Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vijay Sethupathi : விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ டிரெய்லரில் இதைக் கவனித்தீர்களா? அதுவும் அந்த நடிகரை பற்றியா?

Ace Movie Trailer : தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் ஏஸ். இந்த படமானது 2025, மே 23ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது. அந்த ட்ரெய்லரில் நடிகர் ஒருவரை பற்றிய குறிப்பு உள்ளது. அதைப் பற்றிப் பார்க்கலாம்.

Vijay Sethupathi : விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ டிரெய்லரில் இதைக் கவனித்தீர்களா? அதுவும் அந்த நடிகரை பற்றியா?
விஜய் சேதுபதியின் ஏஸ் ட்ரெய்லர் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 11 May 2025 17:07 PM

நடிகர் விஜய் சேதுபதியின் (Vijay Sethapthi) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் விடுதலை 2 (Viduthalai 2). இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான இந்த படமானது ஓரளவு வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து தமிழில் 3 படங்களில் நடித்து வந்தார். இவரின் நடிப்பில் வரும் 2025, மே 23ம் தேதியில் வெளியாகக் காத்திருக்கும் படம் ஏஸ் (Ace). இதை கோலிவுட் பிரபல இயக்குநர் ஆறுமுக குமார் (Aarumuga Kumar) இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி எதிர்பாராத அதிரடி ஆக்ஷ்ன் நாயகனாக நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாகப் புகழ் பெற்ற கன்னட நடிகை ருக்மினி வசந்த் (Rukmini Vasanth) நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ஆறுமுக குமார் இயக்க, 7 சிஎஸ் எண்டர்டைமென்ட் நிறுவனமானது தயாரித்துள்ளது. இதில் விஜய் சேதுபதியுடன் நடிகர் யோகி பாபுவும் (Yogi Babu) முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்.

இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள படத்தின் ட்ரெய்லர், இன்று 2025, மே 11ம் தேதியில் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீசிற்கு சில தினங்கள் மட்டும் உள்ள நிலையில், இந்த டிரெய்லரை இயக்குநர் அட்லி, சிவகார்த்திகேயன் , சிம்பு, விஷ்ணு விஷால் மற்றும் அருண் விஜய் எனப் பல பிரபலங்கள் இணைந்து வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இந்த ட்ரெய்லரில் மிக முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் நிச்சயமாகப் பார்த்திருப்பீர்களா என்று பார்க்கலாம்.

விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்பட ட்ரெய்லர் :

ஏஸ் படத்தின் ட்ரெய்லரில் இதைக் கவனித்தீர்களா ?

நடிகர் விஜய் சேதுபதியின் இந்த ஏஸ் படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் முக்கால் பாகம் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதைக்களமானது கேசினோ என்ற சூதாட்டத்தை வைத்து நகர்வதாகத் தெரிகிறது. அந்த சூதாட்டத்தை வைத்துத்தான் இந்த படத்தின் கதைக்களம் செல்கிறது என்று தெரிகிறது. தன்னிடம் இருந்து அபகரிக்கப்பட்ட பணத்தை ஹீரோ எப்படி மீட்கிறார் என்பது இதன் கதைக்களமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

மேலும் சூதாட்டத்துடன் அதிரடி காதல் மற்றும் காமெடி திரைப்படமாகவும் இருக்கும் என்று தெரிகிறது. இந்த படத்தில் கேஜிஎப் மற்றும் கங்குவா படத்தில் நடித்த முக்கிய நடிகர் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் ட்ரெய்லரின் இறுதியில் நடிகர் சிவகார்த்திகேயனின் ரெஃப்ரென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் புகைப்படம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது இந்த படத்தின் ட்ரெய்லரில் மிகக் கவனம் பெற்று வருகிறது.

தற்போது வரும் ஹீரோக்களின் படங்களில் மற்ற நடிகர்களின் ரெஃபரென்ஸ் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகப் பல ரசிகர்களையும் அந்த படத்தினை பார்க்கும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் கூறப்படுகிறது. சூர்யாவின் ரெட்ரோ முதல் அஜித்தின் குட் பேட் அக்லி வரை நடிகர்கள் பலரின் ரெஃப்ரென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவத்திற்கு பிரதமர் மோடி உத்தரவு..!
பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவத்திற்கு பிரதமர் மோடி உத்தரவு..!...
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் விராட் கோலி..!
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் விராட் கோலி..!...
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தேதிய லாக் செய்த படக்குழு!
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தேதிய லாக் செய்த படக்குழு!...
இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் - இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த BLA
இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் - இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த BLA...
நெட் தேர்வு 2025: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..!
நெட் தேர்வு 2025: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..!...
ரத்த அழுத்தம் பிரச்னை.. தீர்வு தரும் பதஞ்சலியின் BPGRIT Vati
ரத்த அழுத்தம் பிரச்னை.. தீர்வு தரும் பதஞ்சலியின் BPGRIT Vati...
ஐபிஎல் பங்கேற்க வர மறுக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்..? என்ன காரணம்?
ஐபிஎல் பங்கேற்க வர மறுக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்..? என்ன காரணம்?...
ஊ சொல்றியா பாடலுக்கு நடனம் ஆடியதற்கு உண்மையான காரணம் இதுதான்...
ஊ சொல்றியா பாடலுக்கு நடனம் ஆடியதற்கு உண்மையான காரணம் இதுதான்......
சனி பகவான் கொடுக்கப்போகும் நன்மை.. இந்த 3 ராசிக்கு செம அதிர்ஷ்டம்
சனி பகவான் கொடுக்கப்போகும் நன்மை.. இந்த 3 ராசிக்கு செம அதிர்ஷ்டம்...
தியானத்திற்கு சென்ற பின் காணாமல் போன பத்மஸ்ரீ விருதாளர் சுப்பண்ணா
தியானத்திற்கு சென்ற பின் காணாமல் போன பத்மஸ்ரீ விருதாளர் சுப்பண்ணா...
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!...