பாஜக தேசிய தலைவருக்கு ஆசி வழங்கிய மகந்த் சுவாமி மகாராஜ் – வைரலாகும் படங்கள்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு குஜராத் மாநிலத்திற்கு நிதின் நபின் முதன் முறையாக வருகை தந்தார். அவர் காந்திநகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுவாமி நாராயண் அக்ஷர்தாம் ஆலயத்தில் மகந்த் சுவாமி மகாராஜை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.

பாஜக தேசிய தலைவருக்கு ஆசி வழங்கிய மகந்த் சுவாமி மகாராஜ் - வைரலாகும் படங்கள்

மகந்த் சுவாமி மகராஜிடம் ஆசிபெற்ற நிதின் நபின்

Published: 

21 Feb 2026 14:36 PM

 IST

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு குஜராத்திற்கு நிதின் நபின் முதன்முறையாக வருகை தந்தார். அவர் காந்திநகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுவாமி நாராயண் அக்ஷர்தாம் ஆலயத்தில் மகந்த் சுவாமி மகாராஜை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். பாஜக தேசிய தலைவராக பதவியேற்ற பிறகு நடைபெற்ற இந்த முக்கியமான பயணம் அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாக கவனம் ஈர்த்துள்ளது. இந்த சந்திப்பின் போது, பாஜகவின் குஜராத் மாநில தலைவர் ஜெகதீஷ் விஷ்வகர்மா, பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் மற்றும் குஜராத் மாநில அமைப்பு செயலாளர் ரத்னகர்ஜி உள்ளிட்ட மூத்த கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அக்ஷர்தாம் ஆலயத்தின் அமைதியான மற்றும் ஆன்மிக சூழலில் நடைபெற்ற இந்த சந்திப்பு அவர் சுவாமி மகாராஜ் மீது வைத்திருக்கும் பக்தி மற்றும் மரியாதை காட்டுவதாக அமைந்தது. மேலும், இந்த சந்திப்பின்போது நாட்டிற்கான சேவையில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என நிதின் நபின் மற்றும் பாஜக நிர்வாகிகளுக்கு மகந்த் சுவாமி மகாராஜ் ஆசீர்வாதம் வழங்கினார்.

மேலும், இந்தியாவின் அமைதி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் வளமான வளர்ச்சி தொடர்ந்து நிலைக்க வேண்டி சிறப்பு பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டன. நாட்டை முன்னேற்றும் பணியில் நேர்மை, கருணை மற்றும் தன்னலமற்ற தலைமைத்துவம் போன்ற மதிப்புகள் முக்கியமானவை என மகந்த் சுவாமி மகாராஜ் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு அரசியல் மற்றும் ஆன்மீக வழிகாட்டுதலின் இணைப்பை பிரதிபலிப்பதாக பார்க்கப்படுகிறது. சமூக ஒற்றுமை, பாரம்பரிய மதிப்புகள் மற்றும் முழுமையான சமூக முன்னேற்றத்திற்கான ஒருங்கிணைந்த முயற்சியை இந்த நிகழ்வு வெளிப்படுத்துகிறது. அக்ஷர்தாம் ஆலயத்தின் ஆன்மிக பின்னணியில் நடைபெற்ற இந்த நிகழ்வு, பொதுஜன வாழ்க்கையில் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளின் அவசியத்தை மீண்டும் நினைவூட்டும் வகையில் அமைந்தது.

Related Stories
பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த மருத்துவர்கள்.. 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிசத்திற்கு வந்த சம்பவம்!
டெல்லி செங்கோட்டை அருகே பயங்கரவாத தாக்குதல் திட்டம்: வெளியான அதிர்ச்சி தகவல்
தொழில்நுட்பத்தை மக்களுக்கு வழங்குவதில் பிரதமர் மோடி முன்னோடி.. சி.ஆர்.கேசவன் பேச்சு!
பிரியாணி உணவகங்களில் ரூ.70 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு… ஹதராபாத் பிரியாணி கடை விசாரணையை தொடர்ந்து அம்பலம்!
பச்சிளம் குழந்தையுடன் பொதுத்தேர்வு எழுத வந்த இளந்தாய்.. நெகிழ்ச்சிச் சம்பவம்!!
இலவசங்கள் வழங்கினால் மக்கள் வேலைக்கு செல்வார்களா? நிதி எங்கே கிடைக்கிறது? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!