Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருச்சி மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… பஞ்சப்பூர் முனையத்தில் இருந்து பேருந்து சேவை.. வெளியான தகவல்!

Trichy panjapur bus terimal : திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டிற்கு 2025 ஜூன் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என்று மாவட்ட ஆட்சிர் பிரதீப் குமார் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான 2025 ஜூன் 3ஆம் தேதி திறக்கப்படலாம் என கூறப்படுகிறது.

திருச்சி மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… பஞ்சப்பூர் முனையத்தில் இருந்து பேருந்து சேவை.. வெளியான தகவல்!
பஞ்சப்பூர் பேருந்து முனையம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 11 May 2025 08:12 AM

திருச்சி, மே 09: திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் (panjapur bus terimal) மக்கள் பயன்பாட்டிற்கு ஜுன் 3ஆம் தேதி தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளில், பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என சொல்லப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, கோவை, மதுரைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் நகரமாக திருச்சி உருவெடுத்து வருகிறது. திருச்சி மாவட்டத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகைளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு எப்போது வரும்?

அந்த வகையில், தற்போது திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. 2025 மே 9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த பேருந்து முனையம் திருச்சியின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், அதன் மூலம் நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் உறுதியளிக்கிறது. 40.60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நவீன பேருந்து நிலையம், பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், இந்த பேருந்து சேவை எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்த்து எழுந்துள்ளது. மேலும், திருச்சி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். அதன்படி, பஞ்சப்பூர் பேருந்து முனையும் 2025 ஜூன் முதல் வாரத்திற்கு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கூறியுள்ளார்.

பேருந்து முனையத்தில் முடிவற்ற பணிகள் இருக்கிறது என்றும் மேலும் வழித்தடங்கள் மற்றும் பேருந்து சேவைக்கான நேரம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் பிரதீப் குமார் கூறியுள்ளார். ரூ.492.55 கோடி மதிப்பில் பஞ்சப்பூர் பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பயணிகள் வரை கையாளும் திறன் கொண்டது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்த முனையம் எட்டு நடைமேடைகளைக் கொண்டுள்ளது. இதில் 401 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. நீண்ட தூர பேருந்துகள் தரைத்தளத்தில் இருந்து இயக்கப்படும் அதே வேளையில், நகரப் பேருந்துகள் முதல் தளத்தில் உள்ள நான்கு நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும். சில்லறை விற்பனை இடங்கள், கழிவறைகள், ஏடிஎம் வசதி, ஹோட்டல்கள் போன்றவை இருக்கும். 800 க்கும் மேற்பட்ட மக்கள் தங்குவதற்கு காத்திருப்பு இடங்கள் மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

பேருந்து முனையத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 50 எல்இடி திரைகள் மற்றும் பலகைகள்  வைக்கப்பட்டுள்ளன.  இதன் மூலம் பயணிகள் பேருந்து சேவைக்கான நேரத்தை பார்த்துக் கொள்ளலாம். பயணிகள் எளிதாகச் செல்லும் வகையில், டிக்கெட் கவுண்டர், ஆடை மாற்றும் அறை, உணவு சாப்பிடும் அறை போன்றவையும் உள்ளன.  மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் முதியவர்களுக்கு பேட்டரி கார்கள் வசதிகளும் உள்ளன. 166 சிசிடிவி கேமராக்கள், தீயணைப்பு பாதுகாப்பு அமைப்பு, காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவை இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

காஷ்மீர் பிரச்னை... உள்ளே வரும் அமெரிக்கா... டிரம்ப் அறிவிப்பு
காஷ்மீர் பிரச்னை... உள்ளே வரும் அமெரிக்கா... டிரம்ப் அறிவிப்பு...
கள்ளழகர் எந்த வண்ண பட்டு உடுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா?
கள்ளழகர் எந்த வண்ண பட்டு உடுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா?...
அமிர்தசரஸில் பதற்றம் - பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
அமிர்தசரஸில் பதற்றம் - பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை...
குருபகவானின் சுப பார்வை.. கும்ப ராசிக்கு காத்திருக்கும் பலன்கள்!
குருபகவானின் சுப பார்வை.. கும்ப ராசிக்கு காத்திருக்கும் பலன்கள்!...
ஹஜ் பயணம் போறீங்களா? தமிழக அரசு தரும் ரூ.25,000 மானியம்
ஹஜ் பயணம் போறீங்களா? தமிழக அரசு தரும் ரூ.25,000 மானியம்...
என்எல்சி அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து!
என்எல்சி அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து!...
அஜித், விக்ரம் படங்கள் வெற்றிப்படங்களா? ரசிகர்களை ஏமாத்தாதீங்க
அஜித், விக்ரம் படங்கள் வெற்றிப்படங்களா? ரசிகர்களை ஏமாத்தாதீங்க...
பஞ்சப்பூர் முனையத்தில் இருந்து பேருந்து சேவை எப்போது?
பஞ்சப்பூர் முனையத்தில் இருந்து பேருந்து சேவை எப்போது?...
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்; மதுரையில் போக்குவரத்து மாற்றம்
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்; மதுரையில் போக்குவரத்து மாற்றம்...
நடிகர் ஹரிஷ் கல்யாணை புகழ்ந்த லப்பர் பந்து பட இயக்குநர்
நடிகர் ஹரிஷ் கல்யாணை புகழ்ந்த லப்பர் பந்து பட இயக்குநர்...
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் திரும்பிய அமைதி!
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் திரும்பிய அமைதி!...