மகனுக்கு பெண் அலங்காரம் செய்து அழகு பார்த்த பெற்றோர்.. தண்ணீர் தொட்டியில் குதித்து குடும்பத்துடன் தற்கொலை!
Rajasthan Family Tragedy | ராஜஸ்தானில் தம்பதி இருவர் தங்களது இரண்டு மகன்களுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்னதாக இரண்டாவது மகனுக்கு அவரது தாய் பெண் அலங்காரம் செய்து புகைப்படம் எடுத்து அழு பார்த்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாதிரி புகைப்படம்
ராஜஸ்தான், ஜூலை 03 : ராஜஸ்தானில் (Rajasthan) மகனுக்கு பெண் போல அலங்காரம் செய்து அழகு பார்த்த தாய், அதன் பிறகு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கவிதா – ஷிவ்லால் மேக்வால் தம்பதிக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருந்த நிலையில், அவர்கள் குடும்பத்துடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
குடும்பத்துடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை
ராஜஸ்தான் மாநிலம், பார்மர் பகுதியை சேர்ந்தவர்கள் கவிதா – ஷிவ்லால் மேக்வால் தம்பதி. இவர்களுக்கு எட்டு மற்றும் ஒன்பது வயதில் இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று கவிதா தனது இளைய மகனுக்கு துப்பட்டா அணிவித்து, கண்ணில் மை வைத்து, நகைகள் அணிவித்து அழகு பார்த்துள்ளார்.
அதன் பிறகு நான்கு பேரும் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். அவர்கள் தங்களது வீட்டில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், தகவல் அறிந்து சென்ற போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டில் கிடைத்த தற்கொலை கடிதம்
கவிதா – ஷிவ்லால் மேக்வால் தம்பதி குடும்பத்துடன் தற்கொலை செய்துக்கொண்டதற்கான காரணம் என்ன என போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அவர்களது வீட்டில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த கடிதம் ஜூன் 29, 2025 அன்று எழுதப்பட்டுள்ளது. அதில் தங்களது மரணத்திற்கு மூன்று பேர் தான் காரணம் என எழுதப்பட்டிருந்துள்ளது. அதில் ஷிவ்லால் மேக்வாலின் இளைய தம்பியின் பெயரும், தாயின் பெயரும் எழுதப்பட்டுள்ளது.
நில தகராறில் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளர். மேலும் தங்களது உடல்களை தங்களது வீட்டிற்கு முன்னதாக வைத்து இறுதி சடங்குகளை செய்ய வேண்டும் என்றும் அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து கூறியுள்ள ஷிவ்லாலின் உறவினர், ஷிவ்லால் தனியாக வீடு கட்ட விரும்பியதாகவும் அதற்கு அவரின் தம்பியும், தாயும் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். இதுவே ஷிவ்லால் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்துக்கொள்ள காரணம் என கூறப்படுவது குறிப்பிடத்தகது.