Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெரூமூச்சு விட்ட பாகிஸ்தான் மக்கள்.. அட்டாரி வாகா எல்லை திறப்பு.. மத்திய அரசு அதிரடி!

Attari Wagah Border : அட்டாரி வாகா எல்லையை மத்திய அரசு திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் மக்கள் இந்தியாவில் இருந்து வெளியேற, அட்டாரி வாகா எல்லையை மீண்டும் திறப்பதாக அறிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை பாகிஸ்தான் மக்கள் அட்டாரி வாகா எல்லை வழியாக செல்லலாம் என அறிவித்துள்ளது.

பெரூமூச்சு விட்ட பாகிஸ்தான் மக்கள்.. அட்டாரி வாகா எல்லை திறப்பு.. மத்திய அரசு அதிரடி!
அட்டாரி வாகா எல்லைImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 01 May 2025 13:13 PM

காஷ்மீர், மே 01: இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் மக்கள் அட்டாரி வாகா எல்லை (attari wagah border) வழியாக வெளியேறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது, பஹல்காம் தாக்குதலை (Pahalgam Terror Attack) தொடர்ந்து, அட்டாரி வாகா எல்லையை மத்திய அரசு மூடுவதாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில், தற்போது விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. எனவே, மறு உத்தரவு வரும் வரை பாகிஸ்தான் மக்கள் அட்டாரி வாகா எல்லை வழியாக செல்லலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2025 ஏப்ரல் 22ஆம் தேதி  ஜம்மு காஷ்மீர் பஹல்காமில்  பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

பெரூமூச்சு விட்ட பாகிஸ்தான் மக்கள்

இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதல் இந்தியா மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த தாக்குதல் இந்தியாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ரெசிஸ்டென்ஸ் பிரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது.  இருப்பினும், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு முக்கிய பங்கு இருப்பதாக இந்தியா குற்றச்சாட்டி உள்ளது. அதைத் தொடர்ந்து,   பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையை எடுத்தது.

அதில், ஒன்று தான், அட்டாரி வாகா எல்லையை மூடியது. 2025 ஏப்ரல் 30ஆம் தேதி அட்டாரி வாகா எல்லை மூடப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. 2025 ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் பாகிஸ்தானியர்கள் அட்டாரி எல்லை வழியாக செல்லலாம் எனவும்  தெரிவித்து இருந்தது.

அட்டாரி வாகா எல்லை திறப்பு

இதன்படியே, அட்டாரி வாகா எல்லை வழியாக  பாகிஸ்தான் மக்கள் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தான் மக்கள் வெளியேறும் வகையில்,  அட்டாரி வாகா எல்லையை திறப்பதாக  உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  அதாவது, ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பிறகு மூடுவதாக அறிவித்து இருந்த நிலையில், தற்போது நீடிக்கப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை பாகிஸ்தான் மக்கள் அட்டாரி வாகா எல்லை வழியாக செல்லலாம் என  அறிவித்துள்ளது. இதனால், பாகிஸ்தான் மக்கள் பெருமூச்சு விட்டனர். 2025 ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 30 வரை 926 பாகிஸ்தானியர்கள் தங்கள் நாட்டிற்கு சென்றுள்ளனர்.  இதில் தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் 55 பேர் அடங்குவர். அதே நேரத்தில், 1,841 பேர் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியுள்ளனர்.  எனவே, தற்போது வாகா எல்லை திறக்கப்படுவதால், அதிகமான பாகிஸ்தான் மக்கள் இந்தியாவில் இருந்து வெளியேறலாம். 40 ஆண்டுகளாக இங்கு வந்த மக்கள், கண்ணீர் மல்க இந்தியாவில் இருந்து வெளியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.