ஓய்வறையில் இ-சிகரெட் புகைத்த ரியான் பராக்?.. கிளம்பிய சர்ச்சை.. வைரலாகும் வீடியோ!!

IPL 2026: இந்தச் சம்பவம் வெறும் ஒழுக்க மீறல் மட்டுமல்லாமல், சட்ட ரீதியாகவும் ரியான் பராக்கிற்குச் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. பிசிசிஐ மற்றும் ஐபிஎல் விதிமுறைகளின்படி, மைதான வளாகம் மற்றும் டிரெஸ்ஸிங் ரூமில் புகைபிடித்தல் அல்லது புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

ஓய்வறையில் இ-சிகரெட் புகைத்த ரியான் பராக்?.. கிளம்பிய சர்ச்சை.. வைரலாகும் வீடியோ!!

ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்

Updated On: 

29 Apr 2026 11:46 AM

 IST

நடப்பு ஐபிஎல் 2026 தொடரில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற பரபரப்பான போட்டிக்கு நடுவே, ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 223 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிக்கொண்டிருந்த போது (ஆட்டத்தின் 16-வது ஓவர்), நேரலை ஒளிபரப்பில் கேமரா டிரெஸ்ஸிங் ரூம் பக்கமாகத் திரும்பியது. அப்போது ரியான் பராக், சக வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோருக்கு அருகில் அமர்ந்து, ஈ-சிகரெட் போன்ற கருவியைப் பயன்படுத்தி புகைத்துக்கொண்டிருந்த காட்சிகள் நேரலையில் ஒளிப்பரப்பானது.

ALSO READ: பஞ்சாப் ஜெர்சி நிறத்தை மாற்றியது ஏன்..? ரகசியத்தை உடைத்த ப்ரீத்தி ஜிந்தா!

சமூக வலைதளங்களில் கண்டனம்:


இது எலக்ட்ரானிக் சிகரெட் அல்லது ‘வேப்’ (Vape) ஆக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த வீடியோ கிளிப் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ஒரு தொழில்முறை விளையாட்டு வீரர், அதுவும் இளம் தலைமுறைக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர், மைதானத்தின் உட்புறத்திலேயே இத்தகைய செயலில் ஈடுபட்டது சரியல்ல எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே ரியான் பராக் தனது அதிரடியான மற்றும் சில நேரங்களில் ஆக்ரோஷமான உடல் மொழியால் அடிக்கடி விமர்சனங்களுக்கு உள்ளாவார். தற்போது இந்த ‘வேப்பிங்’ சர்ச்சை அவரது நற்பெயருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சட்ட ரீதியான சிக்கல்கள்:


இந்தச் சம்பவம் வெறும் ஒழுக்க மீறல் மட்டுமல்லாமல், சட்ட ரீதியாகவும் ரியான் பராக்கிற்குச் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. அதோடு, ரியான் பராக் மட்டுமல்லாமல், ஓய்வறையில் மேலும் சில வீரர்களும் இ-சிகரெட் பயன்படுத்தும் காட்சிளகும் வைரலாகி வருகிறது. பிசிசிஐ மற்றும் ஐபிஎல் விதிமுறைகளின்படி, மைதான வளாகம் மற்றும் டிரெஸ்ஸிங் ரூமில் புகைபிடித்தல் அல்லது புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு, இந்தியாவில் ‘எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் தடைச் சட்டம் (PECA), 2019’-ன் படி, வேப்பிங் கருவிகளை உற்பத்தி செய்வது, விற்பது மற்றும் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும்.

எனினும், அவர் கையில் வைத்திருந்தது ஒரு இன்ஹேலர் (Inhaler) அல்லது ஆஸ்துமாவுக்கான கருவியாக இருக்கலாம் என்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பிசிசிஐ தரப்பிலிருந்து விளக்கங்கள் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2026: வெற்றியை தேடி மும்பை.. தடை போடுமா ஹைதராபாத்..? வான்கடே பிட்ச் எப்படி?

எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகள்:

ஐபிஎல் நடத்தை விதிகளின் (Code of Conduct) பிரிவு 2.2-ன் கீழ், கிரிக்கெட் விளையாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயலாக இது கருதப்படலாம். இதனால் ரியான் பராக்கிற்கு அபராதம் விதிக்கப்படவோ அல்லது சில போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படவோ வாய்ப்புள்ளது. இது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகமோ அல்லது ஐபிஎல் கமிட்டியோ இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கம் எதையும் அளிக்கவில்லை. ரியான் பராக் இந்த சீசனில் பேட்டிங்கில் சிறப்பான ஃபார்மில் இருக்கும் வேளையில், இந்தத் தேவையற்ற சர்ச்சை அவருக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..