ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு முற்றுப்புள்ளி – குடியரசுத் தலைவர் ஒப்புதல் – சட்டமாகும் மசோதா

Online Games Law: இந்தியாவில் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டு செயலிகளுக்கு எதிராக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மசோதாவை தாக்க செய்திருந்தது. இந்த நிலையில் இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். விரைவில் இந்த மசோதா சட்டமாகிறது.

ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு முற்றுப்புள்ளி - குடியரசுத் தலைவர் ஒப்புதல் - சட்டமாகும் மசோதா

மாதிரி புகைப்படம்

Published: 

22 Aug 2025 21:44 PM

பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டு செயலிகளால் நாடு முழுவதும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டது. பலர் தங்களிடம் இருக்கும் பணம் அனைத்தையும் இழந்து தற்கொலை செய்து கொள்ளும் செய்திகள் நாளுக்கு நாள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து சமூகத்துக்கு பெறும் அச்சுறுத்தலாக மாறியது. பல நடுத்தர குடும்பத்து இளைஞர்களும் இந்த விளையாட்டினால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.  இதனையடுத்து மத்திய அரசு பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டை தடைசெய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சட்டமாகும் ஆன்லைன் விளையாட்டுக்கு எதிரான மசோதா

பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டு செயலிகளுக்கு தடை விதிக்கும் மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் படி இதனையடுத்து ஆன்லைன் விளையாட்டுக்கு எதிரான மசோதா சட்டமானால், இந்த விதிகளை மீறுவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இதில் உச்சகட்டமாக இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுக்கு எதிரான மசோதா விரைவில் ச்ட்டமாகவிருக்கிறது.

இதையும் படிக்க : பிரதமர், முதலமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாக்கள்.. நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் எதிர்க்கட்சியினர்..

ஆன்லைன் கேமிங்கிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

 

இதையும் படிக்க : இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணம்.. பிரதமர் மோடியை சந்தித்த சுபான்ஷு சுக்லா..

ரூ.20,000 கோடி இழப்பு

பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் சூதாட்ட செயலிகளினால் தங்கள் சேமிப்பை இழந்து, தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்தன. இந்த விளையாட்டுக்களால் ஒவ்வொரு ஆண்டும் ரூ.20, 000 கோடி இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆன்லைன் கேம்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

ஆன்லைன் கேமிங் தளங்களுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு மத்திய அரசு 28 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி வித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது விரைவில் இந்த ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு எதிரான மசோதா சட்டமாகவுள்ளது. இதன் படி, தடையை மீறும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 கோடி அபரராதம் விதிக்கப்படும்.  ஆன்லைன் கேமிங்கிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் பலரும் அடிமையாகி வருகின்றனர். அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் தங்களிடம் இருந்த சேமிப்புகளை இழந்து வருகின்றனர். குறிப்பாக அடித்தட்டு மக்கள் இதனால் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். இந்த நிலையில் பணம் வைத்து ஆன்லைன் கேமிங்கிற்கு தடை என்ற செய்தி மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.