AC Tips for Monsoon: மழைக்காலத்தில் ஏசி வெப்பநிலை எவ்வளவு வைக்க வேண்டும்..? மின்சார கட்டணத்தைக் குறைக்கும் வழிகள்!
AC Usage Tips in Monsoon: கோடைக்காலம் போல் 18 டிகிரி முதல் 20 டிகிரி என மழைக்காலத்தில் வைத்து பயன்படுத்துவது ஏற்றதல்ல. பொதுவாகவே, மழைக்காலங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அதே வெப்பநிலையில் ஏசியை இயக்குவது மின்சார நுகர்வு அதிகரிக்கும்.

ஏசி பயன்பாடு
வெயில் காலத்திற்கு பிறகு வரும் மழைக்காலம் (Monsoon Season) குளிர்ச்சியை நமக்கு அளிக்கிறது. பலரும் இன்றளவு தங்கள் வீட்டின் பெட்ரூமில் ஏசியை குறைந்த வெப்ப நிலையில் வைத்து பயன்படுத்துகிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், மழைக்காலங்களில் ஏசியை (AC Usage) எப்படி பயன்படுத்துவது என்று பலருக்கு தெரியவில்லை. கோடையில் பயன்படுத்தும் அதே வெப்பநிலையான 18 டிகிரி முதல் 20 டிகிரி வரை வைத்து பயன்படுத்துகிறார்கள். இது அதிகளவில் குளிர்ச்சியை கொடுத்தாலும், இந்த அளவிற்கு பயன்படுத்துவது என்பது நல்லதல்ல. அதேநேரத்தில், நீங்கள் சில குறிப்புகளைப் பின்பற்றினால், நீங்கள் குளிர்ச்சியாக இருப்பது மட்டுமல்லாமல், உங்கள் மின்சாரக் கட்டணத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். அதனை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: வாடகை வீட்டில் வசிக்கிறீர்களா? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
எந்த வெப்பநிலையில் பயன்படுத்துவது நல்லது..?
கோடைக்காலம் போல் 18 டிகிரி முதல் 20 டிகிரி என மழைக்காலத்தில் வைத்து பயன்படுத்துவது ஏற்றதல்ல. பொதுவாகவே, மழைக்காலங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அதே வெப்பநிலையில் ஏசியை இயக்குவது மின்சார நுகர்வு அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்களுக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டு ஆரோக்கியத்தையும் பாதிக்க செய்யும். அதன்படி, மழைக்காலங்களில், ஏசி வெப்பநிலையை 24 டிகிரி முதல் 26 டிகிரி வரை வைத்திருப்பது நல்லது. இந்த வரம்பில் பயன்படுத்துவதன் மூலம் அறையின் உள்ள இருக்கும் ஈரப்பதம் கட்டுக்குள் இருக்கும். அறையும் குளிர்ச்சியாக வைக்க முடியும், இது ஏசியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தாது.
இப்படி 24 டிகிரி முதல் 26 டிகிரி வரை பயன்படுத்துவது மின்சார பயன்பாட்டையும் குறைத்து, ஏசியும் நன்றாக இயங்க உதவி செய்யும். குறைந்த வெப்பநிலையை அமைப்பதன் மூலம் அறை விரைவாக குளிர்ச்சியடையும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் மழைக்காலத்தில், ஏசி வெப்பத்தை மட்டுமல்ல, ஈரப்பதத்தையும் சமாளிக்க வேண்டியிருக்கும். எனவே, வெப்பநிலையை மிகவும் குளிராக வைத்திருப்பது ஏசியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.
மின்சார கட்டணம் அதிகமாக வாய்ப்பு:
கோடை காலத்தில் பயன்படுத்துவது போல ஏசியை பயன்படுத்தினால், மின்சார கட்டணம் அதிகரிக்கும். அறையில் ஈரப்பதமும் அதிகரிக்கும். உங்கள் ஏசியில் உலர் பயன்முறை இருந்தால், மழைக்காலத்தில் இதைப் பயன்படுத்துங்கள். இந்த பயன்முறை ஈரப்பதத்தைக் குறைத்து அறையை மிகவும் வசதியாக மாற்றும்.
ALSO READ: ஸ்மார்ட் டிவியை இப்படி ஸ்மார்ட்டாக யூஸ் பண்ணுங்க.. நீண்ட ஆண்டுகள் செலவு தராமல் சூப்பரா ஓடும்..!
மழைக்காலங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட குறைவாக இருக்கும். அதனால்தான் தொடர்ந்து ஏசியை இயக்க வேண்டிய அவசியமில்லை. பகலில் சில மணி நேரம் அதை இயக்கலாம். ஏசியை இயக்கும்போது, வீட்டில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை சரியாக மூடுங்கள். இதனால் குறுகிய காலத்தில் நல்ல குளிர்ச்சியைப் பெற முடியும். உங்களுக்கு தேவையான குளிர்ச்சி கிடைத்ததும் அதை ஆஃப் செய்து கொள்வது நல்லது. இதுவும் மின்சார கட்டணத்தை குறைக்கும் ஒரு வழியாகும்.