இனி இந்த வீரர்கள் மைதானத்திற்குள் போக முடியாது – ஐபிஎலுக்கு பிசிசிஐ கட்டுப்பாடு – இதுதான் காரணமா?
IPL News Rule : ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன் படி ஒவ்வொரு அணியில் 16 பேர் கொண்ட பட்டியலில் இடம் பெறாத வீரர்கள் இனி மைதானத்திற்குள் செல்ல முடியாது என பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

எம்.எஸ்.தோனி
ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 28, 2026 அன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த 2026 சீசனில் முதல் 3 போட்டியிலும் சிஎஸ்கே அணி படுதோல்வி அடைந்தது. இது சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது. தோனி போன்ற சீனியர் வீரர்கள் அணியில் இல்லாததே இந்த தோல்விக்கு காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புதிய அதிரடி விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி இந்த போட்டியில் அணியில் ஏலம் எடுக்கப்பட்டு விளையாடாமல் இருக்கும் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
புதிய விதி என்ன?
ஐபிஎல் 2026 சீசனில் லீக் சுற்றில் புள்ளிபட்டியலில் முதல் 4 இடத்தை பிடிக்க போராடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் 2, 3 போட்டிகளை மட்டுமே விளையாடியுள்ளதால் இனி வரும் நாட்களை பொறுத்தே புள்ளி பட்டியலில் மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிசிசிஐ ஐபிஎல் அணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் படி ஒவ்வொரு அணியும் போட்டி நாளான்று அறிவிக்கும் 16 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெறாத வீரர்கள் இனி மைதானத்திற்கு செல்ல முடியாது.
இதையும் படிக்க : IPL 2026: தாமதமாகும் எம்.எஸ்.தோனி வருகை.. ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சி!
பிளேயிங் லெவனில் உள்ள வீரர்கள் மற்றும் அந்த அணி அறிவிக்கும் 16 பேர் கொண்ட பட்டியலில் பெயர் உள்ள வீரரர்கள் மட்டுமே இனி மைதானத்திற்குள் செல்லலாம். மீதமுள்ள வீரர்கள், காயம் காரணமாக போட்டியில் பங்கேற்காத வீரர்கள் போன்றோர் இனி மைதானத்திற்குள் செல்ல முடியாது.
அதன் படி பிளேயிங் லெவனில் உள்ள 11 வீரர்கள், மற்றும் 5 மாற்று வீரர்கள் மட்டுமே டிரிங்க்ஸ், பேட் எடுத்து செல்ல, அல்லது வீரர்களுடன் பேச போன்ற காரணங்களுக்காக மைதானத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். மீதமுள்ள வீரர்கள் தங்கள் வீரர்கள் மைதானத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுவர். மேலும் அவர்கள் எல்இடி விளம்பர பலகைகள் மற்றும் பவுண்டரி லைன் பகுதியில் கூட நடமாடக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : Arshdeep Singh: பிரபல பஞ்சாபி நடிகையுடன் காதலா..? அர்ஷ்தீப் சிங் வெளியிட்ட புகைப்படம் வைரல்!
இதற்கான காரணம் குறித்து பிசிசிஐ வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இருப்பினும், தேவையில்லாமல் வீரர்கள் மைதானத்திற்குள் செல்வதால் குழப்பங்கள் ஏற்படும் என்றும், போட்டியின் போக்கை கவனித்து வீரர்களுக்கு அறிவுரை வழங்குவதை தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இதனால் வீரர்கள் மைனாத்திற்குள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த முடிவு எந்த அளவுக்கு போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்.