India-Pakistan: விளையாடாமல் பின்வாங்குகிறதா இந்திய அணி..? புள்ளிகள் பட்டியலில் என்ன நடக்கும்?
Asia Cup 2025: இந்திய அணி தற்போது குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில், குரூப் ஏ புள்ளிகள் பட்டியலில் பாகிஸ்தான் அணி 2வது இடத்தில் உள்ளது. 2025 ஆசிய கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடவில்லை என்றால், அது தோல்வியாகவே அறிவிக்கப்படும்.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) இடையிலான ஆசியக் கோப்பை (2025 Asia Cup) போட்டியானது இன்று அதாவது 2025 செப்டம்பர் 14ம் தேதி மோதுகிறது. பாகிஸ்தானை எதிர்கொள்ளும் அதேவேளையில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது 34வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இரு அணிகளும் நேருக்குநேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இருப்பினும், இந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடக்கூடாது என இந்தியர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
2025 ஆசிய கோப்பை போட்டியை இந்திய அணி புறக்கணித்தால் என்ன நடக்கும்..?
இந்திய அணி தற்போது குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில், குரூப் ஏ புள்ளிகள் பட்டியலில் பாகிஸ்தான் அணி 2வது இடத்தில் உள்ளது. 2025 ஆசிய கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடவில்லை என்றால், அது தோல்வியாகவே அறிவிக்கப்படும். இந்த நிலையில், முழு போட்டியின் புள்ளிகள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு, இந்திய அணியை பாகிஸ்தான் முந்தி சென்று முதலிடம் பிடிக்கும்.
ALSO READ: இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் யார்..? பிசிசிஐ கொடுத்த சூப்பர் அப்டேட்!
இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றாலும், சூப்பர்4லிலும் இதுவே நடக்கும். இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு வந்து இந்தியா விளையாடவில்லை என்றால், பாகிஸ்தான் அணி வெற்றியாளராக கருதப்படும்.
2025 ஆசியக் கோப்பையில் இரு அணிகளும் இதுவரை எப்படி..?
It’s time for the 𝘣𝘢𝘢𝘱 𝘰𝘧 𝘢𝘭𝘭 𝘣𝘢𝘵𝘵𝘭𝘦𝘴 ♨️😍
The clash of the 𝗔𝗥𝗖𝗛 𝗥𝗜𝗩𝗔𝗟𝗦 – #INDvPAK, tonight at 7 PM, LIVE on the Sony Sports Network TV channels & Sony LIV.#SonySportsNetwork #DPWorldAsiaCup2025 pic.twitter.com/9japlSaGp4
— Sony Sports Network (@SonySportsNetwk) September 14, 2025
2025 ஆசிய கோப்பையின் தொடக்க போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. அதேநேரத்தில், பாகிஸ்தான் தனது தொடக்க ஆட்டத்தில் ஓமனை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கலக்கியது.
ALSO READ: ஆசிய கோப்பையில் முதலிடத்தில் யார்…? இந்தியாவா..? ஆப்கானிஸ்தானா..? புள்ளிகள் பட்டியல் இதோ!
இந்திய அணியின் பிளேயிங் லெவன்:
அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சகரவர்த்தி
பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன்:
சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), ஃபகார் ஜமான், சல்மான் ஆகா (கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அப்ரிடி, சுபியான் முகீம், அப்ரார் அகமது