சனீஸ்வரனுக்கு எள் எண்ணெய் தீபம்.. இந்த தப்பை செய்யாதீங்க!
நம் வாழ்க்கையில் நவக்கிரகங்களின் பங்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நீதி தேவனான சனி பகவான் எதிர்மறை தாக்கங்களை தருவார் என்ற அச்சம் பலருக்கும் உள்ளது. அதனால் சனி தோஷ நிவர்த்திக்காக எள் தீபம் ஏற்றும் போது, சிலர் தவறுகளை மேற்கொள்கிறார்கள்,

எள் எண்ணெய் தீபம்
நம்முடைய வாழ்க்கையில் ஜோதிடத்தின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அத்தகைய ஜோதிடம் நவக்கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதாக நம்பப்படுகிறது. இதனால் தான் நாம் எந்த கோயில்களுக்கு சென்றாலும் அங்கு இருக்கும் நவக்கிரக சன்னதியை வழிபடாமல் திரும்புவதில்லை. ஒன்பது கிரகங்கள் அவற்றின் பெயர்வுகள் ஆகியவை நம்முடைய ராசியிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்குகிறது. அவை ஏற்றமாகவும், இரக்கமாகவும் இருக்கலாம். இப்படியான நிலையில் இந்த நவகிரக நாயகர்களில் ஒருவராக அறியப்படும் சனி பகவான் நீதியின் கடவுளாக பார்க்கப்படுகிறார். பொதுவாக அவர் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவர் என கருதப்படுகிறார்.
ஆனால் யார் ஒருவர் தவறு செய்கிறாரோ அவருக்கு சில தாக்கங்களை ஏற்படுத்துவது இயற்கைதான். தவறு என்பது தெரிந்து செய்வது மட்டுமல்ல, நாம் தெரியாமல் செய்வது தான் என்பதை முதலில் உணர வேண்டும். அதனால் சனி பகவானைப் பார்த்து அச்சப்பட தேவையில்லை. எனினும் சனிபகவானின் தாக்கத்திலிருந்து விடுபட கோயில்களில் இருக்கும் நவகிரக சன்னதியில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றினால் சரியாகும் என நம்முடைய முன்னோர்களும், ஜோதிட அன்பர்களும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம்.
Also Read: சனி தோஷத்தால் அவதியா? – இந்த 21 அடி சனீஸ்வரர் கோயில் போங்க!
இந்த தவறை செய்யாதீங்க
ஆனால் இத்தகைய எள் தீபம் ஏற்றும்போது சிலர் தவறுகளை மேற்கொள்கிறார்கள். அதாவது சனீஸ்வரர் சன்னதியில் எள் எண்ணெய் தீபம் ஏற்றுவதில் எந்த தவறும் இல்லை. சிலர் எள்ளை அப்படியே விளக்கில் போட்டு எண்ணெய் ஊற்றி அதில் தீபம் ஏற்றுகிறார்கள் இது தவறான காரியமாகும். காரணம் வெறும் எள் எரியும்போது வெளிப்படும் வாடை ஒரு சடலம் எரியும் போது உண்டாகும் வாடைக்கு சமம் என்பதால் இதனை மேற்கொள்ள வேண்டாம்.
நாம் தோஷம் நீங்க வேண்டும், நம்மை பிடித்திருக்கும் சனியின் தாக்கம் குறைய வேண்டும் என்று எண்ணத்தில் எள் தீபம் ஏற்றும் நிலையில் இப்படி மேற்கொண்டால் அது தாக்கத்தை மேலும் அதிகரிக்க கூடும்.
மேலும் எள் என்பது ஒரு தானியமாகும். அதனை நேரடியாக எரிக்கக் கூடாது. ஹோமங்களில் பயன்படுத்துவது என்பது அஷ்ட தேவதைகளுக்கு வழங்கப்படும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒன்று எள்ளில் இருந்து பெறப்பட்ட எள் எண்ணெய் அல்லது எள்ளிலிருந்து பெறப்பட்ட நல்லெண்ணெய் ஆகியவற்றை கொண்டு நாம் சனீஸ்வர பகவானுக்கு விளக்கேற்ற வேண்டும் என சொல்லப்படுகிறது.
Also Read: நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
ஆனால் அதே எள்ளில் சுவாமிக்கு நைவேத்தியம் செய்து வழிப்படுவதில் தவறில்லை. எனவே இனிமேல் கோயில்களிலும், வீட்டிலும் வழிபடும்போது சரியான வழிமுறைகளை அறிந்து செயல்பட்டு அதற்கேற்ப பலன்களைப் பெறுங்கள்.
(ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)