Raja Kannappan Tamil Nadu Election: முதுகுளத்தூர் தொகுதியில் முத்திரை பதிப்பாரா ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்! | TV9 Tamil News

Raja Kannappan Tamil Nadu Election: முதுகுளத்தூர் தொகுதியில் முத்திரை பதிப்பாரா ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்!

Published: 

04 Apr 2026 20:26 PM

 IST

Tamil Nadu Elections 2026: அதிமுகவில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, இடையில் தனிக் கட்சி தொடங்கி தற்போது, முதுகுளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் இருந்து வரும் ஆர். எஸ். ராஜ கண்ணப்பன் மீண்டும் அதே தொகுதியில் வெற்றித் தடம் பதிப்பாரா.

1 / 5தமிழகத்தில்  திமுக அமைச்சரவையில்  பிற்படுத்தப்பட்டோர்  நலத்துறை அமைச்சராக இருந்து வருபவர்  ஆர். எஸ். ராஜ கண்ணப்பன்.  இவர்,  கலந்த 1948-ஆம் ஆண்டு  ஜூலை 31- ஆம் தேதி  பிறந்தார்.  அரசியல்  மீது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக  அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.  பின்னர் கட்சியில் வளர்ந்து வந்த அவருக்கு  1991- ஆம் ஆண்டு  நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்  திருப்பத்தூர் தொகுதியில்  வேட்பாளராக களம் இறக்கப்பட்டார்.  அந்த தேர்தலில் வெற்றி பெற்று  எம்எல்ஏவாக  பதவி வகித்தார்.

தமிழகத்தில் திமுக அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்து வருபவர் ஆர். எஸ். ராஜ கண்ணப்பன். இவர், கலந்த 1948-ஆம் ஆண்டு ஜூலை 31- ஆம் தேதி பிறந்தார். அரசியல் மீது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் கட்சியில் வளர்ந்து வந்த அவருக்கு 1991- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவி வகித்தார்.

2 / 5

அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் 1991 முதல் 1996 வரை பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து வந்தார். பின்னர் சில காரணங்களால் அந்த கட்சியில் இருந்து விலகிய ராஜ கண்ணப்பன் மக்கள் தமிழ் தேசம் என்ற தனி கட்சியை தொடங்கினார். பின்னர், 2001 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ராஜகண்ணப்பன், 2006- ஆம் ஆண்டு அந்த கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்தார். அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

3 / 5

பின்னர் 2009-இல் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த ராஜ கண்ணப்பன் திமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்ததுடன் அதே ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் களமிறங்கி காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்திடம் தோல்வியை தழுவினார். பின்னர், மீண்டும் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட ராஜ கண்ணப்பன் 2021 சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வானதுடன் முதல்வர் மு. க. ஸ்டாலின் அமைச்சர் அவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

4 / 5

கடந்த 1991- ஆம் ஆண்டு அதிமுக சார்பில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் களமிறங்கிய ராஜகண்ணப்பன் 63 ஆயிரத்து 297 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கிய அவர் 1,01,901 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனிடையே காதி மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சராகவும், போக்குவரத்து துறை அமைச்சராகவும், பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் மின்சார துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

5 / 5

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் முதுகுளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் எஸ். ஆர். ராஜ கண்ணப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில், மீண்டும் வெற்றி பெற்று முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நிச்சயம் இடம் பிடிப்பார் என்ற கருத்து கட்சி வட்டாரத்திலும், தொகுதியிலும் பரவலாக எழுந்து வருகிறது.

Follow Us