ல் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. இன்று, 2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போடும்போது, தோனி தனது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கக்கூடிய ஒன்றைச் சொன்னார். அப்போது பேசிய அவர், “இது மிகவும் நல்ல உணர்வு, நான் எப்போதும் ரசிகர்களிடமிருந்து ஒரு பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சில வருடங்களாக நான் விளையாட, நீங்கள் எனக்கு செய்த அனைத்திற்கும் மிக்க நன்றி.
மேலும் இது ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பாக நீங்கள் ஒரு விளையாட்டை விளையாடும்போது, நீங்கள் விரும்புவது ரசிகர்களின் பாராட்டு. இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு பகுதியாக இருப்பது மிகப்பெரிய விஷயங்களில் ஒன்றாகும். நான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. ஒவ்வொரு வருடமும் ஐபிஎல்லில் இது ஒரு புதிய சவாலாக இருக்கும், குறிப்பாக, நீங்கள் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கும்போது, உங்கள் மீது தனி கவனம் செலுத்துவார்கள். என்னை கவனித்துகொண்ட துணை ஊழியர்களுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.
எம்.எஸ்.தோனியின் ஐபிஎல் வாழ்க்கை:
ஐபிஎல் வரலாற்றில் எம்.எஸ்.தோனி இதுவரை 277 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 24 அரைசதங்களுடன் 5,439 ரன்கள் எடுத்துள்ளார். எம்.எஸ்.தோனி தனது கடைசி 87 ஐபிஎல் போட்டிகளில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.