WITT Summit 2026: பிரதமர் மோடி கலந்துக்கொள்ளும் மாநாடு.. இந்தியா வளர்ச்சி திசை குறித்து முக்கிய விவாதம்.. முழு விவரம்..

‘வாட் இந்தியா திங்க்ஸ் டுடே’ உச்சி மாநாடு 2026, மார்ச் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் புது தில்லியில் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராகக் கலந்துகொள்ளும் இவ்விரு மாநாட்டில், நாட்டின் வளர்ச்சி மற்றும் 2047 ஆம் ஆண்டுக்கான இலக்குகள் குறித்து முக்கியப் பிரமுகர்கள் விரிவாக விவாதிப்பார்கள்.

WITT Summit 2026: பிரதமர் மோடி கலந்துக்கொள்ளும் மாநாடு.. இந்தியா வளர்ச்சி திசை குறித்து முக்கிய விவாதம்.. முழு விவரம்..

கோப்பு புகைப்படம்

Published: 

19 Mar 2026 21:19 PM

 IST

மார்ச் 19, 2026: நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் முன்னணி சிந்தனை மேடையாகப் பெயர் பெற்ற What India Thinks Today Summit 2026 தனது நான்காவது பதிப்புடன் மேலும் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த மாநாடு மார்ச் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தலைநகரில் நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்வில் முக்கிய விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டு முக்கிய உரையாற்ற உள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர், இந்த மேடையின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை வெளிப்படுத்துகிறார்.

நாட்டின் முக்கிய பிரச்சினைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து உயர்நிலை விவாதங்கள் நடைபெறும் மேடையாக இந்த மாநாடு பரவலாக அறியப்படுகிறது. “இந்தியா & உலகம்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்வில், பொருளாதார இலக்குகள், அரசியல் மாற்றங்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் சமூக சிந்தனைகளின் பின்னணியில் இந்தியாவின் வளர்ச்சி பாதை ஆராயப்பட உள்ளது.

புதிய உலக ஒழுங்கில் இந்தியா:

வளர்ந்த இந்தியாவை உருவாக்க தேவையான வழிகாட்டுதல்களை உருவாக்க, முன்னணி சிந்தனையாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒரே மேடையில் கலந்துரையாட உள்ளனர். கடந்த பதிப்பில் “புதிய உலக ஒழுங்கில் இந்தியா” என்ற தலைப்பில் விவாதங்கள் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு 2047ஆம் ஆண்டில் இந்தியா எவ்வாறு இருக்கும் என்ற கேள்வியை மையமாகக் கொண்டு விவாதங்கள் நடைபெற உள்ளன. சுதந்திரத்தின் நூற்றாண்டை முன்னிட்டு நாட்டின் எதிர்காலம் குறித்து விரிவான ஆலோசனைகள் இடம்பெற உள்ளன.

சிறப்பு விருந்தினர்கள்:

இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர்களான பியூஷ் கோயல், ஜ்யோதிராதித்ய சிந்தியா, அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மேலும் மாநில முதலமைச்சர்களான மோகன் யாதவ், புஷ்கர் சிங் தாமி, பஜன் லால் ஷர்மா, நயாப் சிங் சைனி, பகவந்த் மான் மற்றும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

அதேபோல், அரசியல் தலைவர்களான ஸ்மிருதி இரானி, அகிலேஷ் யாதவ், அசாதுத்தீன் ஓவைசி ஆகியோரும் தங்கள் கருத்துகளை பகிர உள்ளனர்.

சர்வதேச அளவிலும் முக்கிய நபர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். வணிக ஆலோசகரான ராம் சரண் மற்றும் மார்கஸ் வாம்பாக், பெர்ன்ட் ஓ.ஹெச். ஹோர்மான் போன்றோர் கலந்து கொண்டு இந்தியாவின் வளர்ச்சி பாதையை ஆய்வு செய்ய உள்ளனர்.

மொத்தத்தில், நாட்டின் வளர்ச்சி திசையில் முக்கியமான சிந்தனைகள் மற்றும் கொள்கைகள் உருவாகும் முக்கிய மேடையாக இந்த மாநாடு அமைய உள்ளது.

Follow Us
Related Stories
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்