AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SL: ரோஹித், கோலியின் ஆதிக்கம்.. இலங்கை மண்ணில் கில்லுக்கு இருக்கும் சவால் இதுதான்!

India vs Sri Lanka Test Series: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் தலைமையின் கீழ், இந்திய அணி இலங்கைக்கு எதிராக மொத்தம் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 8 முறை வெற்றி பெற்று, ஒரு முறை மட்டுமே தோல்வியடைந்து, இரண்டு போட்டிகளை சமன் செய்துள்ளது.

IND vs SL: ரோஹித், கோலியின் ஆதிக்கம்.. இலங்கை மண்ணில் கில்லுக்கு இருக்கும் சவால் இதுதான்!
சுப்மன் கில்Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 14 Aug 2026 15:09 PM IST

இந்தியா-இலங்கை டெஸ்ட்  (IND vs SL) தொடர் நாளை அதாவது 2026 ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்குகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலியில் நடைபெறவுள்ளது. மேலும் இது கேப்டன் சுப்மன் கில்லுக்கு ஒரு பெரும் சோதனையாக அமையும். கடந்த 11 ஆண்டுகளில், விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் இலங்கையின் கேப்டன்களாக தங்களது வெற்றி பயணத்தை தொடர்ந்து நிலைநாட்டியுள்ளனர். இலங்கைக்கு எதிரான இந்திய அணியின் (Indian Cricket Team) கடைசி டெஸ்ட் தோல்வி 2015ம் ஆண்டில் ஏற்பட்டது.

ALSO READ: இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடர்.. அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் யார்?

இலங்கைக்கு எதிராக இந்திய அணியின் கடைசி தோல்வி எப்போது..?

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி 2014-ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு விராட் கோலி புதிய டெஸ்ட் கேப்டன் ஆனார். இலங்கைக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் விராட் தோல்வியைச் சந்தித்தபோதிலும், அவரது கேப்டன்சியின் கீழ் இந்திய அணி தொடர்ந்து 8 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடையாமல் இருந்தது. ரோஹித் சர்மா கேப்டன் ஆனபோதும், 2022-ல் இந்திய அணி இலங்கையை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

சுப்மன் கில்லுக்கு இருக்கும் சோதனை:

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் தலைமையின் கீழ், இந்திய அணி இலங்கைக்கு எதிராக மொத்தம் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 8 முறை வெற்றி பெற்று, ஒரு முறை மட்டுமே தோல்வியடைந்து, இரண்டு போட்டிகளை சமன் செய்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவைத் தோற்கடிக்க வேண்டும் என்று இலங்கை அணி ஏங்கி வருகிறது. அதன்படி, ரோஹித் – கோலியின் பாரம்பரியத்தை சுப்மன் கில்லால் தொடர முடியுமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வியாக உள்ளது.

சுப்மன் கில் பல சவால்களை எதிர்கொள்கிறார். கில் ஒரு வீரராக இலங்கைக்கு எதிராக, அதுவும் இலங்கை மண்ணில் இதுவரை விளையாடியது கிடையாது.  எனவே, அங்கு முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாடுவது ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக இருக்கும். இதற்கிடையில், ஜஸ்பிரித் பும்ரா இல்லாத ஒரு இளம் அணியை இந்திய அணி கொண்டுள்ளது.

யாருக்கு அனுபவம் உள்ளது..?

இலங்கை சென்ற இந்திய அணியில், 40 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கே.எல். ராகுல், முகமது சிராஜ், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, பந்துவீச்சு வரிசையில் சர்வதேச அனுபவம் குறைந்த இளம் வீரர்களே நிறைந்துள்ளனர். அனுபவம் குறைந்த இந்த அணியைக் கொண்டு, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா உருவாக்கிய பாரம்பரியத்தை கில் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் உள்ளன.

ALSO READ: வித்தியாசமான இலங்கை மைதானங்கள்.. தடுமாறும் இந்திய ஸ்பின்னர்ஸ்.. ஏன் தெரியுமா?

இந்தியா-இலங்கை ஹெட் டூ ஹெட்:

இந்தியாவும் இலங்கையும் இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், இந்தியா 22 முறையும், இலங்கை 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 17 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. கடந்த 17 ஆண்டுகளில், இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இலங்கை 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் கேப்டன்களான பிறகு, இலங்கைக்கு எதிரான இந்திய அணியின் ஆதிக்கம் கணிசமாக அதிகரித்தது .

Follow Us