Odisha Student Suicide Case: பேராசியர் மீது பாலியல் புகார்.. நடவடிக்கை இல்லாததால் தீக்குளித்த மாணவி உயிரிழப்பு.. ஒடிசாவில் வெடித்த போராட்டம்!

College Professor Harassment: ஒடிசாவில் உள்ள கல்லூரி பேராசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக ஒரு மாணவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த மாணவி இந்த தீவிர நடவடிக்கைக்கு முற்பட்டார். ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Odisha Student Suicide Case: பேராசியர் மீது பாலியல் புகார்.. நடவடிக்கை இல்லாததால் தீக்குளித்த மாணவி உயிரிழப்பு.. ஒடிசாவில் வெடித்த போராட்டம்!

மாணவர்கள் போராட்டம்

Published: 

15 Jul 2025 14:41 PM

ஒடிசா, ஜூலை 15 : ஒடிசாவில் (Odisha) கல்லூரி மாணவர் ஒருவர் தீக்குளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கல்லூரி பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் மாணவி புகார் அளித்துள்ளார். இருப்பினும் நடவடிக்கை எடுக்காததால், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி (Student Suicide Case) தீக்குளித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாணவி மூன்று நாட்களுக்கு உயிருக்கு போராடி வந்த நிலையில், 2025 ஜூலை 14ஆம் தேதியான நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் ஒடிசாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஒடிசாவில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராகுல் காந்தி கண்டனம்:

ஒடிசாவில் மாணவி உயிரிழந்தது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அரசு மீது கடும் கண்டனத்தை முன்வைத்துள்ளார். ஒடிசாவில் நீதிக்காக போராடும் ஒரு மகளின் மரணம் பாஜக அரசின் நேரடிக் கொலை. அந்த துணிச்சலான மாணவி பாலியல் சுரண்டலுக்கு எதிராக குரல் எழுப்பினார். ஆனால், நீதி வழங்குவதற்கு பதிலாக, அவர் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தப்பட்டார், துன்புறத்தப்பட்டார், அவமானப்படுத்தப்பட்டார். அவரை பாதுகாக்க வேண்டியர்வர்கள், அவரை உடைத்துக்கொண்டே இருந்தார்கள்.

ALSO READ: விமான விபத்து.. விசாரணை அறிக்கை பல கேள்விகளை எழுப்புகிறது.. ஏர் இந்தியா சுற்றறிக்கை!

ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவு:

எப்போதும் போலவே பாஜக அமைப்பு குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாத்து வந்தது. மேலும், ஒரு அப்பாவி பெண்ணை தீக்குளிக்க கட்டாயப்படுத்தியது. இது தற்கொலை அல்ல, இது திட்டமிட்டப்பட்ட கொலை. நாடு உங்கள் மௌனத்தை விரும்பவில்லை, பதில்களை விரும்புகிறது. இந்தியாவை சேர்ந்த பெண்ணுக்கு பாதுகாப்பும் நீதியும் தேவை” என்றார்.

என்ன நடந்தது..?

ஒடிசாவின் பாலசோரில் உள்ள ஃபக்கீர் மோகன் தன்னாட்சி கல்லூரியை சேர்ந்த 20 வயது மாணவி எய்ம்ஸ் புவனேஸ்வரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். 2025 ஜூலை மாத தொடக்கத்தில் தனது தலைமை மருத்துவர் தன் மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மாணவி குற்றம் சாட்டினார். கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த மாணவி, கல்லூரி வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருக்கு 90 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டன. முதலில் பாலசோர் மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கடந்த 2025 ஜூலை 12ம் தேதி அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் எய்ம்ஸ் புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

எய்ம்ஸ் புவனேஸ்வரில் உள்ள ஐசியுவில் சிறுநீரக மாற்று சிகிச்சை உட்பட அனைத்து மருத்துவ முயற்சிகளும் இருந்தபோதிலும், அவரை காப்பாற்ற முடியவில்லை. தொடர்ந்து, 2025 ஜூலை 14ம் தேதி அதாவது நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அந்த பெண் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

ALSO READ: கல்யாண விருந்தில் களேபரம்.. சிக்கன் 65 தராததால் ஆத்திரம்.. இளைஞர் படுகொலை!

மாணவியின் மரணம் குறித்து ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மஜ்ஹி இரங்கல் தெரிவித்ததோடு, இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் சட்டத்தின்படி கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அவரது குடும்பத்தினருக்கு உறுதியளித்தார்.. தொடர்ந்து, 2025 ஜூலை 15ம் தேதியான இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தார்.