ஆருத்ரா தரிசனம் 2026: விரதம் கடைப்பிடிக்கும் முறை மற்றும் சிறப்புகள்.. முழு விளக்கம்!!

Arudra Darshanam 2026: கோயிலுக்கு செல்ல இயன்றால், அபிஷேகத்தில் கலந்துகொள்ளலாம். வீட்டில் நடராஜர் அல்லது சிவலிங்கம் இருந்தால், பால், நீர், பழம் வைத்து எளிய வழிபாடு செய்யலாம். சிறிய நடராஜர் விக்ரகத்தை வைத்தும் ஆராதனை செய்யலாம் அதில் எந்தத் தவறும் இல்லை.

ஆருத்ரா தரிசனம் 2026: விரதம் கடைப்பிடிக்கும் முறை மற்றும் சிறப்புகள்.. முழு விளக்கம்!!

ஆருத்ரா தரிசனம் 2026

Updated On: 

03 Jan 2026 12:12 PM

 IST

ஆருத்ரா தரிசனத்தின் முக்கியத்துவம், இந்த நாளில் கடைப்பிடிக்க வேண்டிய விரத முறை, வழிபாட்டு விதிகள், தாலிக்கயிறு மாற்றும் நேரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஆத்ம ஞான மையம் எனும் யூட்யூப் சேனலில் ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி எடுத்துரைக்கிறார். மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை (ஆருத்ரா) திருநாள், சிவபெருமானுக்குரிய மிக முக்கியமான நாளாகும். இந்த நாளில் நடைபெறும் ஆருத்ரா அபிஷேகம் மிகவும் விசேஷமானது. குறிப்பாக நடராஜ பெருமானின் ஆனந்த தாண்டவ தரிசனம் பக்தர்களுக்கு அபூர்வமான அருளைப் பெற்றுத் தருகிறது.

இதையும் படிக்க: சுக்கிரனின் அருளைப் பெற.. வெள்ளிக்கிழமையன்று இதை செய்தால் போதும்..

சிவபெருமான் அபிஷேகப் பிரியர்; விஷ்ணு அலங்காரப் பிரியர் என்பது ஆன்மிக மரபு. சிவபெருமானின் பல ரூபங்களில் நடராஜ வடிவம் மிக உயர்ந்த தத்துவத்தை எடுத்துரைக்கிறது. அவர் ஆடும் ஆனந்த தாண்டவம், உலகின் இயக்கத்தையும், மனித மனத்தின் இயல்பையும் உணர்த்துகிறது. நடராஜரின் திருக்கோலத்தில் ஒரு பாதம் நிலத்தில் உறுதியாக ஊன்றியிருக்க, மற்றொரு பாதம் அருள்பாதமாக உயர்ந்திருக்கும். இதை குஞ்சித பாதம் என்று அழைப்பார்கள். இதன் தத்துவம், முதலில் மனம் நிலைபெற வேண்டும்; பின்னர் அது சரியான திசையில் இயங்க வேண்டும். மனித மனம் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் அந்த மனம் ஒரு நிலைப்பாட்டைப் பெற்றால், வாழ்க்கையில் தெளிவும், உறுதியும் உருவாகும். இதை நமக்கு கற்றுத் தருவதே நடராஜ தத்துவம்.

ஆருத்ரா நாளில் வழிபடுவதன் பலன்:

நடராஜ பெருமானை வழிபடுவது என்பது சிவத்தையே வழிபடுவதற்கு சமம். சிவம் என்பது அனைத்தையும் உள்ளடக்கியது. ஆகவே, சிவனை வழிபட்டால் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் அந்த புண்ணியம் சென்று சேரும். இதனால்தான் மாணிக்கவாசகர், “நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க” என்று உலகமெங்கும் வாழ்த்தாகப் பாடினார்.

ஆருத்ரா அபிஷேகம்:

சிதம்பரம் – ஆண்டுக்கு ஆறு முறை மட்டும் நடைபெறும் அபிஷேகங்களில், ஆருத்ரா அபிஷேகம் மிக முக்கியமானது. உத்தரகோசமங்கை – மரகத நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகம், சந்தனக் காப்புடன் சிறப்பாக நடைபெறும்.

வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?

கோயிலுக்கு செல்ல இயன்றால், அபிஷேகத்தில் கலந்துகொள்ளலாம். வீட்டில் நடராஜர் அல்லது சிவலிங்கம் இருந்தால், பால், நீர், பழம் வைத்து எளிய வழிபாடு செய்யலாம். சிறிய நடராஜர் விக்ரகத்தை வைத்தும் ஆராதனை செய்யலாம் அதில் எந்தத் தவறும் இல்லை.

ஆருத்ரா விரத முறை:

ஆருத்ரா விரதம் இரண்டு முறைகளில் கடைப்பிடிக்கப்படுகிறது, முதல் நாள் விரதம் இருந்து, ஆருத்ரா அபிஷேகம் பார்த்து அடுத்த நாள் விரதத்தை நிறைவு செய்வது. ஆருத்ரா நாளே விரதம் இருந்து, அபிஷேகத்திற்கு பிறகு விரதத்தை நிறைவு செய்வது. இதில், உங்களுக்கு ஏற்ற முறையைப் பின்பற்றலாம்.

இதையும் படிக்க : சிவபெருமானுக்கு எதிரில் நந்தி இருப்பது ஏன்? காதில் வேண்டுதல்களை சொல்வது ஏன்?

2026 ஆருத்ரா – திதி, நட்சத்திர விவரம்:

திருவாதிரை நட்சத்திரம் 02.01.2026 இரவு 8.17 முதல் 03.01.2026 மாலை 6.56 வரை உள்ளது. பௌர்ணமி 02.01.2026 மாலை 6.44 முதல்
03.01.2026 மாலை 4.42 வரை உள்ளது. அதனால், 03.01.2026 அன்று ஆலயங்களில் ஆருத்ரா விழா கொண்டாடப்படுகிறது.

தாலிக்கயிறு மாற்றும் சுப நேரம்:

02.01.2026 (வெள்ளிக்கிழமை) காலை 9.20 – 10.30 மணி வரை மாற்றலாம். 03.01.2026 (சனிக்கிழமை) காலை 7.35 – 8.45 அல்லது காலை 10.35 – 11.30 மாற்றலாம். வெள்ளிக்கிழமை விரதம் காரணமாக தாலிக்கயிறு மாற்றுவது மரபில் அனுமதிக்கப்பட்டதே ஆகும்.

ஷாருக்கான் நாக்கை அறுத்து கொண்டு வருபவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம்.. அதிர்ச்சி கிளப்பும் இந்து அமைப்புகள்
இந்தியாவின் 100க்கும் மேற்பட்ட 'சுனாமி ரெடி' கிராமங்கள்
தேவையில்லாத பொருட்களை வாங்குகிறீர்களா? மனநலப் பிரச்னையாக மாறும் ஆபத்து
கோஹினூர் வைரம் அணிவது துரதிர்ஷ்டமா? இதுதான் உண்மையான வரலாறு