Tambaram Constituency Election 2026: திமுகவின் கோட்டையான தாம்பரம் தொகுதி.. இம்முறையும் கைப்பற்றுமா? மக்கள் முடிவு என்னவாக இருக்கும்? | TV9 Tamil News

Tambaram Constituency Election 2026: திமுகவின் கோட்டையான தாம்பரம் தொகுதி.. இம்முறையும் கைப்பற்றுமா? மக்கள் முடிவு என்னவாக இருக்கும்?

Published: 

13 Mar 2026 13:43 PM

 IST

தாம்பரம் சட்டமன்ற தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த தொகுதியில் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் அருகிலுள்ள பகுதிகள், தாம்பரம் சானிட்டோரியம், காமராஜபுரம், ஈஸ்ட் தாம்பரம் மற்றும் வெஸ்ட் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகள் அடங்குகின்றன. மேலும், தாம்பரம் சட்டமன்ற தொகுதி ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். இது பொது தொகுதி (General Constituency) வகையைச் சேர்ந்தது.

1 / 6தாம்பரம் சட்டமன்ற தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த தொகுதியில் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் அருகிலுள்ள பகுதிகள், தாம்பரம் சானிட்டோரியம், காமராஜபுரம், ஈஸ்ட் தாம்பரம் மற்றும் வெஸ்ட் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகள் அடங்குகின்றன. மேலும், தாம்பரம் சட்டமன்ற தொகுதி ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். இது பொது தொகுதி (General Constituency) வகையைச் சேர்ந்தது.

தாம்பரம் சட்டமன்ற தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த தொகுதியில் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் அருகிலுள்ள பகுதிகள், தாம்பரம் சானிட்டோரியம், காமராஜபுரம், ஈஸ்ட் தாம்பரம் மற்றும் வெஸ்ட் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகள் அடங்குகின்றன. மேலும், தாம்பரம் சட்டமன்ற தொகுதி ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். இது பொது தொகுதி (General Constituency) வகையைச் சேர்ந்தது.

2 / 6

சென்னை மாநகர புறநகர் பகுதிகளில் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய நகர்ப்புற தொகுதிகளில் ஒன்றாக தாம்பரம் விளங்கி வருகிறது. ரயில், பேருந்து, மெட்ரோ திட்டங்கள் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் காரணமாக இந்த பகுதியில் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது.

3 / 6

2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் எஸ்.ஆர். ராஜா சுமார் 1,16,840 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் டி.கே.எம். சின்னையா 80,016 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பெற்றார். இந்த தேர்தலில் எஸ்.ஆர். ராஜா 36,824 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தாம்பரம் தொகுதியின் தேர்தல் வரலாற்றை எடுத்துக் கொண்டால், 1977ஆம் ஆண்டு முதல் தற்போது வரை திமுக இந்த தொகுதியில் 7 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த தொகுதியில் திமுகவின் ஆதரவு வலிமை அதிகமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

4 / 6

தாம்பரம் தொகுதி வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற பகுதியாக இருந்தாலும், பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. மாற்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், நிரந்தர தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

5 / 6

அதேபோல், முடிச்சூர், வரதராஜபுரம், தாம்பரம் கேம்ப் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு மழைக்காலத்திலும் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மழைநீர் வடிகால் அமைப்புகளை முறையாக அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

6 / 6

இந்த சூழலில் தாம்பரம் சட்டமன்ற தொகுதி தற்போது திமுகவின் கோட்டையாக பார்க்கப்பட்டாலும், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களின் வாக்குறுதிகள் மற்றும் பிரச்சாரங்கள் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கக் கூடும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

Follow Us