2025-ல் 13 கோடியே 52 லட்சம் லட்டுகள் விற்பனை.. திருப்பதி தேவஸ்தானம் சாதனை!
Tirupati Devasthanam Made New Record In Laddu Selling | திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களை வாங்கி வருவர். இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானம் 1 கோடியே 52 லட்சம் லட்டுகளை விற்பனை செய்துள்ளது.

மாதிரி புகைப்படம்
திருமலை, ஜனவரி 2 : திருப்பதி ஏழுமலையான் கோயில் (Tirupati Elumalaiyan Temple) உலக அளவில் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ அதே அளவுக்கு திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. திருப்பதி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பிரசாதமாக லட்டுக்களை வங்கிச் செல்லும் நிலையில், அந்த லட்டு பிரசாத விற்பனையில் திருப்பதி தேவஸ்தானம் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், லட்டு விற்பனையில் திருப்பதி தேவஸ்தானத்தின் சாதனை குறித்து விரிவாக பார்க்கலாம்.
13 கோடியே 52 லட்சம் லட்டுகள் விற்பனை செய்து சாதனை
இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, திருப்பதில் ஏழுமலையான் கோயிலில் 2024 ஆம் ஆண்டு 12 கோடியே 15 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு 13 கோடியே 52 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, 2025 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1 கோடியே 37 லட்சம் லட்டுகள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2024 ஆம் ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகும் என்று தேவஸ்தானம் கூறியுள்ளது.
இதையும் படிங்க : PM Modi : பிரதமர் மோடியின் 2025-ஆம் ஆண்டு போட்டோஸ்.. இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கும் ஆல்பம்
ஒரே நாளில் 5 லட்சத்து 13 ஆயிரம் லட்டுகள் விற்பனை
2025 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி மட்டும் 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் சுமார் 5 லட்சத்து 13 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்து புதிய சாதனை படைத்தது. கோயிலில் சாதாரண நாட்களில் தினமும் சுமார் 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில், முக்கிய திருவிழா நாட்களில் பக்தர்களின் தேவைக்காக சுமார் 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
இதையும் படிங்க : போக்குவரத்து சேவையில் ‘ஏர் டாக்சி’.. இந்தியாவில் 2026ல் அறிமுகம்.. தமிழகத்திற்கு எப்போது?
கோயிலில் லட்டு தயாரிக்க 2 ஷிப்டுகள் அடிப்படையில் 700 பேர் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். சமீபமாக கோயிலில் வழங்கப்படும் லட்டுவின் சுவை அதிகரித்துள்ளதாக பக்தர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு விற்பனையில் வரலாற்று சாதனை படைத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.