சோலோ டிராவல் பண்ணப்போறீங்களா? பாதுகாப்பாக பயணிப்பது எப்படி?

Travel Alert: இன்றைய காலகட்டங்களில் மக்கள் தனியாக பயணிப்பதை விரும்புகிறார்கள். தனியாக பயணம் செய்வது நமக்கு புது அனுபவத்தை தரும். வாழ்க்கையில் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் அதவும். இந்த நிலையில் தனியாக பயணிக்கும்போது பாதுகாப்பாக இருப்பது எப்படி என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சோலோ டிராவல் பண்ணப்போறீங்களா? பாதுகாப்பாக பயணிப்பது எப்படி?

மாதிரி புகைப்படம்

Published: 

18 Jun 2025 22:45 PM

நீங்கள் எப்போதாவது தனியாக பயணம் (Travel)  செய்ய விரும்பியிருக்கிறீர்களா? தனியாக பயணம் செய்வது நமக்கு புது அனுபவத்தை தரும். வாழ்க்கையில் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் உதவும். மேலும் அது மிகப்பெரும் அனுபவமாக இருக்கும். ஆனால் அதன் பின் இருக்கும் பிரச்னைகளையும் நாம் அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக மொழி (Language) தொடர்பான தடைகள் முதல் கலாச்சாரம் தொடர்பான விஷயங்கள் வரை அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாம் சில வெளிநாடுகளுக்கு (Foreign) தனியாகப் பயணம் செய்யும்போது, ​அந்த நாடு குறித்து முழு தகவல்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் நாம் மோசடியைத் தவிர்க்கலாம்.

பாதுகாப்பாக பயணிப்பது எப்படி?

நீங்கள் தனியாக பயணம் செய்யும் போது எப்போதும் நீங்கள் நம்பும் ஒருவருடன் தொடர்பில் இருங்கள். அவர்கள் உங்கள் குடும்பத்தினராகவோ அல்லது நண்பர்களாகவோ இருக்கலாம். நீங்கள் புறப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை, உங்கள் பயணத்தின் ஒவ்வொரு விவரத்தையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். குறிப்பாக, தங்குமிடம், விமானங்கள் போன்ற விவரங்கள் அனைத்தும் முக்கியமானவை. அவசரகாலத்தில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அடுத்து, நீங்கள் செல்லும் இடத்தின் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரம் குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும். உள்ளூர் சட்டங்களைப் புரிந்துகொள்வது உங்களை ஆபத்தில் சிக்காமல், சிறிய தவறுகளைக் கூடத் தவிர்க்க உதவும். இடங்களுக்கு ஏற்ப நாம் தொடர்பு கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக மொழி விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. குறைந்த பட்சம் அடிப்படை விஷயங்களைக் கேட்க கற்றுக்கொள்வது நல்லது. மேலும், உள்ளூர் காவல்துறை, இந்திய தூதரகம் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அவசர தொடர்பு எண்களை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

தங்கும் இடம் குறித்து எச்சரிக்கை

நீங்கள் எங்கே தங்குவதற்காக தேர்வு செய்தாலும், அந்த இடம் குறித்து தெளிவான தகவலைப் பெற்று உங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளுங்கள்.  குறிப்பாக அந்த இடத்தின் தூய்மையும் பாதுகாப்பும் முக்கியம். தனியாகப் பயணிப்பவர்கள் விடுதிகள் அல்லது ஹெஸ்ட் ஹவுஸ்களை தேர்வு செய்யலாம். ஏனென்றால் நீங்கள் அங்கு தனியாக இருக்க மாட்டீர்கள். எனவே பாதுகாப்பாக இருக்கும் உணர்வு ஏற்படும்.

தனியாகப் பயணம் செய்யும்போது, ​​உங்கள் சுற்றுப்புறத்தைப் பற்றி அறிந்திருப்பது அவசியம். அதிகமாக மது அருந்தாதீர்கள்.  மேலும் அந்நியர்களை நம்பாதீர்கள், குறிப்பாக அறிமுகமில்லாத சூழ்நிலைகளில் கவனமாக இருங்கள். உங்களிடம் விலையுயர்ந்த பொருட்கள் அல்லது பணம் இருந்தால், அவற்றை ஒருபோதும் வெளிப்படையாக காட்டிக்கொள்ள வேண்டாம்.  உள்ளூர் போக்குவரத்து எப்படி?  எது பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான இடங்களுக்கு அழைத்து செல்லும் டாக்சிகளைத் தேர்வு செய்வது மிகவும் நல்லது.