Asian Games 2025: இந்தியாவிற்கு விளையாட வரும் பாகிஸ்தான் அணி.. இறுதியாக ஒப்புதல் அளித்த மத்திய அரசு!

Pakistan Hockey Team: இந்தியா-பாகிஸ்தான் அரசியல் உறவுகள் மோசமாக இருந்தபோதிலும், 2025 ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7 வரை பீகாரில் நடைபெறும் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டிக்காக பாகிஸ்தான் அணிக்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளது. உள்துறை, வெளியுறவு மற்றும் விளையாட்டு அமைச்சகங்கள் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளன. ஒலிம்பிக் சாசனத்தைப் பின்பற்றி, அனைத்து நாடுகளுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் நோக்கில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Asian Games 2025: இந்தியாவிற்கு விளையாட வரும் பாகிஸ்தான் அணி.. இறுதியாக ஒப்புதல் அளித்த மத்திய அரசு!

பாகிஸ்தான் ஹாக்கி அணி

Published: 

04 Jul 2025 08:10 AM

இந்தியா மற்றும் பாகிஸ்தான் (India – Pakistan Tension) இடையிலான அரசியல் உறவுகள் சரியான நிலையில் இல்லாதபோதிலும், ஆசியக் கோப்பையில் விளையாட பாகிஸ்தான் ஹாக்கி அணி (Pakistan Hockey Team) இந்தியாவிற்கு வருகிறது. அதன்படி, பாகிஸ்தான் அணி இந்தியா வருவதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் இந்த முறை ஆசியக் கோப்பை (Asia Cup) பீகாரில் உள்ள ராஜ்கிரில் வருகின்ற 2025 ஆகஸ்ட் 27ம் தேதி முதல் 2025 செப்டம்பர் 7ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க முன்னதாக இந்திய அரசிடம், பாகிஸ்தான் ஹாக்கி அணி கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அனுமதி அளித்த மத்திய அரசு:

டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியின்படி, மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவு துறை அமைச்சகம் மற்றும் மத்திய விளையாட்டு அமைச்சகம் பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியா வர அனுமதி அளித்துள்ளது. இதற்காக, பாகிஸ்தான் வீரர்களுக்கான விசா நடைமுறையும் தொடங்கியுள்ளது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமடைந்தன. இதன் காரணமாக, பாகிஸ்தான் ஹாக்கி அணி, இந்தியாவில் வந்து விளையாடாது என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

விளையாட்டு அமைச்சகம் கூறியது என்ன..?

இதுகுறித்து விளையாட்டு அமைச்சக வட்டாரம் சார்பில் தெரிவிக்கையில், “இந்தியாவில் நடைபெறும் பல நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் எந்த அணியும் விளையாடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் இருதரப்பு தொடர்கள் வேறு. மற்ற அணிகளும் வருவதால், பாகிஸ்தான் ஹாக்கி அணி ஆசிய கோப்பை மற்றும் ஜூனியர் உலகக் கோப்பைக்காக இந்தியா வரும். சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிடமிருந்து தேவையான ஒப்புதல்கள் பெறப்பட்டுள்ளன. இந்தியா ஒலிம்பிக் சாசனத்தைப் பின்பற்ற வேண்டும். ஒரு நாடு பங்கேற்பதைத் தடுக்க முடியாது.” என்று தெரிவித்தது.

இந்திய இப்படி இதற்கு சம்மதம் தெரிவித்தது..?

இந்திய அரசாங்கத்தின் இந்த முடிவு, அரசியலையும், விளையாட்டையும் தனித்தனியாக பார்க்கிறது. ஒரு நாடுகளிடையே அரசியல் பின்னணியைப் பொருட்படுத்தாமல், அனைவரையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் நல்லிணக்கத்தைப் பற்றிப் பேசும் ஒலிம்பிக் சாசனத்தின் விதிகளைப் பின்பற்றவும் எடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். பாகிஸ்தான் அணி இரண்டு ஹாக்கி போட்டிகளில் பங்கேற்பதை இந்தியா தடுத்திருந்தால், அது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தடையை எதிர்கொண்டிருக்கும்.