கவுதம் காம்பீர் செய்யும் அரசியல் தான் காரணம்…. பாகிஸ்தான் அணி வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு
Gambhir Faces Criticism : டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியினால் இந்திய அணிக்கு அரையிறது சுற்றுக்கு முன்னேறுவது சிக்கலாக மாறியுள்ளது. இந்த நிலைக்கு கவுதம் காம்பீரும் காரணம் என பாகிஸ்தான் வீரர் தெரிவித்துள்ளார்.

கௌதம் காம்பீர்
டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது அந்த அணிக்கு மிகப்பெரும் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. அணியின் செயல்பாடு மற்றும் அணிக்குள் நிலவும் சூழல் குறித்து விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக 188 ரன்கள் என்ற இலக்கை அடைய இந்திய அணி தவறியுள்ளது இந்திய அணியின் அனுபவ வீரர்கள் இல்லாதது தான் காரணம் என பலரும் கரத்தது தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அகமது ஷெங்சாத் இந்திய அணியின் தற்போதைய நிலை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
விராட் கோலியின் முக்கியத்துவம்
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்யும் போது இந்திய அணிக்கு பல நேரங்களில் விராட் கோலி வெற்றியைத் தேடித் தந்துள்ளார். குறிப்பாக அழுத்தமான சூழ்நிலைகளில் கூட அணியை வெற்றியை நோக்கி அழைத்து செல்லும் திறன் அவரிடம் இருந்தது. ஒரு வீரர் அணியை விட்டு வெளியே பிறகு தான் அவரது மதிப்பு தெரியும். ரன் சேஸ் செய்வது எளிதான விஷயம் இல்லை. அந்த நேரத்தில் அழுத்தத்தை தனது தோளில் சுமந்து அணிக்கு வெற்றியை நோக்கி அழைத்து சென்றதால் தான் அவர் கிங் கோலி என அழைக்கப்பட்டார் என்றார்.
இதையும் படிக்க : T20 World Cup: வெஸ்ட் இண்டீஸ் இமாலய வெற்றி.. இந்தியாவுக்கு உருவான புதிய சவால்..
மேலும் பேசிய அவர், இந்த நிலையில் தற்போதைய இந்திய அணியில் இலக்கை துரத்தும் அளவுக்கு அனுபவம் உள்ள வீரர்கள் குறைவாக உள்ளனர். முதலில் பேட்டிங் செய்யும் போது அதிரடியாக விளையாடும் இந்திய அணி, இலக்கை சேஸ் செய்யும் சூழலில் ஸ்கோர் செய்யும் அழுத்தம் அதிகரிப்பதால் அதனை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறது. அணியில் அதிக இடது கை பேட்ஸ்மேன்கள் இடம்பெறுவது அணியின் சமநிலையை பாதிக்கும் என்றார்.
கவுதம் காம்பீர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
மேலும் பேசிய அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் சிறப்பாக செயல்படவில்லை. அணியில் உள்ள திறமையான வீரர்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை. போட்டியை மாற்றக்கூடிய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மோதுமான முக்கியத்துவம் பெறவில்லை என்றார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய கேப்டன் யாதவ் மற்றும் குல்தீப் யாதவ் இடையே மோதல் இருந்ததாக கூறப்படுகிறது. அணிக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே குல்தீப் யாதவ் அணியில் இறுந்து விலக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றன என்றார்.
இதையும் படிக்க : இந்திய அணியின் அதிர்ச்சித் தோல்வியும்.. சர்ச்சையான அணித் தேர்வும்.. விமர்சனத்திற்கு ஆளான கம்பீர், சூர்யகுமார்!!
கவுதம் காம்பீர் செய்யும் அரசியல் காரணமாக அணியின் சூழலிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அணிக்குள் தேவையற்ற அரசியல் போக்கை அவர் உருவாக்கியுள்ளார். இதன் காரணமாக இந்திய அணியின் ஒற்றுமை மற்றும் புகழுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.