புதுச்சேரி பாஜக மாநில தலைவராக வி.பி ராமலிங்கம் போட்டியின்றி தேர்வு..

Puducherry BJP State Leader: புதுச்சேரியில் தற்போது பாஜக தலைவராக இருக்கும் செல்வ கணபதியின் பதவி காலம் முடிய உள்ள நிலையில் புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 30, 2025 தேதியான இன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் வி.பி ராமலிங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்,

புதுச்சேரி பாஜக மாநில தலைவராக வி.பி ராமலிங்கம் போட்டியின்றி தேர்வு..

வி பி ராமலிங்கம்

Updated On: 

30 Jun 2025 21:04 PM

 IST

புதுச்சேரி, ஜூன் 30, 2025: புதுச்சேரி பாஜக தலைவர் பதவிக்கு நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் வி.பி.ராமலிங்கத்தை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால். புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி ராமலிங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக இருந்த வி.பி. சிவகொழுந்துவின் சகோதரரான வி.பி ராமலிங்கம் 22-3-1962 ஆண்டு பிறந்தார். இவர் 2019 ஆம் ஆண்டு முதல் பாஜக உறுப்பினராக இருந்து வந்தார். அதன் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக பணியாற்றிய இவருக்கு 2021 மே 11-ம் தேதி நியமன சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார், அதன் பிறகு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நியமன சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய அவர் கடந்த ஜூன் 27 ஆம் தேதி பாஜக தலைமையின் அறிவுறுத்தலின் படி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பாஜக மாநிலத் தலைவராக வி.பி ராமலிங்கம்:

இந்த நிலையில் தற்போது தலைவராக இருக்கும் செல்வ கணபதியின் பதவி காலம் முடிய உள்ள நிலையில் புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 30, 2025 தேதியான இன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் செல்வகணபதி முன்மொழிய பாஜக தலைவர் பதவிக்கு வி.பி.ராமலிங்கம், தேர்தல் நடத்தும் அதிகாரி அகிலனிடம் மனு தாக்கல் செய்தார். மனு தாக்கலின் போது மேலிட பார்வையாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் அமைச்சர் சாய். சரவணன் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான் குமார், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தலைவர் பதவிக்கு நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில், வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யாததால் வி பி ராமலிங்கம் புதுச்சேரி மாநில பாஜக தலைவராக ஒரு மனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.

வி.பி ராமலிங்கத்திற்கு வாழ்த்து சொன்ன தமிழிசை சௌந்தராஜன்:


பாஜக மாநிலத் தலைவராக வி,பி ராமலிங்கத்திற்கு, தமிழிசை சௌந்தராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் வலைத்தள பதிவில், ” எனது உள்ளார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தலைமையில் புதுச்சேரியில் கட்சி மேலும் வளர்ந்து, மக்களின் நலனுக்காக புதிய உயரங்களை அடைந்திட வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். கட்சி நிர்வாகிகள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..