Lakshmi Kuberar: செல்வ வளம் பெருக வேண்டுமா? – லட்சுமி குபேரரை வழிபடுங்க!

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே ரத்தினமங்கலத்தில் அமைந்துள்ள லட்சுமி குபேரர் கோயில், இந்தியாவில் குபேரருக்கென அமைந்த ஒரே கோயிலாகும். சிவ பக்தனான குபேரரின் கதை, கோயிலின் தோற்றம், சிறப்புகள் மற்றும் தரிசன நேரம் உள்ளிட்ட முக்கிய விஷயங்களை நாம் காணலால். அதேபோல் பௌர்ணமி அல்லது அமாவாசை நாட்களில் லட்சுமி குபேர பூஜை செய்வதன் முக்கியத்துவத்தையும் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

Lakshmi Kuberar: செல்வ வளம் பெருக வேண்டுமா? - லட்சுமி குபேரரை வழிபடுங்க!

லட்சுமி குபேரர் கோயில்

Published: 

15 May 2025 15:56 PM

இந்து மதத்தில் செல்வத்தின் அதிபதியாக கருதப்படுபவர் குபேரர். விஸ்ரவன் மற்றும் ரிஷி குமாரி தேவிக்கு பிறந்த இவர் சிவன் மீது கொண்ட அளவில்லா பக்தியின் காரணமாக வடதிசைக்கு அதிபதியானார். தன் மீதான பக்தியில் நெகிழ்ந்த சிவபெருமான் குபேரனுக்கு செல்வத்தினை நிர்வகிக்கும் பொறுப்பை கொடுத்தார் என சாஸ்திரங்களில் சொல்லப்படுகிறய்ஹி. இப்படியான நிலையில் இந்தியா முழுவதும் குபேரனுக்கு கோயில்களில் தனி இடம் உள்ளது. ஆனால் தனிக்கோயில் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளது. அது செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே இருக்கும் வண்டலூரில் உள்ள ரத்தின மங்கலத்தில் அமைந்திருக்கும் லட்சுமி குபேரர் திருக்கோயில் தான். அதனைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் காணலாம்.இந்தக் கோயிலில் காலை 5:30 மணி முதல் 12 மணி வரையும் மாலையில் நான்கு மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

கோயில் உருவான வரலாறு

இந்தியாவிலேயே லட்சுமி குபேரருக்கென அமைந்துள்ள ஒரு கோயில் என்ற சிறப்பை பெற்றிருக்கும் இக்கோயிலின் வரலாறு பற்றி அறிந்து கொள்வோம். மேலே சொன்ன படி தீவிர சிவபக்தனான குபேரன் ஒரு முறை கைலாசத்திற்கு சென்று சிவபெருமானை தரிசிக்க முடிவு செய்தார். அதன்படி அங்கு சென்ற அவர் பார்வதி தேவியுடன் இருந்த சிவனை கண்டு வழிபட்டார். அப்போது பார்வதி தேவியின் அளவு மகிமையும் குபேரனுக்கு மிகவும் பிடித்துப் போனது. இவ்வளவு காலமாக இப்படிப்பட்ட தேவியை தான் வணங்கவில்லையே என வருந்தினான். அப்போது குபேரனின் ஒரு கண் துடித்து அமைதியானது. இதனைக் கண்டு கடும் கோபம் கொண்ட பார்வதி தேவி துடித்த கண்ணை வெடிக்க செய்தாள்.

இதனால் குபேரனுக்கு ஒரு கண் போய்விட்டது. இதனைத் தொடர்ந்து சிவனிடம் தன்னை மன்னிக்கும் படியும் தான் எந்த தீய நோக்கத்துடனும் தேவியை பார்க்கவில்லை எனவும் குபேரன் விளக்கினான். இதனை எடுத்து பார்வதி தேவியை சமாதானம் செய்த சிவன் குபேரனை மன்னித்து அந்த கண்ணை மீண்டும் வளரச் செய்தாள். ஆனால் அது மற்றொரு கண்ணை விட சிறிதாக இருந்தது. இதனையடுத்து எட்டு திசைகளில் வடக்கு திசைக்கு குபேரனை சிவபெருமான் அதிபராக்கினார்.

மேலும் செல்வம் நிர்வகிக்கும் பொறுப்பு குபேரனுக்கு கொடுக்கப்பட்டாலும் அதனை உருவாக்குவது லட்சுமிதேவியின் கைகளில் இருந்தது. இதன் காரணமாகத்தான் செல்வ செழிப்பும் வசதியான வாழ்க்கையும் மகிழ்ச்சி நிறைந்ததாக வாழ நாம் லட்சுமி குபேர பூஜை செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது. இந்த அடிப்படையில் இந்த கோயிலானது உருவாக்கப்பட்டுள்ளது.

கோயிலின் சிறப்புகள்

ஆண்டுதோறும் திருப்பதிக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர். இப்படியான நிலையில் அங்கு செல்வதற்கு முன் ரத்தினமங்கலத்தில் உள்ள குபேரனை வழிபட்டு செல்வது மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு லட்சுமி குபேர பூஜை வெகு விமரிசையாக செய்யப்படுகிறது. இந்த பூஜையை பௌர்ணமி அல்லது அமாவாசை நாளில் செய்வது மிகுந்த பலனை தரும் என நம்பப்படுகிறது. இந்த கோயில் ஆனது சுமார் 4000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. ஐந்து நிலை கோபுரத்தை கொண்ட இந்த கோயில் முதன்முதலாக பார்ப்பவர்களின் மனதை கவரும் வகையில் கட்டிடக்கலையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

குபேரர் என்றாலே அவரது சிரித்த முகம் தான் நாம் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்தக் கோலத்தில் காட்சி தரும் அவர் இடது கையில் சங்க நிதி, வலது கையில் பதுமநிதி அடங்கிய கலசத்தை வைத்துக் கொண்டு லட்சுமி தேவி, தனது மனைவி சித்தரிணி ஆகியோருடன் காட்சி தருகிறார். மேலும் இந்த கோயிலை சுற்றி இருக்கும் பிரகாரத்தில் குபேர லிங்கம், லட்சுமி கணபதி, யோக ஆஞ்சநேயர், செல்வமுத்துக்குமரன், நவக்கிரகங்கள் ஆகியவை அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நாளில் இந்த குபேரன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது அன்றைய தினம் குபேரனை வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை சென்று வாருங்கள்.

(லட்சுமி குபேரர் கோயில் பற்றி பதிவிடப்படும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)