தன்னிறைவு பெற்ற இந்தியா.. பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் – பிரதமர் மோடி..

PM Modi: பிரதமர் மோடி, : “நவராத்திரி திருவிழா நாளை தொடங்குகிறது. அதற்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நவராத்திரியின் முதல் நாளான நாளை, தன்னிறைவு பெற்ற இந்தியாவை நோக்கி நாடு ஒரு முக்கியமான அடியை எடுத்து வைக்கிறது. இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது” என பேசியுள்ளார்.

தன்னிறைவு பெற்ற இந்தியா.. பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் - பிரதமர் மோடி..

பிரதமர் மோடி

Updated On: 

21 Sep 2025 19:19 PM

 IST

டெல்லி, செப்டம்பர் 21, 2025: செப்டம்பர் 22, 2025 என்ற நாளை முதல் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வர இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 21, 2025) நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, “அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது” எனக் குறிப்பிட்டார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி மேலும் பேசியதாவது, “அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகிறது, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தை மேலும் துரிதப்படுத்தும். ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சி போட்டியில் சம பங்காளியாக மாற உதவும்.

பல தசாப்தங்களாக நமது நாட்டின் மக்களும் வணிகர்களும் பல்வேறு வரிகளின் வலையில் சிக்கித் தவித்தனர் – நுழைவு வரி, விற்பனை வரி, கலால் வரி, வாட், சேவை வரி என பல வகையான வரிகள் இருந்தன. ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்ல எண்ணற்ற சோதனை சாவடிகள் கடக்க வேண்டியிருந்தது. ஆனால் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு அவை அனைத்தும் மாறின” என்றார்.

மேலும் படிக்க: 2025ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்… நேரம் என்ன? இந்தியாவில் எப்போது பார்க்கலாம்?

தண்ணிறைவு பெற்ற இந்தியா:


மேலும் அவர், “நவராத்திரி திருவிழா நாளை தொடங்குகிறது. அதற்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நவராத்திரியின் முதல் நாளான நாளை, தன்னிறைவு பெற்ற இந்தியாவை நோக்கி நாடு ஒரு முக்கியமான அடியை எடுத்து வைக்கிறது. இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது. ஜிஎஸ்டியில் 6 சதவீதம் மற்றும் 18 சதவீதம் வரிகள் மட்டுமே பெரும்பாலான பொருட்களுக்கு விதிக்கப்படும்.

மேலும் படிக்க: எந்த நோக்கமும் இல்லாமல் கட்சியை தொடங்கி எம்.பி ஆகிவிட்டார் கமல்; தொண்டர்களின் நிலை என்ன? – தமிழிசை சௌந்தராஜன்

சாமானிய மக்கள் பயன்படும் 99% பொருட்களின் வரி 5 சதவீதத்திற்குள் வந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளை முதல் குறையும். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள், விவசாயிகள் குறைந்த விலையில் பொருட்களைப் பெறுவார்கள்” எனக் குறிப்பிட்டார்.