ICC U19 World Cup 2026: இந்தியா – பாகிஸ்தான் போட்டி இல்லை.. வெளியான அண்டர் 19 உலகக் கோப்பைக்கான அட்டவணை..!
ICC U19 World Cup 2026 Schedule: வருகின்ற 2026 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போட்டி எதுவும் அறிவிக்கப்படவில்லை. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

அண்டர் 19 உலகக் கோப்பை அட்டவணை
2026ம் ஆண்டு நடைபெற உள்ள 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை (ICC U19 World Cup 2026) நேற்று அதாவது 2025 நவம்பர் 19ம் தேதி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. வருகின்ற 2026 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போட்டி எதுவும் அறிவிக்கப்படவில்லை. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஐசிசி இந்த முறை இந்தியாவையும் பாகிஸ்தானையும் (India vs Pakistan) வெவ்வேறு குழுக்களில் பிரித்து வைத்துள்ளது. முதல் போட்டி வருகின்ற 2026 ஜனவரி 15ம் தேதி இந்திய 19 வயதுக்குட்பட்ட அணிக்கும், அமெரிக்கா 19 வயதுக்குட்பட்ட அணிக்கும் இடையே நடைபெறும். இதன் இறுதிப் போட்டி வருகின்ற 2026 பிப்ரவரி 6ம் தேதி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெறும்.
ALSO READ: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஏ அணி.. பாகிஸ்தான் ஏ அணியுடன் மோதலா?
2026 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் விளையாடும் 16 அணிகள்
- குரூப் ஏ- இந்தியா, வங்கதேசம், அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து.
- குரூப் பி- ஜிம்பாப்வே, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து.
- குரூப் சி- ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான் மற்றும் இலங்கை.
- குரூப் டி- தான்சானியா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா.
ஐ.சி.சி ஆண்கள் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் உலகக் கோப்பை அட்டவணை
Full schedule for the ICC Men’s #U19WorldCup 2026 is out now 🤩
More ✍️: https://t.co/34jVN6Vx73 pic.twitter.com/ThoLx21gnJ
— ICC (@ICC) November 19, 2025
- 2026 ஜனவரி 15, அமெரிக்கா vs இந்தியா, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ.
- 2026 ஜனவரி 15, ஜிம்பாப்வே vs ஸ்காட்லாந்து, தகாஷிங்கா ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
- 2026 ஜனவரி 15, தான்சானியா vs வெஸ்ட் இண்டீஸ், ஹெச்பி ஓவல், விண்ட்ஹோக்
- 2026 ஜனவரி 16, பாகிஸ்தான் vs இங்கிலாந்து, தகாஷிங்கா ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
- 2026 ஜனவரி 16, ஆஸ்திரேலியா vs அயர்லாந்து, நமீபியா கிரிக்கெட் மைதானம், விண்ட்ஹோக்
- 2026 ஜனவரி 16, ஆப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா, ஹெச்பி ஓவல், விண்ட்ஹோக்
- 2026 ஜனவரி 17, இந்தியா vs வங்கதேசம், குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
- 2026 ஜனவரி 17: ஜப்பான் vs இலங்கை, நமீபியா கிரிக்கெட் மைதானம், விண்ட்ஹோக்
- 2026 ஜனவரி 18, நியூசிலாந்து vs அமெரிக்கா, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
- 2026 ஜனவரி 18, இங்கிலாந்து vs ஜிம்பாப்வே, தகாஷிங்கா ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
- 2026 ஜனவரி 18, வெஸ்ட் இண்டீஸ் vs ஆப்கானிஸ்தான், ஹெச்பி ஓவல், விண்ட்ஹோக்
- 2026 ஜனவரி 19, பாகிஸ்தான் vs ஸ்காட்லாந்து, தகாஷிங்கா ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
- 2026 ஜனவரி 19, இலங்கை vs அயர்லாந்து, நமீபியா கிரிக்கெட் மைதானம், விண்ட்ஹோக்
- 2026 ஜனவரி 19, தென்னாப்பிரிக்கா vs தான்சானியா, ஹெச்பி ஓவல், விண்ட்ஹோக்
- 2026 ஜனவரி 20, வங்கதேசம் vs நியூசிலாந்து, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
- 2026 ஜனவரி 20, ஆஸ்திரேலியா vs ஜப்பான், நமீபியா கிரிக்கெட் மைதானம், விண்ட்ஹோக்
- 2026 ஜனவரி 21, இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து, தகாஷிங்கா ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
- 2026 ஜனவரி 21, ஆப்கானிஸ்தான் vs தான்சானியா, ஹெச்பி ஓவல், விண்ட்ஹோக்
- 2026 ஜனவரி 22, ஜிம்பாப்வே vs பாகிஸ்தான், தகாஷிங்கா ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
- 2026 ஜனவரி 22, அயர்லாந்து vs ஜப்பான், நமீபியா கிரிக்கெட் மைதானம், விண்ட்ஹோக்
- 2026 ஜனவரி 22, வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா, ஹெச்பி ஓவல், விண்ட்ஹோக்
- 2026 ஜனவரி 23, வங்கதேசம் vs அமெரிக்கா, தகாஷிங்கா ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
- 2026 ஜனவரி 23, இலங்கை vs ஆஸ்திரேலியா, நமீபியா கிரிக்கெட் மைதானம், விண்ட்ஹோக்
- 2026 ஜனவரி 24, இந்தியா vs நியூசிலாந்து, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
- 2026 ஜனவரி 24, A4 vs D4, HP ஓவல், விண்ட்ஹோக்
- 2026 ஜனவரி 25, சூப்பர் சிக்ஸஸ் A1 vs D3, நமீபியா கிரிக்கெட் மைதானம், விண்ட்ஹோக்
- 2026 ஜனவரி 25, சூப்பர் சிக்ஸ் D2 vs A3, ஹெச்பி ஓவல், விண்ட்ஹோக்
- 2026 ஜனவரி 26, B4 vs C4, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
- 2026 ஜனவரி 26, சூப்பர் சிக்ஸ் C1 vs B2, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
- 2026 ஜனவரி 26, சூப்பர் சிக்ஸ் D1 vs A2, நமீபியா கிரிக்கெட் மைதானம், விண்ட்ஹோக்
- 2026 ஜனவரி 27, சூப்பர் சிக்ஸ் C2 vs B3, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
- 2026 ஜனவரி 27, சூப்பர் சிக்ஸ் C3 vs B1, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
- 2026 ஜனவரி 28, சூப்பர் சிக்ஸ் A1 vs D2, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
- 2026 ஜனவரி 29, சூப்பர் சிக்ஸ் D3 vs A2, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
- 2026 ஜனவரி 30, சூப்பர் சிக்ஸ் D1 vs A3, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
- 2026 ஜனவரி 30, சூப்பர் சிக்ஸ் B3 vs C1, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
- 2026 ஜனவரி 31, சூப்பர் சிக்ஸ் B2 vs C3, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
- 2026 பிப்ரவரி 1, சூப்பர் சிக்ஸ் B1 vs C2, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
- 2026 பிப்ரவரி 3, முதல் அரையிறுதி, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
- 2026 பிப்ரவரி 4, 2வது அரையிறுதி, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
- 2026 பிப்ரவரி 06, இறுதிப் போட்டி, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே.