தமிழ் இந்தியாவின் பெருமிதம்.. மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!

PM Narendra Modi Mann Ki Baat Speech | இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 30, 2025) நாட்டு மக்களிடையே மன் கி பாத் நிகழ்ச்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது தமிழ் இந்தியாவின் பெருமிதம் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியாவின் பெருமிதம்.. மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!

பிரதமர் மோடி

Updated On: 

30 Nov 2025 18:31 PM

 IST

டெல்லி, நவம்பர் 30 : ஒவ்வொரு மாதமும் பொதுமக்களுடன் உரையாடும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) மன் கி பாத் (Man Ki Baat) நிகழ்ச்சியில் பேசுவார். அந்த வகையில், 2025  நவம்பர் மாதத்துக்கான மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழ் கலாச்சாரம் உயர்வானது. தமிழ் மொழி உயர்வானது. தமிழ் இந்தியாவில் பெருமிதம் என்று கூறியுள்ளார். இந்த நிலையில், மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் முழு உரை குறித்து விரிவாக பார்க்கலாம்.

காசி தமிழ் சங்கள் குறித்து பேசிய பிரதமர்

காசி தமிழ் சங்கம் டிசம்பர் 2, 2025 அன்று காசி நமே படித்துறையில் தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் தமிழ் கற்காலம் என்ற மிகவும் சுவாரஸ்யமான தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வரும் நமது சகோதர, சகோதரிகளை மகிழ்சியோடு வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சி பல தரப்பினரையும் சந்திக்க ஒரு வாய்ப்பாக அமையும். இந்த நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றேன். காசி தமிழ் சங்கம் என்பது தமிழ் மொழியை விரும்பும் அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் தமிழ் கலாச்சாரம் உயர்வானது, தமிழ் மொழி சிறப்பானது, தமிழ் மொழி இந்தியாவின் பெருமிதம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற காதலன்.. தானும் தற்கொலை.. பகீர் சம்பவம்!

உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்

உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை நான் எப்போதும் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமர் கூடியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஜி20 உச்சி மாநாட்டின் போது, பல உலக தலைவர்களுக்கு பரிசுகளை வழங்கும்போது இதை தான் வலியுறுத்தினேன். நாட்டு மக்களின் சார்பாக உலக தலைவர்களுக்கு நான் வழங்கிய பரிசுகள் இதனை தான் அடிப்படையாக கொண்டு இருந்தன. ஜி20 மாநாட்டின் போது தென் ஆப்ரிக்காவின் அதிபருக்கு நடராஜரின் வெண்கல சிலையை நான் பரிசளித்தேன். இது தமிழகத்தின் கலாச்சார பாரம்பரியத்தில் வேரூன்றி சோழர் கால கைவினைத்திறனை பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : பணம் சம்பாதிக்க மகளையே விபச்சாரத்திற்கு தள்ளிய தாய்.. சிறுமி பகீர் வாக்குமூலம்!

மேலும், தேன் உற்பத்தியில் இந்தியா புதிய சாதனை படைத்து வருவதாகவும், 357 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தியில் இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
இயற்கை ஒளியால் டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியுமா? ஆய்வுகள் சொல்வது என்ன?
பணி நீக்கத்தால் தூய்மை பணியாளராக மாறிய இந்தியர்.. ரஷ்ய செய்து நிறுவனம் தகவல்..
மூன்றாம் உலகப்போர்.. பாபா வங்காவின் கணிப்புகள் உண்மையாகுமா?
விமானக் கண்காட்சியின் போது பறவைகள் விபத்து தடுக்க மத்திய அரசின் புதிய முயற்சி.. என்ன தெரியுமா?