Agri S. S. Krishnamurthy Tamil Nadu Election: அதிமுகவில் “வேளாண்” புனைப்பெயருக்கு சொந்தக்காரர்… எம்எல்ஏ பதவியை தக்கவைத்துக் கொள்வாரா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி! | TV9 Tamil News

Agri S. S. Krishnamurthy Tamil Nadu Election: அதிமுகவில் “வேளாண்” புனைப்பெயருக்கு சொந்தக்காரர்… எம்எல்ஏ பதவியை தக்கவைத்துக் கொள்வாரா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி!

Published: 

17 Mar 2026 14:02 PM

 IST

Tamil Nadu Elections 2026: அதிமுகவில் வேளாண் புனைப் பெயர் பெற்ற அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வரும் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் மீண்டும் வெற்றி பெற்று தனது சட்ட மன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொள்வாரா. கள நிலவரம் அவருக்கு சாதகமாக உள்ளதா.

1 / 5அதிமுகவில் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக இருந்து வருபவர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி. இவர், கடந்த 1959- ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி சுந்தரேசன்- ஜெகதாம்பாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். அரசியல் மீது, குறிப்பாக அதிமுக மீது இருந்த வேட்கை காரணமாக அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர், முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். மறைந்த பிறகு ஜெயலலிதா அணியில் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி இணைந்தார்.

அதிமுகவில் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக இருந்து வருபவர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி. இவர், கடந்த 1959- ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி சுந்தரேசன்- ஜெகதாம்பாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். அரசியல் மீது, குறிப்பாக அதிமுக மீது இருந்த வேட்கை காரணமாக அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர், முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். மறைந்த பிறகு ஜெயலலிதா அணியில் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி இணைந்தார்.

2 / 5

இதைத் தொடர்ந்து, அவர் சேவல் சின்னத்தில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் எம். எல். ஏவாக களம் இறங்கினார். ஆனால், எதிர்பாராத விதமாக தோல்வியை சந்தித்தார். இதைத் தொடர்ந்து, கவுன்சிலராக அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் திருப்பத்தூர் தொகுதியில் நிறுத்தப்பட்ட கிருஷ்ணசாமி மக்களவைத் தேர்தலில் தோல்வியை சந்தித்திருந்தார். பின்னர் 2001 முதல் 2006 வரை கலசப்பாக்கம் ஒன்றிய சேர்மனாக பதவி வைத்து வந்தார்.

3 / 5

பின்னர், கடந்த 2006- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதியில் களமிறக்கப்பட்டு தனது முதல் வெற்றியை பதிவு செய்து எம்எல்ஏவாக பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து, 2011- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி களமிறக்கப்பட்டார். அப்போதும், தனது வெற்றியை நிரூபித்து காண்பித்தார்.

4 / 5

இப்படியாக இருந்து வந்த அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். காலப்போக்கில், அந்த இலாகா அவரிடம் இருந்து பெறப்பட்டு வணிக வரித்துறை இலாகா வழங்கப்பட்டது. பின்னர், மீண்டும் அவரது இலாகா மாற்றப்பட்டு கல்வித்துறை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் அமைச்சரவிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார்.

5 / 5

கடந்த 2014- ஆம் ஆண்டு ஜெயலலிதா தனது அரசை மாற்றி அமைத்த போது தாமோதரன் இடமிருந்து வேளாண் அமைச்சர் பொறுப்பு கிருஷ்ணமூர்த்தி வசம் சென்றது. விவசாய பட்டம் பெற்றிருந்ததால் அவர் வேளாண் என்ற புனை பெயருக்கு சொந்தக்காரர் ஆனார்.தற்போது வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி கலசப்பாக்கம் தொகுதியில் களம் இறக்கப்பட்டால் மீண்டும் வெற்றியை நிலை நிறுத்துவார் என்று அந்த கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். இதனால் அவருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Follow Us