WITT Summit 2026: WITT உச்சி மாநாடு.. பிரதமர் மோடி சிறப்புரை.. முழு விவரம்..

இந்த உச்சி மாநாடு, நாட்டின் முக்கிய பிரச்சினைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து உயர்நிலை விவாதங்கள் நடைபெறும் முக்கிய மேடையாக உருவெடுத்துள்ளது. பொருளாதாரம், சமூக முன்னேற்றம், அரசியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இந்த மாநாடு, அனைத்து தரப்பினரையும் தொடும் வகையில் அமைந்துள்ளது.

WITT Summit 2026:  WITT உச்சி மாநாடு.. பிரதமர் மோடி சிறப்புரை.. முழு விவரம்..

கோப்பு புகைப்படம்

Updated On: 

23 Mar 2026 21:35 PM

 IST

பிரதமர் நரேந்திர மோடி , TV9 நெட்வொர்க் நடத்தும் ‘What India Thinks Today Summit 2026’ (WITT Summit 2026) மாநாட்டில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு தலைமை உரையாற்ற உள்ளார். அவரது உரை இன்னும் சில நிமிடங்களில் தொடங்க உள்ளது. இந்த உச்சி மாநாட்டின் நான்காவது பதிப்பு தற்போது நாட்டின் தலைநகர் புதுதில்லியில் நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் இந்த மாநாடு நடைபெற உள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த ‘What India Thinks Today’ உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் தலைமை உரை:

இந்த உச்சி மாநாடு, நாட்டின் முக்கிய பிரச்சினைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து உயர்நிலை விவாதங்கள் நடைபெறும் முக்கிய மேடையாக உருவெடுத்துள்ளது. பொருளாதாரம், சமூக முன்னேற்றம், அரசியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இந்த மாநாடு, அனைத்து தரப்பினரையும் தொடும் வகையில் அமைந்துள்ளது.

மாநாட்டின் முக்கிய கருப்பொருள்:

‘இந்தியா மற்றும் உலகம்’ என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் உள்ள சாதகமான அம்சங்கள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி விரிவாக புரிந்துகொள்வதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். மேலும், ‘வளர்ந்த இந்தியா’ குறித்து ஒரு தெளிவான வழிக்காட்டி உருவாக்குவதையும் இந்த உச்சி மாநாடு இலக்காகக் கொண்டுள்ளது.

பிரதமர் உரை:

இந்தியா இன்று வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மோதல்கள் இருந்தபோதிலும், இந்தியாவின் கொள்கைகளும் வியூகங்களும் உலக நாடுகளை வியக்க வைக்கின்றன என்றும் அவர் கூறினார். இந்தியா அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயல்படும் கூட்டாளி என்றும், “நாம் யாரின் பக்கம்?” என்று கேட்பவர்களுக்கு, “இந்தியா அமைதிக்காக நிற்கிறது” என்பதே பதில் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். உலகில் எங்கு போர் ஏற்பட்டாலும், அது அனைவரையும் பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சூழ்நிலையை அரசியலுக்காக பயன்படுத்தும் சிலர்:

சிலர் அரசியல் சுயநலத்தால் தூண்டப்பட்டு, தற்போதைய சூழ்நிலையை தங்களது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும் அவர் விமர்சித்தார். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டபோது முக்கியமான முடிவுகள் எட்டப்பட்டதை நினைவுபடுத்திய அவர், அதே மனப்பான்மையுடன் தற்போதைய சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

போரின் தாக்கம் இருந்தபோதிலும், இந்தியாவின் வளர்ச்சி வேகம் குறையவில்லை என்றும், கடந்த 23 நாட்களில் அரசு பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது என்றும் நரேந்திர மோடி தெரிவித்தார். போர் சூழ்நிலையிலும் இந்தியா முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து பயணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

அதிவேக வளர்ச்சியை கண்டு வரும் இந்தியா:

இந்தியா ஒவ்வொரு துறையிலும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது என்றும், தற்போது நாட்டில் 160-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். இந்தியா அதிவேக வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும், வாக்குறுதிகள் சாதனைகளாக மாறி வருகின்றன என்றும் அவர் கூறினார். “புதிய இந்தியா” என்ற செய்தி உலகம் முழுவதும் பரவி வருகிறது என்றும், வளர்ச்சிக்கான முயற்சிகளில் இந்தியா எந்தவொரு வாய்ப்பையும் வீணாக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த ‘What India Thinks Today’ (WITT) உச்சி மாநாட்டின் நான்காவது பதிப்பு புதுதில்லியில் நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பங்கேற்கிறார்.

நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பருண் தாஸ் பேச்சு: 

இந்த நிகழ்ச்சியில் டிவி9 நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பருண் தாஸ் பேசுகையில், இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். உலகம் முழுவதும் எரிசக்தி நெருக்கடி நிலவி வருவதாகவும், போரின் தாக்கம் அனைத்துத் துறைகளிலும் உணரப்படுவதாகவும் அவர் கூறினார். இத்தகைய சூழலில், ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகளை கண்டுபிடிக்கும் பாதையை பிரதமர் காட்டியுள்ளார் என்றும் அவர் பாராட்டினார்.

புதிய உலக ஒழுங்கில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், இலக்குகளை அடைவதில் நரேந்திர மோடி போன்ற தலைவர்கள் அரிது என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்தியா வளர்ச்சி பாதையில் உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறினார். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மிகப்பெரிய நெருக்கடியை உலகம் சந்தித்து வருவதாகவும், உரையாடல், அமைதி மற்றும் தீர்வு ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மை ஹோம் குழுமத்தின் செயல் துணைத் தலைவர் ராமு ராவ் ஜுபாலி வரவேற்புரை வழங்கினார். உலகம் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இந்தியா உறுதியுடன் புதிய வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது என்றும், பிரதமர் தலைமையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Follow Us
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..