Sangakiri Constituency Election 2026: அதிமுகவின் கோட்டையாக இருக்கும் சங்ககிரி சட்டமன்ற தொகுதி.. கள நிலவரம் என்ன? | TV9 Tamil News

Sangakiri Constituency Election 2026: அதிமுகவின் கோட்டையாக இருக்கும் சங்ககிரி சட்டமன்ற தொகுதி.. கள நிலவரம் என்ன?

Published: 

02 Apr 2026 21:00 PM

 IST

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய தொகுதிகளில் ஒன்றாக சங்ககிரி சட்டமன்ற தொகுதி பார்க்கப்படுகிறது. இந்த தொகுதி, நாமக்கல் மக்களவை தொகுதி உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது ஒரு பொதுத் தொகுதி ஆகும். இந்த சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். சங்ககிரி, எடப்பாடி அருகிலுள்ள பகுதிகள், மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்குகின்றன. சங்ககிரி தொகுதியில் நெசவு மற்றும் கைத்தொழில் முக்கியமாக உள்ளது. அதேபோல், நெல், கரும்பு போன்ற விவசாயமும் அதிகமாக நடைபெறுகிறது.

1 / 6சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய தொகுதிகளில் ஒன்றாக சங்ககிரி சட்டமன்ற தொகுதி பார்க்கப்படுகிறது. இந்த தொகுதி, நாமக்கல் மக்களவை தொகுதி உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது ஒரு பொதுத் தொகுதி ஆகும். இந்த சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். சங்ககிரி, எடப்பாடி அருகிலுள்ள பகுதிகள், மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்குகின்றன. சங்ககிரி தொகுதியில் நெசவு மற்றும் கைத்தொழில் முக்கியமாக உள்ளது. அதேபோல், நெல், கரும்பு போன்ற விவசாயமும் அதிகமாக நடைபெறுகிறது.

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய தொகுதிகளில் ஒன்றாக சங்ககிரி சட்டமன்ற தொகுதி பார்க்கப்படுகிறது. இந்த தொகுதி, நாமக்கல் மக்களவை தொகுதி உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது ஒரு பொதுத் தொகுதி ஆகும். இந்த சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். சங்ககிரி, எடப்பாடி அருகிலுள்ள பகுதிகள், மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்குகின்றன. சங்ககிரி தொகுதியில் நெசவு மற்றும் கைத்தொழில் முக்கியமாக உள்ளது. அதேபோல், நெல், கரும்பு போன்ற விவசாயமும் அதிகமாக நடைபெறுகிறது.

2 / 6

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால், இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுந்தரராஜா சுமார் 1,15,472 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் திமுக வேட்பாளர் ராஜேஷ், மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

3 / 6

சங்ககிரி சட்டமன்றத் தொகுதி பொதுவாக அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. 1977ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, கிட்டத்தட்ட எட்டு முறை இந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம், திமுக இந்த தொகுதியில் மூன்று முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4 / 6

சேலம் மாவட்ட அரசியலில் முக்கிய தாக்கம் செலுத்தும் தொகுதியாக இது விளங்குகிறது. மேலும், இங்கு அமைந்துள்ள சங்ககிரி கோட்டை காரணமாக வரலாற்று முக்கியத்துவமும் பெற்றுள்ளது. சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் சுமார் 2.8 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் முக்கிய பிரச்சினைகளாக விவசாயம் தொடர்பான சிக்கல்கள் குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக, பாசன வசதி குறைவாக இருப்பதால் உற்பத்தி செலவு அதிகரிக்கிறது என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

5 / 6

மேலும், தேசிய நெடுஞ்சாலை அருகில் இருந்தாலும், சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் முழுமையாக இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ளதும் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது.

6 / 6

வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில், திமுக தரப்பில் மணிகண்டன், அதிமுக தரப்பில் வெற்றிவேல், தமிழக வெற்றி கழகம் தரப்பில் செந்தில்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி தரப்பில் நித்யா அருள் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர். அதிமுகவின் கோட்டையாக இருந்தாலும், இந்த முறை உள்ளூர் அடிப்படை வசதிகள், விவசாயம் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கும் கட்சிகள் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Follow Us