Cracked Heels: மழைக்காலத்தில் கால் பாதத்தில் வெடிப்புடன் வலியா..? இந்த பொருட்கள் எளிதில் குணமாக்கும்!
Natural Home Remedies for cracked Heels: கால்களில் வெடிப்பு ஏற்படும்போது, சிலர் அதை சாதரணமாக விஷயம் என்று புறக்கணிக்கிறார்கள். ஆனால் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், பிரச்சினை மோசமடையக்கூடும். மழைநீரில் வெடித்த கால்களை சில வீட்டு பொருட்களை கொண்டு முயற்சிப்பதன் மூலம் சரிசெய்யலாம்.

பாதங்களில் வெடிப்பு பிரச்சனை
மழைக்காலம் (Rainy Season) முடி, சருமம் மற்றும் ஆரோக்கியத்திற்கு பல பிரச்சனைகளை கொண்டுவருகிறது. மழை நீரால், தலையில் முடி உதிர்வு (Hair Loss), சருமத்தில் தோல் வறட்சி, கால்களின் பாதங்களில் வெட்டு போன்றவை ஏற்படுகிறது. கால் பாதங்களில் வெட்டு ஏற்படும்போது, அது மிகவும் வலியை தரும். மேலும், இது நடக்கவும் கடினமாகிறது. இதற்கு காரணம் மழைநீரில் மண் மற்றும் அழுக்கு பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. அவை கால்களின் தோலை வெட்டுகின்றன. இந்தப் பிரச்சனை நீண்ட காலம் நீடிக்கும். இது அரிப்பு, வீக்கம் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
கால்களில் வெடிப்பு:
கால்களில் வெடிப்பு ஏற்படும்போது, சிலர் அதை சாதரணமாக விஷயம் என்று புறக்கணிக்கிறார்கள். ஆனால் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், பிரச்சினை மோசமடையக்கூடும். கடை மற்றும் ஆன்லைன்களில் இதற்கு பல வகையான மருந்துகள் மற்றும் கிரீம்கள் கிடைக்கின்றன. ஆனால், இது விரைவில் தீர்வை தருமா என்றால் கேள்விதான். மழைநீரில் வெடித்த கால்களை சில வீட்டு பொருட்களை கொண்டு முயற்சிப்பதன் மூலம் சரிசெய்யலாம். அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ: அதிக மன அழுத்தம் முடி உதிர்வை ஏற்படுத்துமா..? சரிசெய்வது எப்படி..?
கற்றாழை:
சருமத்திற்கு கற்றாழை ஒரு வரப்பிரசாதம். இது பல வகையான சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. கற்றாழையில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இவை வெடிப்பு பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது. முதலில், உங்கள் கால்களை நன்கு சுத்தம் செய்து, இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் பாதிக்கப்பட்ட பகுதியில் கற்றாழை ஜெல்லை தடவவும். இது சருமத்தை விரைவாக குணப்படுத்த உதவும்.
தேங்காய் எண்ணெய்:
வெடிப்பு காயங்களை நீக்குவதில் தேங்காய் எண்ணெய் மிகவும் உதவியாக இருக்கும். தேங்காய் எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது வெட்டுக்கள், தீக்காயங்கள் மற்றும் அரிப்பு போன்ற தோல் பிரச்சினைகளை நீக்க உதவுகிறது. இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் பாதிக்கப்பட்ட பாதத்தின் பகுதியில் இதை தேய்க்கலாம். இது பாதங்களை ஈரப்பதமாக்குவதோடு அரிப்பு மற்றும் எரிச்சலிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
வேப்ப இலை நீர்:
வேப்ப இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை அரிப்பு, வீக்கம் மற்றும் வெடிப்புகள் போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன. மழைநீர் காரணமாக உங்கள் கால்களில் வெடிப்பு ஏற்பட்டிருந்தால், வேப்ப இலை தண்ணீரை வாளியில் போட்டு, அதில் உங்கள் கால்களை 10 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் சாதாரண நீரை கொண்டு கழுவவும். இது காயம் விரைவாக குணமடைய உதவும்.
ALSO READ: கழுத்தில் உள்ள கருமையான வடுவால் கவலையா..? இவை உங்கள் பிரச்சனையை சரிசெய்யும்!
தேயிலை மர எண்ணெய்:
தேயிலை மர எண்ணெயும் நிவாரணம் அளிக்கும். இதைப் பயன்படுத்த, எந்தவொரு அத்தியாவசிய எண்ணெயுடனும் கலந்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும். இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது காயங்களை குணப்படுத்துவதோடு அரிப்பு, வீக்கம் மற்றும் தொற்றுநோயையும் நீக்குகிறது. இரவில் தூங்க செல்வதற்கு முன் இதைப் பயன்படுத்தவும்.