Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் கவாய்.. யார் இவர்?

CJI BR Gavai : உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றுக் கொண்டார். தலித் சமூகத்தை சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதியாக கவாய் அறியப்படுகிறார். இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆறு ஆண்டுகள் பதவி வகித்தபோது, முக்கிய தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார். இதுவரை அவர் 300 தீர்ப்புகளை எழுதியும் இருக்கிறார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் கவாய்.. யார் இவர்?
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய்Image Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 14 May 2025 11:49 AM

டெல்லி மே 14 : உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் (CJI BR Gavai) பதவியேற்றுக் கொண்டார். தலைமை நீதிபதியாக கவாய்க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணா, 2025 மே 13ஆம் தேதியான நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில், கவாய் பதவியேற்றுக் கொண்டார்.  பதவியேற்புக்குப் பிறகு, தலைமை நீதிபதி கவாய்க்கு குடியரசுத் தலைவர் முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அமைச்சரவை உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவும் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து கூறினார்.  கவாய், 2025 நவம்பர் 23ஆம் தேதி ஓய்வுபெறும் வரை 6 மாதங்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிக்க உள்ளார்.

தலைமை நீதிபதியாக கவாய் பதவியேற்பு

1960ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி மகாராஷ்ரா அமரவாதியில் பிறந்த பூஷன் ராமகிருஷ்ண கவாய், மார்ச் 16, 1985 அன்று தனது வழக்கறிஞர் வாழ்க்கையை தொடங்கினார். 1987 ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை மும்பை உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். அதன்பிறகு, நாக்பூர் நகராட்சி, அமராவதி நகராட்சி மற்றும் அமராவதி பல்கலைக்கழகத்தின் நிலையான ஆலோசகராக பணியாற்றினார்.

அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 1992 முதல் ஜூலை 1999 வரை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் உதவி அரசு வழக்கறிஞராகவும் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 2000ஆம் ஆண்டில் நாக்பூர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 2003, நவம்பர் 14ஆம் தேதி மும்பை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற கவாய், 2005ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியானார்.

தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் கவாய்

#WATCH | Delhi: President Droupadi Murmu administers oath of office to Justice BR Gavai as the Chief Justice of India (CJI).

அதன்பிறகு, 2019ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார். அங்கு உச்ச நீதிமன்ற கடந்த ஆறு ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். அப்போது, அவர் சில முக்கிய தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார். அவற்றில் 2016ஆம் ஆண்டு மத்திய அரசின் பணமதிப்பிழப்பு முடிவை உறுதி செய்த தீர்ப்பு, தேர்தல் பத்திரத் திட்டம் செல்லாது, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தீர்ப்பு உள்ளிட்ட தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார். பிஆர் கவாய் சுமார் 300 தீர்ப்புகளை எழுதி இருக்கிறார்.

தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு, தலித் சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது நீதிபதியாக பிஆர் கவாய் அறியப்படுகிறார். மேலும், தலைமை நீதிபதி பதவியில் முதலில் அமருக்கு பௌத மதத்தைச் சேர்ந்தவராக கவாய் உள்ளார். மக்களின் அடிப்படை உரிமை, சட்ட உரிமைகளை பாதுகாப்பது, அரசியலைப்பு உள்ளிட்ட விவகாரத்தில் தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நவகைலாய தலங்கள்.. பாவம் தீர்க்கும் பாபநாதர் சுவாமி திருக்கோயில்!
நவகைலாய தலங்கள்.. பாவம் தீர்க்கும் பாபநாதர் சுவாமி திருக்கோயில்!...
20 நாட்களுக்கு பிறகு இந்தியாவிடம் ஒப்படைக்க ராணுவ வீரர்
20 நாட்களுக்கு பிறகு இந்தியாவிடம் ஒப்படைக்க ராணுவ வீரர்...
2 குழந்தைகளை கொன்ற பெற்றோர்.. கடைசியில் எடுத்த விபரீத முடிவு!
2 குழந்தைகளை கொன்ற பெற்றோர்.. கடைசியில் எடுத்த விபரீத முடிவு!...
பிரதீப் ரங்கநாதனின் ’டியூட்’ படத்தின் டைட்டில் என்னுடையது...
பிரதீப் ரங்கநாதனின் ’டியூட்’ படத்தின் டைட்டில் என்னுடையது......
இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் - அதிபர் டிரம்ப்
இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் - அதிபர் டிரம்ப்...
ஐபிஎல்லில் இந்த வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவது டவுட்! லிஸ்ட் இதோ
ஐபிஎல்லில் இந்த வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவது டவுட்! லிஸ்ட் இதோ...
"ஒன்றாக டின்னர் சாப்பிடுங்க" டிரம்ப் சொன்ன விஷயம்
திருநெல்வேலியில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!
திருநெல்வேலியில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!...
லவ்லி படத்திற்கும் ஈகா படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை...
லவ்லி படத்திற்கும் ஈகா படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை......
வாழ்க்கையை மாற்றும் கண் திருஷ்டி பிரச்னை.. கண்டறிவது எப்படி?
வாழ்க்கையை மாற்றும் கண் திருஷ்டி பிரச்னை.. கண்டறிவது எப்படி?...
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவை முன்கூட்டியே வெளியிட திட்டமா?
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவை முன்கூட்டியே வெளியிட திட்டமா?...