“நா ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன்”.. ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!! | TV9 Tamil News

“நா ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன்”.. ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!!

Published: 

12 Apr 2026 13:52 PM

 IST

Tamilnadu Assembly Election: ஏற்கனவே பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று வாக்கு சேகரித்த அமைச்சர் அன்பில் மகேஷ், தற்போது ஆட்டோ ஓட்டி பிரசாரம் செய்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருச்சியில் 'அன்பில்' அலை வீசுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

1 / 52026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதையொட்டி, அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், திருச்சி திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஒரு வித்தியாசமான பிரசாரத்தை மேற்கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதையொட்டி, அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், திருச்சி திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஒரு வித்தியாசமான பிரசாரத்தை மேற்கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

2 / 5

தனது தொகுதியில் உள்ள தொழிலாளர்களின் மனங்களை வெல்லும் நோக்கில், அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காக்கிச் சட்டை அணிந்து கொண்டு ஒரு ஆட்டோ டிரைவராகவே மாறிவிட்டார். பி.எச்.இ.எல் (BHEL) வளாகத்தில் உள்ள தொழிலாளர் முன்னேற்ற சங்க (LPF) அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பிரசாரத்தில், அவரே ஆட்டோவை ஓட்டிச் சென்றார்.

3 / 5

அவரைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணியாகச் சென்ற காட்சி திருச்சியின் முக்கியச் சாலைகளை ஸ்தம்பிக்க வைத்தது. "தொழிலாளர் வர்க்கத்தின் ஒருவனாக அவர்களது குறைகளைக் கேட்டறியவே இந்த ஆட்டோ பயணம்" மேற்கொண்டதாக அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.

4 / 5

இதற்கிடையில், தனது நெருங்கிய நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஷிற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் திருச்சியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் தனக்கே உரிய பாணியில் அன்பில் மகேஷை ஆதரித்து,அரசின் சாதனைகளை பட்டியலிட்டு, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தார்.

5 / 5

அப்போது பேசிய உதயநிதி, "திருவெறும்பூர் என்பது அன்பில் மகேஷின் கோட்டை மட்டுமல்ல, இது கலைஞரின் குடும்பத்து கோட்டை. கல்வித்துறையில் மகேஷ் செய்த புரட்சிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் தெரியும். அவரைப் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது திருச்சியின் கடமை" என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். துணை முதல்வரின் இந்த வருகை தொகுதி தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us