Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Operation Sindoor : வருத்தமோ, விரக்தியோ இல்லை.. குடும்ப உறுப்பினர்கள் மரணம் குறித்து மசூத் அசார் பரபரப்பு பேச்சு!

Masood Azhar's Response to Family Deaths | பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்துள்ளது. இதில், மசூத் அசார் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் 14 பேர் உயிரிழந்த நிலையில், அது குறித்து அவர் பரபரப்பாக பேசியுள்ளார்.

Operation Sindoor : வருத்தமோ, விரக்தியோ இல்லை.. குடும்ப உறுப்பினர்கள் மரணம் குறித்து மசூத் அசார் பரபரப்பு பேச்சு!
மசூத் அசார்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 08 May 2025 07:59 AM

சென்னை, மே 08 : ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) தாக்குதலில் தனது குடும்பத்தினர் 10 பேர் மற்றும் உதவியாளர்கள் 4 பேர் உயிரிழந்த நிலையிலும், ஜெய்ஷ்-இ-முகமது (Jaish – e- Mohammed) அமைப்பின் தலைவர் மசூத் அசார் (Masood Azhar) மிகவும் சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார். ஏற்கனவே நிகழும் பதற்றமான சூழ்நிலையை, மேலும் பதற்றமாக்கும் வகையில் அவர் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார். இந்த நிலையில், ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டது குறித்து அவர் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 சுற்றுலா பயணிகள்

ஜம்மு காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதல் உலகையே உலுக்கிய நிலையில், இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கு இடையே இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) பொறுப்பேற்ற நிலையில் கடும் கோபம் அடைந்த இந்தியா பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மசூத் அசார் குடும்பத்தினர் கொலை

ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்த இந்தியா – மசூத் அசார் பரபரப்பு பேச்சு

இந்த நிலையில், பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்துள்ளது. அதன்படி, பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேர் மற்றும் ஆதரவாளர்கள் 4 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அல்லாவின் விருந்தினர் ஆகிவிட்டனர். இதில் எனக்கு வருத்தமோ, விரக்தியோ இல்லை. இந்த 14 பேர் பயணித்த மகிழ்ச்சியான வாகனத்தில் நானும் இணைந்திருக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் என் இதயத்தில் தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.

'லியோ' படத்தின் விமர்சனங்கள் பாதித்ததா? - லோகேஷ் கனகராஜ்!
'லியோ' படத்தின் விமர்சனங்கள் பாதித்ததா? - லோகேஷ் கனகராஜ்!...
அந்த தமிழ் இயக்குநர்களை பார்த்துதான் படம் பன்னனும்னு ஆசை வந்தது..
அந்த தமிழ் இயக்குநர்களை பார்த்துதான் படம் பன்னனும்னு ஆசை வந்தது.....
புதிய கேப்டன்.. விரைவில் அறிவிக்கப்படும் இந்திய டெஸ்ட் அணி..!
புதிய கேப்டன்.. விரைவில் அறிவிக்கப்படும் இந்திய டெஸ்ட் அணி..!...
உடலில் கெட்ட கொழுப்புகளை குறைக்க 5 எளிய வழிகள் !
உடலில் கெட்ட கொழுப்புகளை குறைக்க 5 எளிய வழிகள் !...
ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டால் அதை செய்யவே மாட்டேன் லோகேஷ் கனகராஜ்!
ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டால் அதை செய்யவே மாட்டேன் லோகேஷ் கனகராஜ்!...
Mother's Day : அம்மாவுக்கு இதய நோய்கள் வராமல் தடுக்க 5 வழிகள் !
Mother's Day : அம்மாவுக்கு இதய நோய்கள் வராமல் தடுக்க 5 வழிகள் !...
பூஜை அறையில் இருந்து கிளம்பிய தீ.. முதிய தம்பதியரை கொன்ற சோகம்..!
பூஜை அறையில் இருந்து கிளம்பிய தீ.. முதிய தம்பதியரை கொன்ற சோகம்..!...
இந்தியாவில் அறிமுகமான சாம்சங் கேலக்சி எஃப்56 5ஜி!
இந்தியாவில் அறிமுகமான சாம்சங் கேலக்சி எஃப்56 5ஜி!...
விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ட்ரெய்லரில் இதைக் கவனித்தீர்களா?
விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ட்ரெய்லரில் இதைக் கவனித்தீர்களா?...
சிவகார்த்திகேயன் உடன் இணையும் பிரபல மலையாள நடிகர்? இணையத்தில் வைர
சிவகார்த்திகேயன் உடன் இணையும் பிரபல மலையாள நடிகர்? இணையத்தில் வைர...
கொஞ்சம் கவனம் அவசியம்.. மீன ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்!
கொஞ்சம் கவனம் அவசியம்.. மீன ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்!...