ஆபரேஷன் சிந்தூர்… விமான சேவை ரத்து.. கல்வி நிறுவனங்கள் மூடல்.. காஷ்மீரில் பரபரப்பு!
Operation Sindoor : ஆபேரஷன் சிந்தூர் தாக்குதலை அடுத்து, பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், வட மாநிலங்களுக்கு செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் ஆகியவை வட மாநிலங்களுக்கு செல்லும் விமான சேவையை நிறுத்தியுள்ளன.

காஷ்மீர், மே 07 : ஆபேரஷன் சிந்தூர் தாக்குதலை அடுத்து, பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், வட மாநிலங்களுக்கு செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக காஷ்மீரில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு மூடப்பட்டுள்ளன. 2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் இந்தியா உட்பட உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்று இருக்கிறது.
ஆபரேஷன் சிந்தூர்
இருப்பினும், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு முக்கிய பங்கு இருப்பதாக இந்தியா குற்றச்சாட்டி வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறி வருகிறது. அதற்கான ராணுவ நடவடிக்கையை இந்தியா தீவிரப்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் தான், 2025 மே 7ஆம் தேதியான இன்று நள்ளிரவு பாகிஸ்தான் மீது இந்தியா பதிலடி தாக்குதலை நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என இந்திய ராணுவம் பெயரிடப்பட்டுள்ளது. காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
9 இடங்களில் பயங்கரவாத முகாம்களில் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. காஷ்மீரில் உள்ள முசாபராபாத், கோட்லி, குல்பூர், பிம்பர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சியால்கோட், சக் அமரு, முரிட்கே, பஹவல்பூர் ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. முரிட்கே பகுதியில் ஹபீஸ் சயீத் நடத்தும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதக் குழுவின் தலைமையகம் ஆகும்.
விமான நிலையங்கள் மூடல்
#6ETravelAdvisory: Due to changing airspace conditions in the region, our flights to and from #Srinagar, #Jammu, #Amritsar, #Leh, #Chandigarh and #Dharamshala are impacted. We request you to check your flight status at https://t.co/CjwsVzFov0 before reaching the airport.
— IndiGo (@IndiGo6E) May 6, 2025
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹல்வாபூர் மசூத் அசார் நடத்தும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளமாகும். இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி இரவு முழுவதும் ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தை தொடர்ந்து கண்காணித்தார். இதற்கிடையில், இந்தியாவின் தாக்குதலுக்கு கட்டாயம் பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் ஆகியவை வட மாநிலங்களுக்கு செல்லும் விமான சேவையை நிறுத்தியுள்ளன. மேலும், தர்மசாலா, லே, ஜம்மு, ஸ்ரீநகர், அமிர்தசரஸ் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
மறு உத்தரவை வரும் வரை விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும். இந்த விமான நிலையங்கள் வழியாக செல்லும் அனைத்து விமானங்களும், தரையிரங்கும் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. சர்வதேச விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கத்தார் ஏர்வேஸ் தனது வான்வெளி மூடப்பட்டதால் பாகிஸ்தானுக்கான விமானங்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.