IND vs AUS 5th T20: இந்தியா-ஆஸ்திரேலியா 5வது டி20யில் மழையா? பிரிஸ்பேனில் வானிலை எப்படி?

IND vs AUS 5th T20 Weather Report: இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான 5வது டி20 போட்டியின் போது வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று அக்யூவெதர் தெரிவித்துள்ளது. ஸ்டேடியத்திற்கு அருகே மாலையில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் பெய்ய வாய்ப்புள்ளது.

IND vs AUS 5th T20: இந்தியா-ஆஸ்திரேலியா 5வது டி20யில் மழையா? பிரிஸ்பேனில் வானிலை எப்படி?

காபா கிரிக்கெட் ஸ்டேடியம்

Published: 

07 Nov 2025 21:54 PM

 IST

இந்தியா vs ஆஸ்திரேலியா (IND vs AUS 5th T20) தொடரின் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை அதாவது 2025 நவம்பர் 7ம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா (Indian Cricket Team) வெற்றி பெற்றால், தொடரை 3-1 என வெல்லும். மறுபுறம், ஆஸ்திரேலிய அணி 2-2 என சமநிலை செய்ய முயற்சிக்கும். இந்த போட்டியானது பிரிஸ்பேனில் வரலாற்று சிறப்புமிக்க காபா ஸ்டேடியத்தில் நடைபெறும் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலிய அணி கடந்த 19 ஆண்டுகளில் ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. இந்தநிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா 5வது டி20 டி20 போட்டி தொடங்குவதற்கு முன், 2025 நவம்பர் 7ம் தேதியான நாளை பிரிஸ்பேனில் வானிலை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: தொடர்ந்து சொதப்பும் சுப்மன் கில்.. இந்திய அணியில் வெளியேற்றப்படுவாரா?

வானிலை எப்படி..?

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான 5வது டி20 போட்டியின் போது வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று அக்யூவெதர் தெரிவித்துள்ளது. ஸ்டேடியத்திற்கு அருகே மாலையில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் பெய்ய வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியாவில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை மழை பெய்ய 50 சதவீதம் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இரவு 9 மணி முதல் 10 மணி வரை கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் மழை பெய்யும் என்பதால் இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியை போல் 5வது டி20 போட்டியும் தடைபட வாய்ப்புள்ளது.

அதேநேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 32°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21°C ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ் போடும் நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, டாஸ் போடுவது தாமதமாகலாம். கனமழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்படலாம் அல்லது போட்டி முழுமையாக ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

ALSO READ: இந்திய அணியில் வேண்டுமென்றே புறக்கணிப்பு.. தேர்வுக்குழுவை விளாசிய ஷமியின் பயிற்சியாளர்!

இந்தியா தொடரை வெல்லுமா..?


2024 டி20 உலகக் கோப்பைக்கு பிறகு கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதிலிருந்து இந்திய அணி ஒரு டி20 தொடரைக்கூட இழந்தது கிடையாது. இந்தத் தொடர் இப்போது அதிகபட்சமாக 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைய வாய்ப்புள்ளதால், ஆஸ்திரேலிய அணி கடுமையாக போராடி தொடர சமன் செய்ய முயற்சிக்கும். அதேநேரத்தில். தொடரை இழக்க இந்திய அணி விரும்பாது. ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிக்கு எதிரான தொடர் வெற்றி 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் மன உறுதியை அதிகரிக்கும். உலகக் கோப்பை அடுத்த 2026ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற உள்ளது.