Asia Cup 2025: யுஏஇக்கு எதிராக முக்கிய போட்டி! தொடரும் கைகுலுக்கல் சர்ச்சை.. புறக்கணிக்கிறதா பாகிஸ்தான்?
Pakistan Vs United Arab Emirates: பாகிஸ்தான் அணி இன்று அதாவது 2025 செப்டம்பர் 17ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக தனது கடைசி லீக் போட்டியில் விளையாடவுள்ளது. பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

2025 ஆசிய கோப்பையில் (2025 Asia Cup) கடந்த 2025 செப்டம்பர் 14ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு பிறகு இந்திய அணி (Indian Cricket Team) கைலுக்காததாலும், போட்டி நடுவரின் பங்கு குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் அதிருப்தியை வெளிபடுத்தி இருந்தது. தொடர்ந்து 2025 ஆசியக் கோப்பையில் இருந்து போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் நீக்கப்படாவிட்டால், ஆசிய கோப்பையை புறக்கணித்து போட்டியில் இருந்து விலகுவோம் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியை (ICC) மிரட்டியது. இந்தநிலையில்தான், ஐசிசி பிசிபியின் வேண்டுகோளை நிராகரித்ததாக கூறப்படுகிறது. நிராகரிப்பு இருந்தபோதிலும் பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பையை புறக்கணிக்கவில்லை என்றும், இன்று அதாவது 2025 செப்டம்பர் 17ம் தேதி நடைபெறும் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கும் என்றும் கூறப்படுகிறது.
ALSO READ: 1993 முதல் 2025 வரை.. இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர் யார்..? முழு லிஸ்ட்!




கடைசி லீக் போட்டி:
பாகிஸ்தான் அணி இன்று அதாவது 2025 செப்டம்பர் 17ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக தனது கடைசி லீக் போட்டியில் விளையாடவுள்ளது. பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஒருவேளை பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தால், குரூப் ஏவில் இருந்து வெளியேறும் நிலையில், இந்தியாவுடன் சேர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சூப்பர் 4க்கு தகுதி பெறும். ஐசிசி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்தாலும், நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் பாகிஸ்தான் போட்டியில் போட்டி நடுவராக இருக்க மாட்டார் என்பது உறுதியாக தெரிகிறது. அதன்படி, பாகிஸ்தான் – ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் போட்டியில் ரிச்சி ரிச்சர்ட்சன் போட்டி நடுவராக களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா, இந்திய அணியின் போட்டிக்கு பிறகு பரிசளிப்பு மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்காதது போல், ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கு எதிரான போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பிலும் பங்கேற்கவில்லை. ஆனால், பாகிஸ்தான் அணி ஐசிசி அகாடமியில் பயிற்சி மேற்கொண்டது.
ALSO READ: இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது? யாருடன்..? முழு விவரம் இங்கே!
இந்திய அணிக்கு எதிரான மற்றொரு போட்டி:
🚨 Exclusive News: Pakistan vs UAE will go ahead as scheduled today. 🇵🇰
• The winner will face India on 21st September in Dubai. pic.twitter.com/MLdBHrlrlG
— Nawaz. (@Rnawaz0) September 17, 2025
பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் விளையாடியிருக்காவிட்டால், இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருப்பதால், பாகிஸ்தான் அணியின் ஆசியக் கோப்பை பயணம் முடிந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை பாகிஸ்தான் அணிக்கு வாக் ஓவர் வழங்கப்பட்டிருந்தால், ஐக்கிய அரபு எமிரேட் அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும். கடந்த 2025 செப்டம்பர் 14ம் தேதி நடந்த போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தானுக்கு, இன்றைய கடைசி லீக் போட்டியில் வெற்றி தேவையாக உள்ளது. இதில் வெற்றி பெற்றால், பாகிஸ்தான் அணி வருகின்ற 2025 செப்டம்பர் 21ம் தேதி இந்தியாவுக்கு எதிரான மற்றொரு போட்டிக்கு வழிவகுக்கும்.