தேசிய வாக்காளர் தினம்.. இளைஞர்கள் ஜனநாயகத்தின் உயிர்நாடி – கடிதம் எழுதிய பிரதமர் மோடி..
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் உள்ள மை-பாரத் தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். வாக்களிப்பது ஜனநாயகத்தில் மிக உயர்ந்த உரிமை மற்றும் பொறுப்பு என்று அவர் கூறினார். முதல் முறையாக வாக்காளராகும் தருணத்தைக் கொண்டாடவும், இளைஞர்களை ஜனநாயக விழுமியங்களை நோக்கி வழிநடத்த கல்வி நிறுவனங்கள் உதவ வேண்டும் என்றும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

கோப்பு புகைப்படம்
ஜனவரி 25, 2026: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் உள்ள மை-பாரத் (MY-Bharat) தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சிறப்பு கடிதம் எழுதியுள்ளார். இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதை அவர் தெளிவுபடுத்தினார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், “ஜனநாயகத்தின் தாய்” என்ற பெருமையை இளைஞர்களுக்கு நினைவூட்டினார். பல நூற்றாண்டுகளாக விவாதம், உரையாடல் மற்றும் பொதுக் கருத்து ஆகியவை இந்திய நாகரிகத்தின் ஓர் அங்கமாக இருந்து வருவதாகவும் அவர் கூறினார்.
இளைஞர்களுக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம்:
Becoming a voter is an occasion of celebration!
Today, on #NationalVotersDay, penned a letter to MY-Bharat volunteers on how we all must rejoice when someone around us has enrolled as a voter. pic.twitter.com/zDBfNqQ6S2
— Narendra Modi (@narendramodi) January 25, 2026
1951ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையிலும், வாக்களிக்கும் உரிமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், பிரதமர் தனது கடிதத்தில், “வாக்களிப்பது ஒரு உரிமை மட்டுமல்ல; அது ஒரு பெரிய பொறுப்பும் கூட.
நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு வாக்காளர் ஒரு “அதிர்ஷ்டசாலி” என்று அவர் கருத்து தெரிவித்தார். விரலில் இடப்படும் அழியாத மை குறி, ஜனநாயகத்தின் மீதான மரியாதையின் அடையாளமாக நிற்கிறது என்றும் அவர் கூறினார்.
மேலும், “ முதல் முறையாக வாக்களிக்கப் போகும் இளைஞர்களுக்கு இது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். இத்தகைய தருணங்களை வீடுகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் கொண்டாட வேண்டும்.
பள்ளிகளும் கல்லூரிகளும் ஜனநாயக விழுமியங்களின் அடித்தளங்கள் என்றும், மாணவர்கள் வாக்காளர்களாக மாறும் கட்டத்தை புனிதமாக அங்கீகரிக்க வேண்டும். தகுதியுள்ள ஒவ்வொரு இளைஞரும் வாக்காளராகப் பதிவு செய்ய வேண்டும், இந்த திசையில் கல்வி நிறுவனங்கள் இயக்க மையங்களாக மாற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி கொண்டாடப்படும் தேசிய வாக்காளர் தினம் இத்தகைய முயற்சிகளுக்கான சிறந்த தளமாக இருப்பதாகும்.
ஜனநாயகத் திருவிழா:
இந்தியத் தேர்தல்கள் உலகிற்கு ஒரு தளவாட அதிசயம் என்றால், நமக்கோ அவை ஜனநாயகத்தின் திருவிழா. இமயமலை முதல் அந்தமான் தீவுகள் வரை, காடுகள் முதல் பாலைவனங்கள் வரை மக்கள் தங்களின் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதே இந்திய ஜனநாயகத்தின் பலம்.
பெண்கள், குறிப்பாக இளம் பெண்கள் பங்கேற்பது ஜனநாயகத்தை மேலும் உள்ளடக்கியதாக மாற்றுகிறது என்றும், அவர்களின் பங்களிப்பு நாட்டின் பெரும் பலமாக இருப்பதாகவும் பிரதமர் பாராட்டினார். MY-Bharat தளத்துடன் இளைஞர்கள் தொடர்பு கொள்ளுவது, அவர்கள் சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையின் சான்றாகும்.
இளைஞர்களை நோக்கி உரையாற்றிய பிரதமர், அவர்கள் காத்திருக்கும் தலைமுறை அல்ல; மாறாக, “செய்ய முடியும் என்ற மனப்பான்மையுடன் மாற்றத்தை உருவாக்கும் தலைமுறை” . நாட்டின் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன், வளர்ந்த, உள்ளடக்கிய மற்றும் சுயசார்பு கொண்ட இந்தியாவிற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார்.