Asia Cup 2025: கவாஸ்கர் முதல் ரோஹித் வரை.. ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய வீரர்கள் பட்டியல்!
Suryakumar Yadav Captain: 2025 ஆசியக் கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2025 செப்டம்பர் 9 அன்று தொடங்குகிறது. பிசிசிஐ சூர்யகுமார் யாதவை கேப்டனாகவும், சுப்மன் கில்லை துணை கேப்டனாகவும் கொண்ட 15-பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது. 2025 ஆசியக் கோப்பையில் சூர்யகுமார், இந்திய அணியை வழிநடத்தும் 9வது கேப்டன் ஆவார்.

ஆசியக் கோப்பை வென்ற இந்திய கேப்டன்கள்
2025 ஆசியக் கோப்பை (2025 Asia Cup) போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 9ம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்கான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ (BCCI) அறிவித்தது. அதன்படி, 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவும் (Suryakumar Yadav), துணை கேப்டனாக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டுள்ளனர். வரவிருக்கும் 2025 ஆசியக் கோப்பையானது 13வது பதிப்பாகும். அதன்படி, ஆசியக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியை வழிநடத்தும் 9வது இந்திய கேப்டன் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெறுகிறார். ஆசியக் கோப்பை வரலாற்றில் 13 பதிப்புகளில் இந்திய அணி தனது 12வது ஆசியக் கோப்பை போட்டியில் விளையாடவுள்ளது.
ஆசியக் கோப்பை கடந்த 1984ம் ஆண்டு முதன் முதலாக நடைபெற்றபோது இந்திய அணிக்கு சுனில் கவாஸ்கர் தலைமை தாங்கினார். அதன்படி, ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையை சுனில் கவாஸ்கர் பெற்றுள்ளார். தலைமை ஏற்ற முதல் ஆசியக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.
ALSO READ: பாகிஸ்தானுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து சொதப்பல்.. அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரங்கள்..!
ஆசிய கோப்பையில் இந்திய அணியை வழிநடத்திய கேப்டன்கள்:
𝗜𝗻𝗱𝗶𝗮𝗻 𝗖𝗮𝗽𝘁𝗮𝗶𝗻𝘀 𝗶𝗻 𝗔𝘀𝗶𝗮 𝗖𝘂𝗽 Gavaskar (1984 🏆)
Dilip Vengsarkar (1988 🏆) Azharuddin (1990 🏆, 1995 🏆) Tendulkar (1997)
Sourav Ganguly (2000, 2004) Dhoni (2008, 2010 🏆, 2012, 2016 🏆)
Virat Kohli (2014)
Rohit Sharma (2018 🏆, 2022, 2023 🏆)
SKY (2025*)— CricFit (@CricFit) August 20, 2025
1984ம் ஆண்டு ஆசியக் கோப்பையை இந்திய அணி புறக்கணித்த நிலையில், 1986ம் ஆண்டு ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய 2வது வீரர் திலீப் வெங்சர்க்கார் ஆவார். திலீப் வெங்சர்க்காரும் இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை வழிநடத்திய மூன்றாவது வீரர் முகமது அசாருதீன் ஆவார். இவரது தலைமையிலான இந்திய அணியும் கோப்பையை வென்றது. முகமது அசாருதீன் இரண்டு ஆசியக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தினார். ஆனால் 1997 ம் ஆண்டு அவருக்குப் பதிலாக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டார்.
2000ம் ஆண்டு சவுரவ் கங்குலி தலைமை தாங்கி இரண்டு முறை இந்திய அணியை வழிநடத்தினார். ஆனால் அவரது கேப்டன்சியில் ஒரே ஒரு முறை ஆசிய கோப்பை பட்டத்தை வென்றுள்ளது. தொடர்ந்து, 2008 ஆசிய கோப்பையில் எம்.எஸ். தோனி தலைமைப் பொறுப்பை ஏற்றார். மேலும், இந்திய அணியை நான்கு ஆசிய கோப்பைகளில் (2008, 2010, 2012, 2016) வழிநடத்தி, இந்திய அணிக்கு இரண்டு முறை ஆசிய கோப்பை சாம்பியன் பட்டங்களை வென்று கொடுத்துள்ளார்.
எம்.எஸ்.தோனிக்கு பிறகு, விராட் கோலியும் இந்தியாவை ஒரே ஒரு ஆசியக் கோப்பையில் மட்டுமே வழிநடத்தினார். அது 2014 ஆம் ஆண்டு, எம்.எஸ். தோனி ஒரு பக்க வலி காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், அப்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லவில்லை.
ALSO READ: ஆசியக் கோப்பையில் எந்த அணி எப்போது யாருடன் மோதுகிறது..? முழு அட்டவணை விவரம் இதோ!
சூர்யகுமார் யாதவுக்கு முன்பு இந்திய அணியின் கடைசி கேப்டனாக ரோஹித் சர்மா இருந்தார். ரோஹித் சர்மா கடந்த 2018, 2022 மற்றும் 2023 ஆகிய மூன்று பதிப்புகளில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். இதில், 2 முறை இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.