Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Leo Movie : விஜய்யின் ‘லியோ’ படத்தின் விமர்சனங்கள் என்னைப் பாதித்ததா? மனம் திறந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

Lokesh Kanagaraj About Leo Criticism : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் நடிகர்கள் விஜய் முதல் ரஜினிகாந்த் வரை முன்னணி நடிகர்களுடன் படங்களில் பணியாற்றியுள்ளார். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் லியோ. இதில் நடிகர் விஜய் முன்னணி நாயகனாக நடித்திருந்த நிலையில், இந்த படத்திற்குப் பல விமர்சனங்கள் வந்தது. அதைப் பற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மனம் திறந்துள்ளார்.

Leo Movie : விஜய்யின் ‘லியோ’ படத்தின் விமர்சனங்கள் என்னைப் பாதித்ததா? மனம் திறந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!
விஜய் - லோகேஷ் கனகராஜ் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 11 May 2025 18:47 PM

கடந்த 2023ம் ஆண்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியான படம் லியோ (Leo). இந்த திரைப்படத்தில் நடிகர் தளபதி விஜய் (Thalapathy Vijay ) கதாநாயகனாக நடித்திருந்தார். விஜய்யின் 67வது திரைப்படமான லியோவில் அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்திருந்தார். இவர்கள் இருவரின் கூட்டணியில் பல ஆண்டுகளுக்குப் பின் இந்த படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது கடந்த 2023 அக்டோபர் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் விஜய் 2 கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். லியோ தாஸ் (Leo Doss) என்ற கதாபாத்திரத்திலும், பார்த்திபன் (Parthiban) என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இதில் நடிகர்கள் விஜய், திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் என பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படம் வெளியான போது கலவையான விமர்சனங்களைப் பெற்றுவந்தது.

இந்த படத்தின் கதைக்களம் பற்றியும், பாடல்கள் தொடர்பாகப் பல விமர்சனங்கள் எழுந்தது. பலரும் லியோ படத்தைக் குறை கூறி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், லியோ படத்திற்கு வந்த விமர்சனங்கள் குறித்தும், அது தன்னை பாதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். அதைப் பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

லியோ விமர்சனங்கள் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

அந்த நேர்காணலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் , “லியோ படத்தின் விமர்சனங்கள் என்னை மிகவும் பாதித்தது என்று நினைக்கிறார்கள். ஆனால், என்னைப் பெரிதாக அது பாதிக்கவில்லை. அந்த விமர்சனங்களை நான் எனது எச்சரிக்கையாகப் பார்க்கிறேன், ஒருவேளை லியோ படமானது முழுவதுமாக தோல்வியடைந்திருந்தது என்றால் நான் நிச்சயமாக வருத்தப்பட்டிருப்பேன். ஆனால் பிளாஷ்பேக் மட்டும்தான் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது, அதை நானும் சிறிது காலத்தில் உணர்ந்தேன்.

அதற்காகவும் நிறையக் காரணங்கள் இருக்கிறது, நான் அந்த படத்தில் சரியாக வேலை செய்திருக்கவேண்டும், அந்த படத்தின் 20 நிமிட விமர்சனங்களுக்குரிய காட்சிகள் படத்தின் வியாபார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கவில்லை. மேலும் அந்த படத்தை மறுபடியும் பார்த்தாலும், அந்த 20 நிமிட காட்சிகளைத் தவிரப் படம் மிகவும் அருமையாக இருந்ததாக அனைவரும் கூறுவார்கள், அதனால் லியோ படத்தின் விமர்சனங்கள் என்னை பெரிதும் பாதிக்கவில்லை என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஓபனாக பேசியுள்ளார்.

தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் இதுவும் உண்மைதான் என்று கூறி வருகின்றனர். உண்மையைச் சொல்லப்போனால் லியோ படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளைத் தவிரப் படம் முழுக்க விறுவிறுப்பாகவும், வித்தியாசமாகவும் இருந்தது என்றே கூறலாம். விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் மாஸ்டர் மற்றும் லியோ என இரு படங்களும் சூப்பர் ஹிட்டாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் விராட் கோலி..!
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் விராட் கோலி..!...
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தேதிய லாக் செய்த படக்குழு!
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தேதிய லாக் செய்த படக்குழு!...
இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் - இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த BLA
இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் - இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த BLA...
நெட் தேர்வு 2025: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..!
நெட் தேர்வு 2025: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..!...
ரத்த அழுத்தம் பிரச்னை.. தீர்வு தரும் பதஞ்சலியின் BPGRIT Vati
ரத்த அழுத்தம் பிரச்னை.. தீர்வு தரும் பதஞ்சலியின் BPGRIT Vati...
ஐபிஎல் பங்கேற்க வர மறுக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்..? என்ன காரணம்?
ஐபிஎல் பங்கேற்க வர மறுக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்..? என்ன காரணம்?...
ஊ சொல்றியா பாடலுக்கு நடனம் ஆடியதற்கு உண்மையான காரணம் இதுதான்...
ஊ சொல்றியா பாடலுக்கு நடனம் ஆடியதற்கு உண்மையான காரணம் இதுதான்......
சனி பகவான் கொடுக்கப்போகும் நன்மை.. இந்த 3 ராசிக்கு செம அதிர்ஷ்டம்
சனி பகவான் கொடுக்கப்போகும் நன்மை.. இந்த 3 ராசிக்கு செம அதிர்ஷ்டம்...
தியானத்திற்கு சென்ற பின் காணாமல் போன பத்மஸ்ரீ விருதாளர் சுப்பண்ணா
தியானத்திற்கு சென்ற பின் காணாமல் போன பத்மஸ்ரீ விருதாளர் சுப்பண்ணா...
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!...
தெலுங்கில் முன்னணி நடிகருடன் இணையும் நடிகை பிரியங்கா மோகன்...
தெலுங்கில் முன்னணி நடிகருடன் இணையும் நடிகை பிரியங்கா மோகன்......