“மக்கள் நலனுக்காக பாடுபட்டுவர் ஜெயலலிதா”.. மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

PM Modi In Mann Ki Baat: டெல்லியில் பிப்ரவரி 16 முதல் 20 வரை நடந்து முடிந்த 'ஏஐ இம்பாக்ட் சமிட்' குறித்தும் பாராட்டி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இதன் மூலம் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பாரதத்தின் வியக்கத்தக்கத் திறன்களை உலகம் கண்டதாகத் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலனுக்காக பாடுபட்டுவர் ஜெயலலிதா.. மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

Updated On: 

22 Feb 2026 13:52 PM

 IST

டெல்லி, பிப்ரவரி 22: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறந்த தேசபக்தி உணர்வு கொண்டவர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் மாதம்தோறும் கடைசி வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன்படி, 131-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து புகழ்ந்து பேசினார்.

இதையும் படிக்க: PM Modi : எதிர்கால சந்ததியினருக்கு சரியான AI-ஐ விட்டுச் செல்வது நமது பொறுப்பு – பிரதமர் மோடி உரை

மக்கள் நலனுக்காக பாடுபட்டுவர் ஜெயலலிதா:

நம் தேசத்தில் சமூக நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் பாடுபட்டவர்கள் எப்போதும் மக்களின் நெஞ்சங்களில் நிலைத்திருக்கிறார்கள். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் அதில் ஒருவர். மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படும் தலைவர். பிப்.24-ம் தேதி அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. நான் தமிழகம் செல்லும் போதெல்லாம் மக்கள் அவர் மீது கொண்டுள்ள அன்பை கண்டு வருகிறேன்.

அவரது சேவை என்றும் நினைவில் இருக்கும்:

நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சர்களாக இருந்தபோது, ​​நல்லாட்சி உட்பட பல்வேறு தலைப்புகளில் விவாதித்தது உண்டு. அவரது சிந்தனை மிக தெளிவானதாக இருக்கும். அது அவரது குறிப்பிடத்தக்க பண்பு. பல ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் கொண்டாட்டத்தின் போது என்னை மதிய உணவுக்காக சென்னைக்கு அழைத்தார். அந்த அன்பான செயல் என்னால் என்றென்றும் மறக்க முடியாது. சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய சேவை என்றும் நினைவில் இருக்கும்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

AI சமிட் குறித்து பாராட்டு:

‘ஏஐ இம்பாக்ட் சமிட்’ குறித்துப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, இதன் மூலம் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பாரதத்தின் வியக்கத்தக்கத் திறன்களை உலகம் கண்டதாகத் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெற்ற இந்த மாநாடு, மனிதநேயத்தை மையமாகக் கொண்ட ஏஐ, உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் ‘புதுடெல்லி பிரகடனம்’ போன்ற நெறிமுறை கட்டமைப்புகளில் கவனம் செலுத்தியது. எதிர்காலத்தில் உலகம் ஏஐ-ன் ஆற்றலை எவ்வாறு பயன்படுத்தும் என்பதில் இந்த மாநாடு ஒரு திருப்புமுனையாகும். உலகத் தலைவர்களையும் தொழில்நுட்பத் தலைவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்குள்ள கண்காட்சியில் பாரதத்தின் பல கண்டுபிடிப்புகளை நான் அவர்களுக்கு விளக்கிக் காட்டினேன்,” என்றார்.

இதையும் படிக்க: வளர்ந்த இந்தியாவை நோக்கி மற்றொரு படி.. ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

உலகத் தலைவர்களைக் கவர்ந்த இரு கண்டுபிடிப்புகள்:

இந்த மாநாட்டின் போது உலகத் தலைவர்களைப் பெரிதும் கவர்ந்த இரண்டு தயாரிப்புகளைப் பிரதமர் குறிப்பிட்டார்: அமுல் அரங்கம்: கால்நடைகளைப் பராமரிப்பதிலும், பால் பண்ணைத் தொழிலை நிர்வகிப்பதிலும் ஏஐ தொழில்நுட்பம் எவ்வாறு பால் பண்ணைத் தொழிலாளர்களுக்கு உதவுகிறது என்பதை இது விளக்கியது. கலாச்சாரம் சார்ந்த தயாரிப்பு: நமது பண்டைய அறிவு, பாரம்பரியங்கள் மற்றும் புனித நூல்களை வருங்கால சந்ததியினருக்கு ஏற்பப் பாதுகாப்பதற்கான வழிகளை இது காட்டியது என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories
அபுதாபியில் இருந்து இந்தியாவுக்கு வயிற்றில் தங்கம் கடத்தி வந்த நபர்.. சுங்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!
இந்தியாவுக்கு வெளிநாட்டினர் எதற்காக சுற்றுலா செல்ல வேண்டும்… ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரின் வீடியோ வைரல்!
லிப்டில் சிக்கிய இரு குழந்தைகள்.. சாமர்த்தியமாக செயல்பட்ட சிறுமி.. அடுத்து நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!
பாஜக தேசிய தலைவருக்கு ஆசி வழங்கிய மகந்த் சுவாமி மகாராஜ் – வைரலாகும் படங்கள்
நண்பனின் மனைவியை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய நபர்.. அதிர்ச்சி சம்பவம்!
பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த மருத்துவர்கள்.. 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிசத்திற்கு வந்த சம்பவம்!
ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!