Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IPL 2025 Points Table: புள்ளிகள் பட்டியலில் எந்த அணி எந்த இடத்தில்..? எந்த அணி பிளே ஆஃப் தகுதிபெற வாய்ப்பு?

IPL 2025 Playoff Race: ஐபிஎல் 2025 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி இடத்தில் உள்ளது. ஆரஞ்சு தொப்பியை சாய் சுதர்சனும், ஊதா தொப்பியை பிரசித் கிருஷ்ணாவும் வைத்துள்ளனர். டெல்லி கேபிடல்ஸ், பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகள் பிளே ஆஃப் நுழைய போராடுகின்றன. சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் கடினமான போராட்டத்தில் உள்ளன.

IPL 2025 Points Table: புள்ளிகள் பட்டியலில் எந்த அணி எந்த இடத்தில்..? எந்த அணி பிளே ஆஃப் தகுதிபெற வாய்ப்பு?
குஜராத் டைட்டன்ஸ்Image Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 22 Apr 2025 14:54 PM

2025 ஐபிஎல் (IPL 2025) சீசன் தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் இதுவரை 39 போட்டிகள் நடைபெற்று முடிந்தநிலையில், இன்று அதாவது 2025 ஏப்ரல் 22ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் 40வது போட்டியில் விளையாடவுள்ளன. ஐபிஎல்லில் இதுவரை டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளை தவிர, மற்ற அனைத்து அணிகளும் தலா 8 போட்டிகளில் விளையாடியுள்ளன. புள்ளி பட்டியலில் இதுவரை முதல் 4 இடங்களில் உள்ள 3 அணிகள் ஐபிஎல்லில் சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. அதேநேரத்தில், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிகள் புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ளன. இனி வரும் நாட்களில் இந்த 2 அணிகளும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. இந்தநிலையில், புள்ளிகள் பட்டியலில் அனைத்து அணிகளும் தற்போது எங்கு உள்ளன போன்ற விவரங்களை தெரிந்துகொள்வோம்.

புள்ளிகள் பட்டியலில் எந்த அணி முதலிடம்..?

ஐபிஎல் தொடரின் 39வது போட்டியில் 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதன்படி, புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ள குஜராத் மட்டுமே ஐபிஎல்லில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இரண்டாவது இடத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், 3வது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், 4வது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் உள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 5 ல் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் தலா 8 போட்டிகளில் விளையாடி தலா 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த அணிகள் இன்னும் 4 போட்டிகளில் வென்றால் பிளேஆஃப்களுக்குள் நுழைவது உறுதி.

வெளியேறும் அபாயத்தில் சிஎஸ்கே:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2025ல் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 6 போட்டிகளிலும் வெற்றி பெற்ரால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பிளே ஆஃப்க்குள் நுழைய முடியும். தற்போது சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் 10வது அதாவது கடைசி இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸும் இதே நிலைதான், அவர்கள் 8 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ன்ரைசர்ஸ் ஹைதராபாத் 7 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

ஆரஞ்சு தொப்பி:

குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரரான சாய் சுதர்சன் ஐபிஎல் 2025ல் அதிக ரன்களை எடுத்து ஆரஞ்சு தொப்பியை கைவசம் வைத்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சாய் சுதர்சன் இதுவரை 8 போட்டிகளில் 52.12 சராசரியாக 417 ரன்கள் எடுத்துள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர்நிக்கோலஸ் பூரன் 368 ரன்கள் குவித்து 2வது இடத்தில் உள்ளார்.

ஊதா நிற தொப்பி:

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா, ஐபிஎல்லில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் காரணமாக ஊதா நிற தொப்பியை தன் வசம் வைத்துள்ளார். ஊதா நிற தொப்பியும் இவருக்கு உண்டு. 2வது இடத்தில் உள்ள குல்தீப் யாதவ் (12 விக்கெட்டுகள்) தற்போது அவரை விட 4 விக்கெட்டுகள் பின்தங்கியுள்ளார்.

ஹஜ் பயணம் போறீங்களா? தமிழக அரசு தரும் ரூ.25,000 மானியம்
ஹஜ் பயணம் போறீங்களா? தமிழக அரசு தரும் ரூ.25,000 மானியம்...
என்எல்சி அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து!
என்எல்சி அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து!...
அஜித், விக்ரம் படங்கள் வெற்றிப்படங்களா? ரசிகர்களை ஏமாத்தாதீங்க
அஜித், விக்ரம் படங்கள் வெற்றிப்படங்களா? ரசிகர்களை ஏமாத்தாதீங்க...
பஞ்சப்பூர் முனையத்தில் இருந்து பேருந்து சேவை எப்போது?
பஞ்சப்பூர் முனையத்தில் இருந்து பேருந்து சேவை எப்போது?...
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்; மதுரையில் போக்குவரத்து மாற்றம்
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்; மதுரையில் போக்குவரத்து மாற்றம்...
நடிகர் ஹரிஷ் கல்யாணை புகழ்ந்த லப்பர் பந்து பட இயக்குநர்
நடிகர் ஹரிஷ் கல்யாணை புகழ்ந்த லப்பர் பந்து பட இயக்குநர்...
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் திரும்பிய அமைதி!
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் திரும்பிய அமைதி!...
தமிழகத்தில் புதிய மினி பேருந்து சேவை.. எப்போது தெரியுமா?
தமிழகத்தில் புதிய மினி பேருந்து சேவை.. எப்போது தெரியுமா?...
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து பேசிய ஷெபாஸ் ஷெரிஃப்
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து பேசிய ஷெபாஸ் ஷெரிஃப்...
அத்துமீறிய பாகிஸ்தான்... இந்தியாவிடன் போன் போட்டு பேசிய சீனா!
அத்துமீறிய பாகிஸ்தான்... இந்தியாவிடன் போன் போட்டு பேசிய சீனா!...
டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவை நேரில் வாழ்த்திய சிவகார்த்திகேயன்
டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவை நேரில் வாழ்த்திய சிவகார்த்திகேயன்...