Samsung Galaxy F56 5G : இந்தியாவில் அறிமுகமான சாம்சங் கேலக்சி எஃப்56 5ஜி.. சிறப்பு அம்சங்கள் என்ன?
Samsung Galaxy F56 5G Smartphone Launched in India | சாம்சங்க் கேலக்சி ஸ்மார்ட்போன்கள் மிகவும் பிரபலமானவையாக உள்ளன. 2025, ஏப்ரல் மாதம் சாம்சங் கேலக்சி எம் 56 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சாம்சங் கேலக்சி எஃப் 56 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது சாம்சங் (Samsung). சாம்சங் நிறுவனம் தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டிகளை வடிவமைத்து வழங்குகிறது. மொபைல், குளிர்சாதன பெட்டிகள் மட்டுமன்றி ஸ்மார்ட்போன்களையும் (Smartphone) சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. சாம்சங் நிறுவனம் இந்தியாவின் முன்னணி மொபைல் நிறுவனங்களில் ஒன்றாக உள்ள நிலையில், அவ்வப்போது தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஆன சாம்சங் கேலக்சி எஃப் 56 5ஜி (Samsung Galaxy F56 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் என்ன என்ன சிறப்பு அம்சங்கள் உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் அறிமுகமான சாம்சங் கேலக்சி எஃப் 56 5ஜி – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
சாம்சங்க் நிறுவனத்தில் கேலக்சி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் உலக அளவில் மிகவும் பிரபலமாக உள்ளன. இந்த நிலையில், அந்த வகை ஸ்மார்ட்போன் ஆன சாம்சங் கேலக்சி எஃப் 56 5ஜி இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்சி எஃப் 56 5ஜி
Galaxy F56 debuts in India as the SLIMMEST F-series smartphone😳
6.7-inch Super AMOLED+ display, 120Hz
Exynos 1480 SoC
50MP OIS + 8MP UW + 2MP Macro
12MP Selfie
5000mAh, 45W
OneUI 7, six years of OS updates
7.2mm slim, weighs 180 gramsRs 25,999 (8GB+128GB)
What are your… pic.twitter.com/ImFQP8Y77F
— mysmartprice (@mysmartprice) May 9, 2025
இந்தியாவில் 2025 ஏப்ரல் மாதம் சாசங் கேலக்சி எம்56 ஸ்மார்ட்போன் அறிமுகமான நிலையில், தற்போது சாம்சங் கேலக்சி எஃப் 56 5ஜி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி, 8ஜிபி, 12 ஜிபி ரேம் வேரியண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 128ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 12 மெகா பிக்சல் செஃல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 5000 mAh பேட்டரி மற்றும் 45 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. பச்சை மற்றும் ஊதா நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ரூ.27,999 என்ற ஆரம்ப விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.